அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ராஜீவ் கொலை காரணகர்த்தாவான கே.பி.யை பாதுகாப்பதே காட்டிக் கொடுப்பு - ரணில் விசனம்

Go down

ராஜீவ் கொலை காரணகர்த்தாவான கே.பி.யை பாதுகாப்பதே காட்டிக் கொடுப்பு - ரணில் விசனம் Empty ராஜீவ் கொலை காரணகர்த்தாவான கே.பி.யை பாதுகாப்பதே காட்டிக் கொடுப்பு - ரணில் விசனம்

Post by Admin Thu Dec 09, 2010 2:05 am

இந்திய முன்னாள் பிரதம ராஜீவ் காந்தியின் படுகொலைக்குக் காரணமாக இருந்த புலிகளின் முக்கியஸ்தரான கே.பி.யை பாதுகாப்பதுடன் பயங்கரவாதத்தை விரட்டியடித்த பொன்சேகாவை சிறையில் அடைத்து வைத்திருப்பதே மிகப் பெரிய காட்டிக் கொடுப்பாகும் என்று எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்றுக் காலை ஏற்பட்ட சர்ச்சையின் போது அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் சவாலுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இலங்கைப் படையினரை ஒருபோதும் சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம். அத்துடன் கரு ஜெயசூரிய யுத்தக் குற்றங்கள் பற்றி எதுவுமே கூறியிருக்கவில்லை. நாம் படையினரை காட்டிக்கொடுக்க தயாராக இல்லை.

எனினும் ராஜீவ் காந்தியின் கொலைக்கு காரணமாக இருந்த கே.பி.யை பாதுகாத்துக் கொண்டு பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டுக் கொடுத்த சரத் பொன்சேகாவை சிறையில் வைத்திருப்பதே மிகப் பெரிய காட்டிக் கொடுப்பு என்றார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யப்பட வேண்டும் என கரு ஜயசூரிய எம்.பி கூறியதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி தொடர்பிலேயே அரசாங்கம் தனது விளக்கத்தை முன் வைத்தது.

கரு தனது பதிலையளித்தார்.

இதனையடுத்து அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, அஸ்வர் எம்.பி. ஆகியோர் எழும்பி கருத்து கூறுவதற்கு முயற்சித்தனர். சபாநாயகர் அதற்கு இடமளிக்கவில்லை. எனினும் தனது பெயர் கூறப்பட்டதாக கூறி ரணில் விக்கிரமசிங்க நேரத்தை கேட்டு விளக்கமளித்தார்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
»  தமிழ்நாட்டில் தங்கி இருந்த 'காட்டிக் கொடுப்பு' கருணா? - 'விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம்
» செந்தமிழன் சீமானை கொலை செய்ய திட்டம்?
» ஆயுதக்குழுக்களின் பிரச்சார இயந்திரமாக தற்போது போரூட் நிறுவனம்!: மக்கள் விசனம்
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை
» தேர்தலை ஒத்திவைப்பதால் அரசிற்கு எதிரான மக்கள் அதிருப்தியை மூடிமறைக்க முடியாது – ரணில். சர்வாதிகார ஆட்சி என ஜே.வி.பி. தலைவர் சாடல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum