அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

2011ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி- "ஏ.ஆர்.ரஹ்மான்"

Go down

2011ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி- "ஏ.ஆர்.ரஹ்மான்" Empty 2011ஆம் ஆண்டிற்கான நாட்காட்டி- "ஏ.ஆர்.ரஹ்மான்"

Post by devid Sat Jan 01, 2011 8:16 am

இரண்டாவது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் பவுண்டேஷனும், வேர்ல்ட் லைட் (ஆடியோ மீடியா நிறுவனம்) அமைப்பும் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட இசைத்துறையைச் சார்ந்தவர்களின் பிரத்யேக 2011ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை வெளியிட்டிருக்கிறது.
இந்த நாட்காட்டியின் மூலம் கிடைக்கும் வருவாயை ஏழை மாணவர்களின் படிப்பிற்காக செலவிடப் போகிறார்கள்.

இந்த பவுண்டேஷனின் மூலம் ஏழை மாணவர்களுக்கு உலகத்தரத்திலான கல்வியை கொடுப்பதே நோக்கமாகும்.

அதன் அடிப்படையில் இந்த நாட்காட்டியின் மூலம் நிதி திரட்டவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதை பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில் "இந்த பவுண்டேஷன் மூலம் சென்னையில் உள்ள மாநாகராட்சி பள்ளிகளைச் சார்ந்த 30 மாணவர்களுக்கு உலத்தரம் வாய்ந்த கே.எம். இசைப் பள்ளியில் இசை பயிற்சி கொடுக்கப்படுகிறது.

இந்த முப்பது மாணவர்களைக் காட்டிலும் இன்னும் அதிக எண்ணிக்கையில் மாணவர்களுக்கு இசை பயிற்சி கொடுப்பதே எனது லட்சியம்" என்றார்.

ரஹ்மான் பல வரிகளை எழுதியிருக்கும் இந்த நாட்காட்டியில் ஒன்று அவருடைய ஆழமான கடவுள் நம்பிக்கையை வெளிக்காட்டும் "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்ற தமிழ் வரியையும் எழுதியிருக்கிறார்.

இந்த நாட்காட்டியில் சின்மயி, பென்னி தயாள், சிவமணி, சுஜாதா, கார்த்திக், ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பிரபலமான பின்னணி பாடகர்கள் மற்றும் இசைக் கலைஞர்களுடைய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது. பிரபல புகைப்படக் கலைஞரும் ஆடியோ மீடியா நிறுவனத்தின் உயர்மேலதிகாரியுமான செல்வகுமார், இந்த புகைப்படங்களை எடுத்திருக்கிறார்.

devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum