அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்துவதற்கு அல்ல! சாட்சியமளிக்கவே ஐ.நா.நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் – அரசாங்கம் நிபந்தனையுடன் அனுமதி

Go down

ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்துவதற்கு அல்ல! சாட்சியமளிக்கவே ஐ.நா.நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் – அரசாங்கம் நிபந்தனையுடன் அனுமதி Empty ஆணைக்குழுவுடன் பேச்சு நடத்துவதற்கு அல்ல! சாட்சியமளிக்கவே ஐ.நா.நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் – அரசாங்கம் நிபந்தனையுடன் அனுமதி

Post by priyanka Sun Dec 19, 2010 2:23 am

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும் நோக்கிலேயே நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, எதற்காக இலங்கைக்கு விஜயம் செய்கின்றது என்பது தொடர்பில் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்துகையிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த விஜயம் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் ஐ.நா நிபுணர் குழு இலங்கைக்கு விஜயம் செய்வதாக வெளியான தகவல்களை மறுத்துள்ள அமைச்சர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கும் நோக்கிலேயே இந்த விஜயம் இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.நிபுணர் குழுவுக்கு இலங்கை வர அரசாங்கம் அனுமதி

இலங்கையில் நடைபெற்றதாகக் கூறப்படு்ம் போர் குற்றங்கள் தொடர்பாக ஐ நா பொதுச் செயலர் பான் கி மூனுக்கு ஆலோசனை கூறுவதற்காக அமைக்கப்பட்ட மூன்று நபர் நிபுணர் குழு இலங்கை வருவதற்கு தான் அனுமதி அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை கூறியுள்ளது.

இலங்கைப் போரின் இறுதி கட்டத்தின் போது நடைபெற்றதாகக் கூறப்படும் போர் குற்றங்கள் பற்றி ஆராய கடந்த ஜூன் மாதம் ஐ நா பொதுச் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழு இலங்கைக்கு வர அரசு முன்பு அனுமதி மறுத்திருந்தது.

மேலும் போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க உள்நாட்டில் ஒரு குழுவை இலங்கை அரசு அமைத்தது. ஆனால் தற்போது இலங்கை அரசு, ஐ நா குழுவினர் இலங்கைக்கு வரலாம் என்றும் தனது ஆணைக் குழுவுடன் தமது ஆதாரங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

ஐ.நா. ஆணைக்குழுவுக்கு நிபந்தனையுடன் அனுமதி

ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு இலங்கை வருவதற்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளது.

கற்றுக் கொண்டப் பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை சந்திப்பதற்காக இந்த குழு இலங்கை வரும் என, ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இலங்கை வெளிநாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு, கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவை சந்திக்க இலங்கை வருவதற்கான இலங்கையின் விருப்பத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு தெரிவித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிபுணர்கள் குழு, கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவில் தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு மாத்திரமே இந்த அனுமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு, இலங்கை வந்து, கற்றுக் கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவை சந்தித்து தமது கருத்துக்களை மாத்திரமே முன்வைக்க முடியும். மாறாக மனித உரிமைகள் தொடர்பில் அல்லது ஆணைக்குழு தொடர்பில் உள்நாட்டில் கருத்து வெளியிடவோ, ஆணைக்குழுவிடம் இருந்து மனித உரிமைகள் மற்றும் யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளவோ முடியாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்ட வேளையில், இலங்கை அரசாங்கம் கொண்டிருந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.நா.நிபுணர் குழு பொன்சேகாவை சந்திக்க அரசு அனுமதி வழங்குமா? - ஐ.தே.க.கேள்வி
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
» பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கைக்கு எதிராகவே அறிக்கை சமர்ப்பிக்கும் - ஜாதிக ஹெல உறுமய
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
»  ஐரோப்பாவிலிருந்து புலி ஆதரவாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்கின்றனரா என்பது குறித்து விசாரணை?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum