அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தற்கொலைப் படை தாக்குதலில் தப்பினார் பலுசிஸ்தான்

Go down

தற்கொலைப் படை தாக்குதலில் தப்பினார் பலுசிஸ்தான்  Empty தற்கொலைப் படை தாக்குதலில் தப்பினார் பலுசிஸ்தான்

Post by devid Thu Dec 09, 2010 9:30 pm

தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இதில் அவர் நூலிழையில் உயிர்தப்பினார்.

ஆனால் இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். முதல்வரின் பாதுகாப்புப் படை வீரர், 5 போலீஸôர் உள்பட 10 பேர் காயமடைந்தனர்.

பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவில் தனது வீட்டில் இருந்து பேரவைக்கு காரில் சென்று கொண்டிருந்தார் அஸ்லாம் ரெய்ஸôனி. அவருடன் பாதுகாப்புப் படை வீரர்களும் இரு காரில் சென்றனர்.

அஸ்லாமின் கார் அங்குள்ள சர்யப் என்ற இடத்தில் ரயில் தண்டவாளத்தை மெதுவாகக் கடந்த போது அங்கு காத்திருந்த தீவிரவாதி காரின் மீது கையெறி குண்டை வீசித் தாக்க முற்பட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்தக் குண்டு வெடிக்கவில்லை. இதையடுத்து அவர் அஸ்லமின் காரை நோக்கி பாய்ந்து சென்று மடியில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். ஆனால் அதற்குள் அஸ்லமின் கார் சற்று தூரம் சென்றுவிட்டது. அஸ்லமுடன் பாதுகாப்புக்கு சென்ற கார்கள் அருகில் தற்கொலைப் படை வீரர் வெடித்துச் சிதறினார்.

அதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். கார்களில் பயணம் செய்த முதல்வரின் பாதுகாப்பு வீரர், 5 போலீஸôர் உள்பட 10 பேர் காயமடைந்தனர். அந்தக் கார்களும் லேசாகச் சேதம் அடைந்தன.

காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வரின் மீதான தற்கொலைப்படை முயற்சி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் நிகழ்ந்த இடத்தை பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். அங்கு வேறு தீவிரவாதிகள் யாரும் பதுங்கியிருக்கிறார்களா என்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

தற்கொலைப் படை தாக்குதலில் தப்பினார் பலுசிஸ்தான்  Empty குற்றம் நிரூபிக்கப்பட்டால் ராசாவைத் தூக்கி எறிவோம்:

Post by devid Thu Dec 09, 2010 9:38 pm

அலைக்கற்றை விவகாரத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவைக் கட்சியில் இருந்து தூக்கி எறிவோம் என்று முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடங்கிய காலங்களில் அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்கிற விசாரணைக்கும் நாங்கள் தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

தில்லி, சென்னை, பெரம்பலூர் ஆகிய நகரங்களில் உள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை புதன்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதில்:

சி.பி.ஐ. சோதனைகள் நடைபெறுவது ஒன்றும் பெரிதாகப் பேசப்படுகின்ற விஷயம் இல்லை.

சி.பி.ஐ. சோதனை நடைபெற்றதை அவமானமாகக் கருதுகிறீர்களா?

அப்படி நினைக்கவில்லை, ஆனால் அவமானத்திலேயே ஊறியவர்கள் சிலர் நாட்டிலே இருக்கிறார்கள்.

கட்சியில் இருந்து ராசா ஓரங்கட்டப்படுவார் என்று சொல்லப்படுகிறதே?

அவருடைய குற்றம் நிரூபிக்கப்படவில்லை. நிரூபிக்கப்பட்டால் அதற்குப் பிறகு அவரைத் தூக்கி எறிவோம். அதுவரையில் நான் எதுவும் சொல்வதற்கு இல்லை. ராசா எந்தத் தவறும் செய்யவில்லை என திமுக நம்புகிறது. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுகிற வரையில் நாங்கள் ராசாவைக் கைவிடத் தயாராகவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டுக்குழு வேண்டும் என்பதைப் பற்றி?

அதைப்பற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பாஜக ஆட்சிக் காலத்தில் இருந்தே அலைக்கற்றை பிரச்னை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு கூட்டுக்குழு வேண்டுமென்று கோருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதில் என்ன?

நீங்கள் அதற்குத் தயாராக இருக்கிறீர்களா?

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடங்கியது முதல் அதற்குப் பிறகு நடைபெற்ற ஆட்சிக் காலங்களில் அந்த ஒதுக்கீடுகள் எப்படி நடந்தன என்று விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum