அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஏமனில் 5 வது நாளாக போராட்டம்: ஈரான் மற்றும் பஹ்ரைனில் பதற்றம்

Go down

ஏமனில் 5 வது நாளாக போராட்டம்: ஈரான் மற்றும் பஹ்ரைனில் பதற்றம் Empty ஏமனில் 5 வது நாளாக போராட்டம்: ஈரான் மற்றும் பஹ்ரைனில் பதற்றம்

Post by theepan Fri Feb 18, 2011 6:17 am

எகிப்தில் மக்கள் புரட்சி மூலம் அதிபர் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் ஈரான், பஹ்ரைன், அல்ஜீரியா மற்றும் ஏமன் நாடுகளில் அரசுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.
ஏமனில் அதிபர் அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக தலைநகர் சனாவில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கான பல்கலை மாணவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தலைநகர் சனாவில் உள்ள அதிபர் மாளிகை நோக்கிச் செல்லும் தெருக்களில் ஏகப்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் கம்பி வலைகள் குறுக்காக போடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஈரான் மற்றும் பஹ்ரைனிலும் அதிபர் ஆட்சிக்கு எதிராக மக்கள் எதிர் கட்சிகளின் ஆதரவுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். எகிப்து போராட்டத்தில் இறந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் நேற்று பேரணி நடத்த எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்தன. இதில் கலவரம் ஏற்படும் என்பதால் வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை மனாமாவில் நேற்று மூடப்பட்டிருந்தன.

அல்ஜீரியாவிலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இங்கு ஏற்படும் பதற்றம் காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த அவசர நிலை பிரகடனத்தை அந்நாட்டு மக்களின் எதிர்ப்புக்கு பணிந்து அரசு விலக்கிக் கொண்டது.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை மீனவர்கள் இந்திய மீனவர்களினால் சிறைப்பிடிப்பு
» சிங்கள அரசின் தமிழினவழிப்புக்கெதிரான அனைத்துலக மக்களவைகளின் போராட்டம்
» நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் கையெழுத்துப் போராட்டம் உத்தியோகபூர்வமாக தொடங்கியது!
» வெலிக்கடை சிறையின் பெண்கள் பிரிவில் பெருந்தொகையான மொபைல் போன்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது
» யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum