அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி, 23 பேர் காயம்

Go down

அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி, 23 பேர் காயம் Empty அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி, 23 பேர் காயம்

Post by theepan Thu Apr 14, 2011 3:42 am

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடாவில் இன்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் பலியானதுடன் 23 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கன்ரர் ரக வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து குடை சாய்ந்ததால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அம்பாறையிலிருந்து சிலர் மேற்படி கன்ரர் வாகனத்தில் உல்லே பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி வரும் வழியிலேயே காஞ்சிரங்குடா சாகம வீதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
சாரதி திடீரென வாகனத்தின் பிறேக்கை அழுத்தியபோது அவ்வாகனம் சரிந்து விழுந்தது. இவ்வாகனத்தில் பயணம் செய்தவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது
» இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்களில் இந்தியா பாரிய பொறுப்பு வகிக்கின்றது: அமெரிக்கா
» கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 25 போ் காயம்
» அம்பாறையில் தமிழர் மகா சங்கத் தலைவர் மீது அமைச்சர் நவரட்னராஜா தாக்குதல் நடத்தியுள்ளார்
» அம்பாறையில் கப்பம் பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum