அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ரஜினியுடன் மோதும் சோனு சூட்

Go down

ரஜினியுடன் மோதும் சோனு சூட் Empty ரஜினியுடன் மோதும் சோனு சூட்

Post by theepan Thu Feb 17, 2011 6:11 am

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் 'ராணா' படத்தில் நடிக்க இருக்கும் பிற நடிகர்கள் மற்றும் நடிகையர்களை பற்றி சமீபத்தில் தான் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்ற வார இறுதியில், ரஜினிகாந்த் மும்பை சென்றிருந்தார். அப்போது ரஜினிகாந்த்தும் இந்த படத்தோடு சம்பந்தப்பட்ட மற்றவர்களும் படத்தில் நடிக்கும், மற்ற கலைஞர்களின் தேர்வு இறுதி செய்யப்பட்டது.

தீபிகா படுகோனே இந்த படத்தின் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 'எந்திரன்' படம் வெளியான நேரத்தில், சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார் தீபிகா படுகோனே.

சந்தர்ப்பவசமாக, அவரையே இப்படத்தில், கதாநாயகியாக நடிக்க அழைத்தனர். மிகவும் சந்தோஷம் அடைந்த தீபிகா, கால்ஷீட் பிரச்சினை காரணமாக இறுதி முடிவு, கூறாமல் இருந்தார். இப்போது அவர் இந்த படத்தில் நடிப்பதாக ஒப்பு கொண்டுள்ளார்.

'ராணா' படத்தில் ரஜினிகாந்த்திற்கு 3 கதாபாத்திரங்கள். அதில் இளைய ரஜினியின் ஜோடியாக தோன்ற உள்ளார். 'ராணா' படத்தின் வில்லனும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சோனு சுட் (Sonu Sood) தான் இந்த படத்தின் வில்லன். இந்தி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில், பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில், 'தாபங்' என்ற இந்தி படத்திலும், தமிழில் வெளியான 'அருந்ததி' என்ற படத்தில் அவருடைய நடிப்பிற்கு மிகவும் புகழப்பட்டார். முக்கியமான தகவல் என்னவென்றால், சோனு சுட்டுக்கு, 'ராணா' படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரமாம். 'ராணா' படத்தின் ஷூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்குகிறது.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum