அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

திருகோணமலை மீள்குடியேறிய மக்களுள் நால்வரை ஆயுதமுனையில் கடத்தல்

Go down

திருகோணமலை மீள்குடியேறிய மக்களுள் நால்வரை ஆயுதமுனையில் கடத்தல் Empty திருகோணமலை மீள்குடியேறிய மக்களுள் நால்வரை ஆயுதமுனையில் கடத்தல்

Post by priyanka Sun Dec 19, 2010 2:17 am

திருமலை மீளக்குடியேறிய மக்கள் தங்க வைக்கப்பட்ட முகாம்களில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு நான்கு பேர் ஆயுதமுனையில் கடத்தப்பட்டுள்ளனர்.

திருமலையில் மீளக்குடியேறிய தமிழ்க் கிராமங்களுக்கு சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாள மன்றக் குழுவிடம் உறவினர் அச்சத்துடன் விபரித்துள்ளனர்.

இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிளிவெட்டி சம்பூர் சேனைக்குடியிருப்பு மீளக்குடியேறிய மக்கள் தங்க வைக்கப்பட்ட முகாம்களில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு நான்கு பேர் ஆயுதமுனையில் கடத்தப்பட்டுள்ளனர்.

சிங்கராசா பிரபாகரன் வயது 31 ,சம்பூர், அமிர்தலிங்கம் தினேஸ்குமார் வயது 21,சம்பூர், யோகேந்திரம் திலகன் வயது 21 சேனையூர், கந்தப்பு துஜிதரன் வயது 22 சம்பூர் ஆகியோரை ஆயுதம் தாங்கிய பத்துப் பேர் கொண்ட குழுவினரால் பெற்றோர் உறவினர்களை அச்சுறுத்தி கடத்திச்சென்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா ,பொன் செல்வராசா ,பா. அரியநேந்திரன் ,எம்.சுமந்திரன் , சி .யோகேஸ்வரன் ,சி .சிறிதரன் ஆகியோரிடம் பெற்றோர் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் .

மீளக் குடியேறிய மக்களின் நிலைமைகளை கண்டறியும் நோக்கோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன் நாள் நாடாளமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கத்தின் தலைமையில் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட்ட பாடசாலை அதிபர்களான திரு அரசரத்தினம் , திரு .திருச்செல்வம் ஆகியோருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா ,பொன் செல்வராசா ,பா. அரியநேந்திரன் ,எம் .சுமந்திரன் , சி .யோகேஸ்வரன் ,சி .சிறிதரன் ஆகியோர் சம்பூர், குடாசேனை, சேனையூர், கட்டபறிச்சான் ,௬னித்திவு, நவரத்னபுரம், சூடைக்குடா, மருதநகர் போன்ற பாரம்பரிய தமிழ் கிராமங்களுக்கு இன்று சுற்றுப்பயணம் செய்தனர் .

மேற்படி கிராமங்களில் 3000 க்கு மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தற்காலிக கொட்டகைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான அடிப்படை வசதிகளே இன்னும் நிறைவு செய்யப்படவில்லை என்றும் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என்றும் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர்
தமிழ்வின்னுக்கு தெரிவித்தார்.

பாரம்பரிய தமிழ் கிராமமான மாலைதீவில் உள்ள அம்மன் ஆலயம் மற்றும் சிவன் கோவில் முற்றாக அழிக்கப்பட்டு. பிரமாண்டமான புத்த விகாரை நிறுவப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் . சிங்கள மக்களுக்கு எதுவித தொடர்புமற்ற இக்கிராமங்களில் திட்டமிட்ட முறையில் புத்தவிகாரைகள் அமைப்பது தமிழர்களின் வாழ்விடங்களை அபகரிக்கும் நோக்கம் தவிர வேறேதும் இல்லை எனவும் தெரிவித்தார்.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum