அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

முடக்கத்தான் தோசை!

Go down

முடக்கத்தான் தோசை! Empty முடக்கத்தான் தோசை!

Post by thadcha Fri Mar 11, 2011 2:31 pm

தோசைகளில் பல வித வெரைட்டிகளை விரும்பும் மனசு, அதில் சத்துக்கள் நிறைந்திருந்தால் இன்னும் சந்தோஷத்தோடே சாப்பிடத் துடிக்கும். சத்தான கீரைகளை விரும்பி உண்டு ஆரோக்கியமாக வாழ ஆசையா? குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிட வேண்டுமா? குழந்தைகளும் பெரியவர்களும் அடம்பிடிக்காமல் சுவையாய் சாப்பிட இதுவே சிறந்த வழி!

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி - 1 கப்
முடக்கத்தான் இலை - 2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்

செய்முறை:

* அரிசியையும், வெந்தயத்தையும் ஊற வைத்து தோசை மாவுக்கு அரைப்பது போலவே அரைத்து, அதனுடன் முடக்கத்தான் இலையையும் நன்கு கழுவிப் போட்டு அரைத்து விடவும்.

* மூன்றையும் ஒன்றாகவே போட்டு அரைக்கலாம்.

* மிகவும் நைசாக முதல் நாள் இரவே அரைத்து வைத்து விடவும்.

* மறுநாள் தோசைக்கல்லில் தோசை போல வார்க்கவும்.

* இதற்கு தேங்காய் சட்னி, பூண்டுச் சட்னி - இரண்டுமே நன்றாக இருக்கும்.

இதன் சிறப்பு:

* வாத நோய் வராமல் தடுக்கிறது.

* பித்தத்தை சுத்தமாக அகற்றி விடுகிறது.

* சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள்.[You must be registered and logged in to see this link.]
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum