அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐ லவ் யூ வை வித்தியாசமாக சொல்லும் தேநீர் விடுதி

Go down

ஐ லவ் யூ வை வித்தியாசமாக சொல்லும் தேநீர் விடுதி  Empty ஐ லவ் யூ வை வித்தியாசமாக சொல்லும் தேநீர் விடுதி

Post by Admin Sun Feb 20, 2011 6:40 pm

'பூ' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன்.
'சூச்சு சூச்சு மாரி...' யில் ஆரம்பித்து 'களவாணி' படத்தில் வரும் 'டம்ம டம்மா...' வரைக்கும் இவரது இசைக்கு மயங்காத செவிகளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அறிமுகமான குறுகிய காலத்திலேயே அனைவரையும் கவர்ந்த எஸ்.எஸ்.குமரன் தனது அடுத்த பரிமாணத்தையும் வெளிப்படுத்துகிற விதத்தில் திரைப்பட இயக்குநராகிவிட்டார்.

பீக்காக் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.அனுஷ்கா தேவி தயாரிப்பில் எஸ்எஸ்.குமரன் இயக்கும் புதிய படம் 'தேநீர் விடுதி'. இதில் ஆதித், ரேஷ்மி, கொடுமுடி, ஸ்வேதா, பிரபாகர், பெரிய கருப்ப தேவர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

பந்தல் நடும் தொழில் செய்யும் பையனுக்கும், பலசரக்கு கடை நடத்தும் பெண்ணுக்கும் காதல் வருகிறது. கடைக்கு எதிரில் இருக்கிற டீக்கடையில் இருந்துதான் காதலுக்கே பேஸ்மென்ட் போடுகிறார் ஹீரோ.

தமிழ்சினிமா வரலாற்றில் இப்படி ஒரு ஐ லவ் யூவை யாருமே சொல்லியிருக்க முடியாது. அப்படி ஒரு காட்சி வருகிறது படத்தில். தன் காதலை ஹீரோவும் சொல்ல மாட்டார் ஹீரோயினிடம். அதே மாதிரி ஹீரோயினும் தன் காதலை சொல்ல மாட்டார். ஆனால் இருவருமே ஒரு கட்டத்தில் ஐ லவ் யூ சொல்லிக் கொள்வார்கள். எப்படி என்பதை யாருமே யூகிக்க முடியாதபடி காட்சிபடுத்தியிருக்கிறார் எஸ்.எஸ்.குமரன்.

இசையமைப்பாளர் டைரக்ட் செய்த படம். குறைந்தது எட்டு பாடலாவது இருக்கும் என்று யாரும் நினைத்து விட முடியாது. படத்தில் இடம் பெறுவது மொத்தம் மூன்றே பாடல்கள்தான். அதுவும் ஒரு பல்லவி, ஒரு சரணத்தோடு முடிந்துவிடும் அந்த மூன்று பாடல்களும். ஏன் இப்படி என்று இயக்குநரிடம் கேட்டால், கதைக்காகதான் பாடல்களே தவிர, பாடல்களுக்காக கதை இல்லை. இந்த கதைக்கு இவ்வளவுதான் தேவைப்பட்டது. ரசிகர்கள் ஒரு பாடலுக்கு எழுந்து தம் அடிக்க போய்விட்டால், படத்தின் முக்கியமான திருப்பங்களை மிஸ் பண்ண வேண்டி வரும்.
ஐ லவ் யூ வை வித்தியாசமாக சொல்லும் தேநீர் விடுதி  Kumaran_002
அதாவது பாடல்கள் அத்தனையும் கதையோடு பின்னி பிணைந்தவை என்கிறார் எஸ்.எஸ்.குமரன். பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தபோது இந்த காட்சிகளை பார்த்த இசைக்கலைஞர்களும், டப்பிங் நேரத்தில் காட்சிகளை பார்த்த டப்பிங் கலைஞர்களும் கூட விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்களாம். அந்தளவுக்கு இது முழு நீள காமெடிப்படம் என்ற குமரன், இன்னொரு விஷயத்தையும் அழுத்தமாக சொல்கிறார்.

படத்தின் முதல் காட்சியிலேயே கதை ஆரம்பித்துவிடும். ஒரு காட்சி கூட தேவையில்லாததாக இருக்காது என்பதுதான் அது. குளோஸ் அப் விளம்பரத்தில் வரும் 'நெருங்கி வருவாய்...' என்ற பாடலை பாடிய சோனா மோகபத்ராவை முதன் முறையாக தமிழில் பாட வைத்திருக்கிறார் எஸ்.எஸ்.குமரன். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தன்னுடன் முதல் படத்திலிருந்து பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவரையும் மேடையில் ஏற்றி அவர்களை கவுரவித்தார் என்பதும் குறிப்பிட வேண்டிய செய்தி.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum