அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

லண்டனிலிருந்து நாடு திரும்பிய விக்கிரமபாகு கருணாரத்தின மீது விமான நிலையத்தில் தாக்குதல்: ஊடகவியலாளர்களுக்கும் காயம்

Go down

லண்டனிலிருந்து நாடு திரும்பிய விக்கிரமபாகு கருணாரத்தின மீது விமான நிலையத்தில் தாக்குதல்: ஊடகவியலாளர்களுக்கும் காயம் Empty லண்டனிலிருந்து நாடு திரும்பிய விக்கிரமபாகு கருணாரத்தின மீது விமான நிலையத்தில் தாக்குதல்: ஊடகவியலாளர்களுக்கும் காயம்

Post by Admin Wed Dec 08, 2010 1:14 am

லண்டனில் இருந்து நாடு திரும்பிய புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்தின மீது கட்டுநாயக்க விமான நிலையத்தில் தாக்குதல் முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆயினும் அவரை வரவேற்பதற்காக விமான நிலையம் சென்றிருந்த அவரது கட்சியின் ஆதரவாளர்கள் தமது தலைவர் மீது தாக்குதல் நடத்தியவர்களை தடுக்க முற்பட்ட போது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக விக்கிரமபாகு கருணாரத்தினவின் வருகையையொட்டி விமான நிலையத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். தடுக்க முயன்ற விமான நிலையப் பொலிசாரும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.

விமான நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் விமான நிலைய வாடகை வாகனங்களின் சாரதிகள் ஆகியோரே கூட்டாக இணைந்து இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வானூர்தி நிலையத்திற்கு வெளியே விக்கிரமபாகுவின் கட்சி உறுப்பினர்கள், சட்டவாளர்கள், மற்றும் ஊடகவியலாளர்கள் அவரை வரவேற்கக் காத்திருந்தவேளை, அங்கு சென்ற 20 முதல் 30 வரையிலான சிங்கள காடையர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

தமது தலைவர் மகிந்த ராஜபக்ச நாட்டை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்க, விக்கிரமபாகு நாட்டைப் பிரிக்க முயல்வதாகவும், துரோகி எனவும் கெட்ட வார்த்தைகளால் தூற்றியவாறு காடையர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக அங்கிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதியமைச்சர் சரத் குணரத்தினவின் ஆதரவாளர்களே விக்கிரமபாகு கருணாரத்தின உள்ளிட்ட ஏனையோர் மீதான தாக்குதலில் பங்குபற்றியதாக விமான நிலையத்தின் உயரதிகாரியொருவர் தமிழ் வின் செய்தியாளரிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.

தாக்குதல் காரணமாக காயமடைந்தோரில் விக்கிரமபாகுவின் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் பிரியந்த, அகில இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் சாந்த விஜேசூரிய, சிரச ஊடகவியலாளர் பிரேமலால் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சாந்த விஜேசூரிய தலையில் பலமாகத் தாக்கப்பட்டுள்ளார்.

காடையர்களின் தாக்குதலில் இருந்து விக்கிரபாகுவைக் காப்பாற்றும் முயற்சியில் அவரது கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டதால் அவர் மிக மோசமான தாக்குதலில் இருந்து காப்பாற்றப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிங்கள ஊடகர் ஒருவர் கூறினார்.

முன்னர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், தற்போதையை சபாநாயகருமான சமல் ராஜபக்சவின் கட்டுப்பாட்டில் வானூர்தி சேவை இருந்தது. தற்பொழுது வானூர்தி மற்றும் துறைமுக அமைச்சுக்கள் மகிந்த ராஜபக்சவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், மகிந்த குடும்பத்தின் ஆதரவாளர்களே வானூர்தி நிலையத்தில் அதிகளவில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் பணியாற்றும் காடையர்களே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாகவும், இதுவொரு திட்டமிடப்பட்ட தாக்குதல் எனவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் கருத்து வெளியிட்டிருக்கின்றனர்.

என்.எஸ்.எஸ்.பி கட்சியின் தலைவர் கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ஜயலத் ஜயவர்த்தன ஆகியோர் மகிந்தவிற்கு எதிரான பரப்புரையிலும், செயற்பாட்டிலும் லண்டனில் ஈடுபட்டிருப்பதாக சிங்கள இனவாத அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் கடந்த சில நாட்களாகக் கண்டனம் வெளியிட்டுவரும் பின்புலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விமான நிலையப் பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜயலத் ஜயவர்த்தன மற்றும் விக்கிரமபாகு கருணாரத்தின மீது பொலிசில் முறைப்பாடு: கைது செய்யுமாறு கோரிக்கை
» சவூதியிலிருந்து உடலில் கம்பிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்
» 20 ஆண்டுகளாக தேடப்பட்ட இலங்கை பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
» என் மகனை என்னிடம் ஒப்படையுங்கள்: சென்னை விமான நிலையத்தில் விஜயகுமாருடன் நடிகை வனிதா தகராறு ; இருவரும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்
» அம்பாறையில் தமிழர் மகா சங்கத் தலைவர் மீது அமைச்சர் நவரட்னராஜா தாக்குதல் நடத்தியுள்ளார்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum