அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழத்தமிழருக்குச் செய்த வரலாற்றுத் துரோகங்கள்!

Go down

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழத்தமிழருக்குச் செய்த வரலாற்றுத் துரோகங்கள்!  Empty அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஈழத்தமிழருக்குச் செய்த வரலாற்றுத் துரோகங்கள்!

Post by kaavalan Mon May 02, 2011 4:24 pm

அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா ஈழத்தமிழர்களுக்கு இரண்டு வரலாற்றுத் துரோகங்களைச் செய்திருக்கின்றார். அவற்றிலொன்று யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில்; முள்ளிவாய்க்கால்ப் பகுதியில் நான்கு லட்சம் பொதுமக்கள் சிக்கிக் கொண்டிருப்பதாக அப்போது முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராகவிருந்த இமெல்டா சுகுமார் வெளிப்படுத்தினார்.
உலக உணவுத்திட்டத்தின் பதிவுகளின படி அங்கே சுமார் மூன்று லட்சத்தி இருபதாயிரம் பேர் பதியப்பட்டிருந்தார்கள். ஆகவே முன்று இலட்சத்தி முப்பதாயிரம் மக்கள் முள்ளிவாய்க்காலில் சிக்கிக் கொண்டிருப்பார்கள் என கூட்டமைப்பு வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

ஆனால் டக்ளசோ 70ஆயிரம் பேர் மட்டும்தான் அங்கிருப்பதாக ஜனாதிபதிக்கு மட்டுமில்லாமல் சர்வதேவ நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் தெரிவித்திருந்தார். என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இன்று ஐ.நா எமக்காக பேசிக்கொண்டிருக்கும் போது அது கூறுவதைப்போன்று மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என கூறியிருக்கின்றார். இது தன்னுடைய மக்களுக்கு அவர் செய்திருக்கின்ற துரோகம். பழி என்றே நாம் கூறுவோம் இவர்களின் பொய்யுரைப்புக்களை மறுதலிக்க உலகம் முழுவதும் சென்று நாங்கள் உண்மையைச் சொன்னோம்.

இந்தியாவிற்குச் சென்று சொன்னோம். இரசாயனக் குண்டுகள் பாவிக்கப்பட்டமை தொடர்பாகவும் இந்தியாவிற்குச் சொன்னோம். யுத்தம் முடிந்து யூன் மாதம் ஜனாதிபதியைச் சந்தித்தபோது எமது மக்களைச் சென்று பார்ப்பதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் அன்று நாங்கள் கூறிய தொகை இன்று நீங்கள் முகாம்களில் எடுத்த கணக்கிற்கு சரியாக வரும் எனக்கேட்டிருந்தோம் ஆனால் அவர் அதற்குப் பதிலளிக்காமல் புறந்தள்ளி விட்டார்.

எனவே ஒரு இன அழிப்பினை இனத்தின் நில அபகரிப்பினை முற்று முளுதாக ஒரு இனத்தின் அடையாளங்கள் தொலைக்கப்பட்ட விடயத்தை அப்படி நடக்கவில்லை எனக்கூறுவது எவ்வளவு துரோகத்தனம் என்பதை மக்கள் புரிந்து கொண்டாகவேண்டும். தமிழரசுக் கட்சியின் சார்பில் மேதினக் கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றும்போது இன்று இனப்பிரச்சினைக்கான தீர்வினை 13வது திருத்தத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுமாம். 13வது திருத்தத்தில் எதுவுமே கிடையாது. அது வெறும் உருவத்தோடு மட்டும்தானிருக்கின்றது.

அதில் கடைசியாகவிருந்த மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரமும் 18வது திருத்தத்தினால் எடுக்கப்பட்டு விட்டது. நாங்கள் இந்தியாவுடன் பேசியபோது கூட 13வது திருத்தம் தொடர்பாக அவர்கள் பேசியிருக்கவில்லை. எங்களுடைய அடிப்படைக் கொள்கைகளில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லாமல் பேசுங்கள் என்றே அவர்கள் எமக்குக் கூறினார்கள். அதற்குமேல் அரசாங்கம் கூட இது தொடர்பாக வாய்திறக்கவில்லை. ஆனால் இவர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கைக்கும் ஐ.நாவிற்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரமே ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்கம் நிராகரிக்க முடியாது. நிபணர்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதைப்போன்று ஈழத்தமிழர் மீதான மனிதபிமான மற்ற நடவடிக்கைகளுக்குப் பதிலளிக்க வேண்டும். அதற்குமேல் இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒப்பீட்டளவில் உலகத்தில் மற்றைய இனங்களை விடவும் தமிழர்கள் தங்கள் சுதந்திரமான வாழ்வுக்காக மிகப்பெரிய விலை கொடுத்திருக்கின்றார்கள். அத்தகைய இழப்புக்கள் அவலங்களுக்குப் பின்னாலும் தமது இலக்கினைத் தவறவிடாத கொள்கையிலிருந்து விடுபடாத மக்கள் கூட்டமாக தமிழர்கள் வாழந்து கொண்டிருக்கின்றார்கள்.

தொடர்ந்து அவர் உரையாற்றும்போது. உலகத்தின் ஒவ்வொரு நாடுகளிலும் மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும். அதனை மீறுவோருக்கு எதிராக ஐ.நா நடவடிக்கை எடுக்கும். இன்று இதுதான் மத்திய கிழக்கு நாடுகளில் நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றது.

மே மாதம் 16ம்,17ம்,18ம்,19ம் திகதிகளில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பாக நிபுணர்குழு அறிக்கை சமர்ப்பித்திருக்கின்றது. அதில் இலங்கை கொன்று குவித்தவற்றை மட்டுமல்ல புலிகள் செய்ததாக கூறப்படும் குற்றங்கள் தொடர்பாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

அது தெரியாத சிலர் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். ஆனால் ஒரு இயக்கத்திற்கு இருப்பதை விடவும் ஐ.நாவில் உறுப்புரிமை பெற்ற ஒரு அரசாங்கத்திற்கு பொறுப்புக்கள் அதிகம் உள்ளது. அவைதான் இங்கே அரசாங்கத்தினால் மீறப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழர்களுக்கொரு பொறுப்பிருக்கின்றது. பல ஆயிரக்கணக்கான உயிர்களையும் விலைமதிப்பற்ற சொத்துக்களையும் நாம் இழந்திருக்கின்றோம்.

இது உண்மையில் சுதந்திரமான வாழ்வுக்காக ஒரு இனம்கொடுத்திருக்கின்ற மிகப்பெரிய விலையாகவேயுள்ளது. ஆங்கிலத்திலேயொரு போராட்டவாதி குறிப்பிட்டுள்ளதைப்போன்று எந்த இனம் அதிகளவு துன்பத்தை தாங்குகின்றதோ அந்த இனம்தான் ஈற்றில் வெற்றி பெறுகின்றார்கள் என்று.

அதுதான் எங்கள் விடயத்திலும் நடக்கலாம். நாங்களும் அறுபது வருடங்கள் பல துன்பங்களை சுமந்திருக்கின்றோம். நாங்கள் அதற்குத் தகுதியானவர்கள். இந்த நிலையில் யாருடைய சலுகைகளுக்காகவும் எடுபடாத சமூகமாக நாம் மாறவேண்டும். ஒரு சிலருக்கு காசு கொடுத்து தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கின்ற ஐ.நாவிற்கு எதிரக திருப்பி விட சிலர் முயற்சிக்கின்றார்கள்.

அரசியல் ரீதியிலான போராட்டம் முடிந்து ஆயுதப்போராட்டம் முடிந்து தற்போது இராஜதந்திரப் போராட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. தமிழர்களின் அரசியல் உரிமைக்கான போராட்டம் தோற்கடிக்கப்பட்டு தமிழர்கள் தோற்றுப்போன ஒரு சமூகம் என பலர் பேசிக்கொண்டிருந்த நிலையில் தற்போது தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக கூட்டமைப்புடன் பேச வேண்டிய நிலையில் அரசாங்கம் இருக்கின்றதென்றால் அது போரின் புறத்தாக்கம் என்றுதான் கூறவேண்டும்.

இந்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு எவ்வளவிற்க்கு இராஜதந்திர ரீதியாக பயன்படுத்துகின்றது என்பதை பொறுத்தே மற்றய விடயங்கள் அமைகின்றன. அதில் நாம் தவறிழைக்க மாட்டோம்.

ஈழத்தமிழர் விடயத்தில் பிராந்திய நாடுகளில் இந்தியாவிற்குள்ள பங்குதான் அதிகம் அந்த வகையில் எமது பிரச்சினை தொடர்பில் இந்தியா இதய சுத்தியுடன் செயற்பட்டு பிராந்தியத்தில் தனக்குள் செல்வாக்கை எமது பிரச்சினைகளுக்கான தீர்வு விடயத்தில் கையாளும் என நாம் நம்புகின்றோம்.

ஐ.நாவினால் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலைமையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அரசாங்கம் சீனா, ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவைக் கேட்டிருப்பதாக அறிகின்றோம். அவர்களைப்போல் நாம் இந்தியாவிடம் பேசுவோம். அதற்குமேல் சந்தர்ப்பம் ஏற்பட்டால் நாமும் சீனாவுடனும் ரஷ்யாவுடனும் பேசுவோம்.

தமிழர்களின் உரிமைகளுக்காக போராடுபவர்கள் என்றவகையில் சர்வதேசத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக எல்லா நாடுகளுடனும் நாங்கள் பேச வேண்டிய தேவையிருக்கின்றது. அதில் இந்தியாவிற்கு அதிகளவில் பொறுப்பிருக்கின்றதென்பதை நாம் அடிக்கடி உணர்த்தி வருகின்றோம்.

எனவே தமிழர்கள் தம்மைத்தாம் ஆளும் நிலையை தோற்றுவிக்கும் வகையில் இந்தியா சரியானதொரு தீர்மானத்தை எடுக்கும் என நாம் நம்புகின்றோம்.

முன்னர் குறிப்பிட்டதைப்போன்று நாம் தோற்றுப்போன சமூகமல்ல. புலம்பெயர் நாடுகளில் எம்மவர்கள் பலர் பேசும் சக்தி பெற்றவர்களாகவுள்ளனர். டிசம்பர் மாதம் சபாநாயகரின் இல்லத்தில் ஜனாதிபதியை சந்தித்தபோது தெரிவித்திருந்தோம். நாம் எமது புலம்பெயர் உறவுகளை சந்திக்கப்போகின்றோம் என்று.

இந்த திசையில் தான் நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் அற்பசொற்ப சலுகைகளுக்காக நாம் எடுபடக்கூடாது. அரசாங்கம் எம்மை தெடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது. கடந்த வாரம் தந்தை செல்வநாயகத்தின் நினைவு நாளில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தர் கூறியிருந்தார் அரசாங்கம் தொடர்ந்து எம்மை ஏமாற்றுமானால் ஜனநாயக வழியில் மக்களைத் திரட்டிப் போராட்டங்களை நடத்துவோம். என்று
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
»  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தேடப்படும் குற்றவாளி: சென்னை உயர்நீதிமன்றில் தெரிவிப்பு
» வன்னி இறுதி யுத்தத்தில் பொதுமக்கள் எவரும் கொல்லப்படவே இல்லை! என்கிறார் அமைச்சர் டக்ளஸ்
» கிளிநொச்சியில் படையினர் ஏற்பாடு செய்த சிரமதானத்தில் ஆட்கள் பெருமளவில் பங்கேற்காததினால் தாக்கப்பட்ட கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர்
» டக்ளஸ் அமைச்சராக இருக்கலாம்! மாநகரசபை விடயங்களில் தலையிடக்கூடாது - த.கூட்டமைப்பு உறுப்பினர்கள் காட்டம்
» பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum