அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

Go down

மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு Empty மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

Post by Admin Fri Dec 31, 2010 3:53 am

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக இன்று காலை மாத்திரம் 2லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் உறவினர்களின் வீடுகளிலும், பாடசாலைகள் மற்றும் கோவில்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேசத்தில் பெய்துவரும் கடும்மழை காரணமாக, பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக, பட்டிப்பளை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வவுணதீவு உன்னிச்சைக்குளத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக முல்லாமுனை தொடக்கம் ஆயத்தியமலை வரையிலான இரண்டு கிலோமீற்றர் பரப்புக்கு அதன் நீர் பரவியுள்ளது.

இதன் விளைவாக அந்த பகுதியில் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்பட்டுள்ளுடன், பல குடும்பங்கள் மாற்று முகாம்களில் தங்க வைக்கபட்டுள்ளதாக வவுணதீவு பிரதேச செயலகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே குளத்தின் அவசர கதவுகள் திறக்கப்படுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், அந்த பிரதேசத்தை சேர்ந்த மக்கள் முன்னதாகவே பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், குறித்த குளம் திறக்கப்படும் போது கடந்த காலங்களில் வெளியேறிய நீரை வருட, இந்த முறை அதிக நீர் வெளியேற்றப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில், நவகிரிகுளத்தின் அவசர கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக, போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயசிறீதர் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆனைகட்டியவழி, மேட்டுச்சேனை, காக்காச்சிவெட்டை, ரானமடு, விலாந்தோட்டம், நாவிதன்வெளி போன்ற கிராமங்கள் நீரிழ் மூழ்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் தொடர்ச்சியான மழை வீழ்ச்சி காரணமாக, அந்த மாவட்டத்தின் விவசாய காணிகள் பாரிய அளவில் பாதிப்படைந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக படுவான்கரை, பட்டிப்பளை, செங்கலடி, வாகரை போன்ற பகுதிகளின் வயல் நிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களின் விவசாயிகளுக்கு நிவாரணமாக மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகள் குறித்து எமது செய்திப்பிரிவு கிழக்கு மாகாண விவசாயத்துறை அமைச்சர் துறை நவரட்ணராஜாவிடம் வினவப்பட்டது.

நீரினை வடிந்து செல்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அவர், நாளைய தினம் ஏற்பட்டுள்ள இழப்புகள் குறித்து ஆராய்ந்து, பாதிப்படைந்தவர்களுக்கான நட்டஈடுகளை வழங்குவது குறித்த தீர்மானிக்கப்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச சபை பிரிவுகளும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துக்கு உலங்கு வானூர்தி ஒன்றையும் கப்பல் ஒன்றையும் வழங்கி வைத்துள்ளார்.

இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை, வவுனியா, திருகோணமலை, அனுராதபுரம் மற்றும் பொலனறுவை போன்ற மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக மூன்று லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 3 ஆயிரம் பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு Maddu_rain_01மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு Maddu_rain_02மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு Maddu_rain_03மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு Batti_rain_01மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு Batti_rain_02மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு Batti_rain_03மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு Batti_rain_04
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» அடைமழை, வெள்ளம், உணவுத் தட்டுப்பாட்டால் மீளக்குடியேறியோர் பெரும் அவலம்: நிவாரணம் வழங்குமாறு மாவை வேண்டுகோள்
» சட்டவிரோத குடியேற்றங்களால் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பு! - பிதற்றுகிறார் பீரிஸ்
» கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரி அறவீடு செய்வதனால் வடக்கு மக்கள் பாதிப்பு – சிறிதரன்
» மட்டக்களப்பு மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் வெள்ளத்தில்... 07 லட்சம் பேர் பாதிப்பு
» மட்டக்களப்பில் கைக்குண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum