அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*விளம்பரத்தில் கவர்ச்சி ஸ்டில்; ஸ்வேதா மேனன் புகார்*~*

Go down

*~*விளம்பரத்தில் கவர்ச்சி ஸ்டில்; ஸ்வேதா மேனன் புகார்*~* Empty *~*விளம்பரத்தில் கவர்ச்சி ஸ்டில்; ஸ்வேதா மேனன் புகார்*~*

Post by Tamilkings Tue May 03, 2011 4:55 pm

விளம்பரத்தில் கவர்ச்சி ஸ்டில்; ஸ்வேதா மேனன் புகார்


*~*விளம்பரத்தில் கவர்ச்சி ஸ்டில்; ஸ்வேதா மேனன் புகார்*~* Swetha%20menon-reel-2

பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் 'அனஸ்வரம்', 'துபாய்', 'கீர்த்தி சக்கரா', 'பரதேசி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது ஸ்வேதா மேனனுக்கு கிடைப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நிமிடம் கை நழுவியது. தனக்கு விருது கிடைக்காததற்காக அதிருப்தி வெளியிட்டார். தற்போது 'கயம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழில் 'தாரம்' என்ற பெயரில் டப்பிங் ஆகிறது. இதில் ஸ்வேதா மேனன் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். கணவன் இறந்த பிறகு அவன் தம்பியை ஸ்வேதா மேனன் திருமணம் செய்துகொள்வது போல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கதைக்கு கேரளாவில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதில் ஸ்வேதா மேனன் ஆபாசமாக நடித்துள்ளதற்கும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ஸ்வேதா மேனனின் கவர்ச்சி ஸ்டில்லை கேரளாவில் உள்ள தனியார் கம்பெனியொன்று தனது விளம்பரத்துக்கு பயன்படுத்தியது. இல்லற சுகத்துக்கான மருந்து பற்றிய விளம்பரத்தில் அவர் படம் இடம் பெற்று இருந்தது. இதை பார்த்ததும் ஸ்வேதா மேனன் கொதித்தார். அந்த கம்பெனி மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து கம்பெனி உரிமையாளரை கைது செய்தனர். ஸ்வேதா மேனன் கவர்ச்சி படத்தை பயன்படுத்த 'கயம்' படத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போட்டு இருப்பதாக கம்பெனி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து தயாரிப்பாளரையும் போலீசார் தேடுகிறார்கள்.

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics
»  ஆபாசம்-நடிகை ஸ்வேதா மேனன் புகார்
» விளம்பரத்தில் ஸ்வேதா மேனனின் கவர்ச்சி படம்: தயாரிப்பாளர் மீது வழக்கு
» வவுனியா முகாம் அகதிகளுக்கான உணவுப்பொருட்கள் கடத்தப்படுவதாக புகார்
» பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மீதான புகார் விசாரணை ஆரம்பம்
» வாழைச்சேனை, முஸ்லிம் பாடசாலை மதிற்சுவரை உடைத்ததாக பௌத்த விகாரை நிர்வாகத்தின் மீது புகார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum