அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

*~*மே 11ஆம் தேதி விஜய் இசை விருதுகள்*~*

Go down

*~*மே 11ஆம் தேதி விஜய் இசை விருதுகள்*~* Empty *~*மே 11ஆம் தேதி விஜய் இசை விருதுகள்*~*

Post by Tamilkings Thu May 05, 2011 6:08 pm

மே 11ஆம் தேதி விஜய் இசை விருதுகள்


*~*மே 11ஆம் தேதி விஜய் இசை விருதுகள்*~* Vijay%20TV%20Award-reel%204

சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், சிறந்த இயக்குநர்கள், சிறந்த நடிகர்கள் என தமிழ் திரைத்துறையை கௌரவிக்கும் விதத்தில் 'விஜய் விருதுகள்' என்ற தலைப்பில் விருதுகளை வழங்கி வரும் விஜய் டிவி, தற்போது இசைத் துறையையும் கௌரவிக்க 'விஜய் இசை விருதுகள்' என்ற தலைப்பில் விருதுகளை வழங்கி இசைத் துறையை கௌரவிக்க இருக்கிறது. 2010ஆம் ஆண்டில் வெளியான பிரபலமான பாடல்கள், பிரபலமான பின்னணி பாடகர், பாடகி, பிரபலமான மெலடி பாடல், பிரபலமான டூயட் பாடல் என ஏராளமான பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. விஜய் விருதுகளைப் போலவே விஜய் இசை விருதுகளும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இசை கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் இசை விருதுக்கு தங்களது பங்களிப்பை செலுத்த விரும்பும் இசை பிரியர்கள் தங்களுக்கு பிடித்த பாடல்களை தேர்வு செய்து வாக்களிக்கலாம். வாக்களிக்க விரும்புபவர்கள் 505782760 என்ற தொலைப்பேசி எண்ணின் மூலமாகவும், [You must be registered and logged in to see this link.] என்ற இணையதளத்தின் மூலமாகவும் வாக்களிக்கலாம். அல்லது விஜய் இசை விருதுகள் நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதும் பிரத்யேகமாக சுற்றி வரும் மூன்று வாகனங்களின் மூலமும் வாக்களிக்கலாம். தமிழ்த் திரையுலகின் இசை வல்லுனர்கள் கலந்துகொள்ளும் இந்த விருது விழா வரும் மே 11ஆம் தேதியன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பின்னர் இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

Tamilkings
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum