அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

டயானா, வேல்ஸ் இளவரசி

Go down

டயானா, வேல்ஸ் இளவரசி Empty டயானா, வேல்ஸ் இளவரசி

Post by Admin Sat Dec 11, 2010 3:29 am

வேல்ஸ் இளவரசி டயானா (Diana, Princess of Wales, இயற்பெயர்: பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 1, 1961 - ஆகஸ்ட் 31, 1997)வேல்ஸ் இளவரசர் சார்ல்சின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹென்றி (ஹரி) ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர்.

இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் இவர்களது திருமண வாழ்வு தொடக்கம் மணமுறிவு ஏற்படும் வரையில் ஊடகத் துறையில் அதிகம் பேசப்பட்டார். பாரிசில் 1997 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 இல் இவர் சாலை விபத்து ஒன்றில் கொல்லப்பட்டதை அடுத்து உலகெங்கும் இவருக்கு பெரும் அனுதாப அலை பெருகத் தொடங்கியது. நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்ட இவரது மரண விசாரணைகளின் இறுதி முடிவுகள் பதினொரு ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் 2008 இல் வெளியிடப்பட்டது. இதன்படி இவரது மரணம் டயானாவின் தானுந்து ஓட்டுனர் சாலை சட்ட விதிகளை மீறியமையினாலும், பப்பராசிகளின் செய்கைகளினாலுமே விளைந்தது எனத் தீர்ப்புக் கூறப்பட்டது

பட்டங்கள்

அதி மேதகு டாயானா பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூலை 1 1961 – ஜூன் 9 1975
த லேடி டயானா பிரான்செஸ் ஸ்பென்சர், ஜூன் 9 1975 – ஜூலை 29 1981
Her Royal Highness வேல்ஸ் இளவரசி, ஜூலை 29 1981 – ஆகஸ்ட் 28 1996
டயானா, வேல்ஸ் இளவரசி, ஆகஸ்ட் 28 1996 – ஆகஸ்ட் 31 1997


லண்டன்: இங்கிலாந்து இளவரசி டயானா திட்டமிட்டு கொலை செய்யப்பட்டதாக முன்னணி வழக்கறிஞர் கூறியுள்ளார்.

டயானாவுடன் பலியான தொழிலதிபர் டோடி பயாதின் குடும்பம் சார்பில் இந்த வழக்கில் வாதிட்ட மைக்கேல் மேன்ஸ்பீல்ட் என்ற முன்னணி வழக்கறிஞர் இந்தக் குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.

டோடி பயாதின் தந்தை முகம்மத் அல் பயாத் ஏற்கனவே இது கொலை தான் என்று நீண்டகாலமாகக் கூறி வருகிறார்.

தனது மகனுடன் இளவரசி காதல் கொண்டதால் அதை பொறுக்க முடியாமல் கொலை செய்துவிட்டதாகக் கூறி வருகிறார் அல் பயாத்.

இந் நிலையில் அவருக்காக இந்த வழக்கில் ஆஜராகி புலனாய்வும் செய்த வழக்கறிஞரும் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1997ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பாரிசில் நடந்த கார் விபத்தில் டயானாவும் பயாதும் பலியாயினர்.

இந்த வழக்கை நடத்திய மைக்கேல் கூறுகையில், இங்கிலாந்து ராஜ குடும்பத்தினர் மீது டயானா சந்தேகத்துடன் தான் வாழ்ந்தார். தன்னை அவர்கள் உளவு பார்ப்பதாக அஞ்சினார்.

இந்த அச்சத்தின் பின்னணியில் தான் இந்த சாவுகள் நடந்தன. இதனால் அவை விபத்தினால் ஏற்பட்ட மரணங்கள் அல்ல, நிச்சயம் கொலைகள் தான்.

உலகையே உலுக்கிய டயானாவின் மரணத்துக்கு, எதிர்பாராத விபத்துதான் காரணம் என்று பாரீஸ் போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்தது, இந்த விவகாரத்தில் மேலும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது.

விபத்தின்போது டயானாவின் கார் ஓட்டுநராக இருந்த பால் மீது வலுவான சந்தேகங்கள் எழுந்துள்ளன. விபத்து நடப்பதற்கு சில நாட்களுக்கு முன், பால் தனது வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பது பற்றி விசாரணை அறிக்கையில் ஒரு வரி கூட இடம் பெறாதது டயானா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பதை மேலும் உறுதிப்படுத்துகிறது
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum