அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

மன்னிப்பு கேட்ட விமல்

Go down

மன்னிப்பு கேட்ட விமல் Empty மன்னிப்பு கேட்ட விமல்

Post by theepan Fri Feb 18, 2011 6:38 am

விஜய் டிவியில் ஒவ்வொரு ஞாயிரும் காலை 10 மணிக்கு ஒளிப்பராகி வந்த 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சி 50வது எபிசோட்டை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பங்குபெறும் இந்நிகழ்ச்சி, இனி வரும் வாரங்களில் ஞாயிறு மாலை 6 மணிக்கு புதுப்பொலிவுடன் ஒளிப்பரப்பாக உள்ளது.

வரும் ஞாயிறு மாலை ஒளிபரப்பாக உள்ள நிகழ்ச்சியில் சமீபத்தில் வெளிவந்து ஓடிகொண்டிருக்கும் 'தூங்காநகரம்' படத்தின் நாயகன் விமல் மற்றும் அப்படத்தின் இயக்குநர் கௌரவ் கலந்து கொண்டு 'தூங்காநகரம்' படத்தை பற்றியும், படப்பிடிப்பில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகள் பற்றியும் நகைச்சுவையுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

'தூங்காநகரம்' படப்பிடிப்பின் போதுதான் நடிகர் விமல் தனது முறைப்பெண்ணை வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதைப்பற்றி கூறிய விமல், தனது மாமாவிற்கு தனது பெண்ணை ஒரு நடிகருக்கு திருமணம் செய்து கொடுக்க விருப்பமில்லாமல் வேறு மாப்பிள்ளை தேட ஆரம்பித்ததாகவும், அதனால் வேறு வழியில்லாமல் அவசரமாக திருமணம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறினார்.

என்ன தான் திருமணம் செய்து கொண்டாலும், தனது மாமாவிற்கு தெரியாமல் திருமணம் செய்தது தவறு என்று தற்போது உணர்வதாக கூறிய விமல், அதற்காக மாமாவிடம் இந்நிகழ்ச்சியின் மூலமாக மன்னிப்பு கேட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் விமலையும், அவரது மனைவியையும் வாழ்த்தி புஷ்பவனம் குப்புசாமி பாட்டு பாடினார். நடிகர் டெல்லி கணேஷ், நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கும் 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சி, வரும் ஞாயிறு மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» மட். பொலிஸாரை படுகொலை செய்த குற்றத்திற்காக கருணா மன்னிப்பு கோர வேண்டும்: பிள்ளையான்
» ஐ.நா. வின் நிபுணர் குழுவை நாட்டுக்குள் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் விமல் வீரவன்ச
» உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை உற்சாகப்படுத்தும் பாடலை பாடியவர் மன்னிப்பு கோரினார்
» நிபுணர் குழுவுக்கு எதிராக உண்ணாவிரதம் ஆரம்பிக்கவில்லையா?: விமல் வீரவங்சவிடம் ஜனாதிபதி கிண்டலாகக் கேள்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum