அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத்தில் விவாதித்த கருத்துக்கள்

Go down

சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத்தில் விவாதித்த கருத்துக்கள் Empty சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத்தில் விவாதித்த கருத்துக்கள்

Post by priyanka Wed Dec 08, 2010 1:57 am

இன்று மின்வழு எரிசக்தி அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொள்வதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று அரசாங்கம் எல்லா இடமும் மின்சாரம் வழங்குவதாக அரசாங்கம் கூறுகின்றது. இதை பாராட்டுகின்றோம்.
வடக்கு கிழக்கு பகுதியில் மீள்குடியேற்றம் செய்த பகுதியில் மன்னுரிமை வழங்கப்பட வேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய படுவான்கரையில் பல கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. அத்தோடு பாடசாலைகளில் இன்று கணனி கல்வி மிகவும் மக்கியமானது. வீடகள் பாடசாலைகில் மின்சாரம் இல்லாமையில் கணனி துறையை பயன்படுத்துவதில் மாணவர்கள் சிரமமப்படுகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பலர் மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ள நிலையில் மின்மானிப்; பெட்டி (மின்சார அளவுமானி) இல்லை என கூறுகின்றனர். பின்னடித்துச் செல்கின்றனர். இதனால் அவர்கள் தற்செயலாக சட்டவிரோத மின்சாரத்தை பெற முயற்சிக்கின்றனர். ஆனால் இதை பிடிப்பதில் அக்கறை காட்டவதில் உள்ள மின்சாரசபை மின்னிணைப்பு வழங்குவதில் தாமதப்படுத்தக்கூடாது துரிதப்படுத்தல் அவசியம். பன்முகப்படத்தப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மின்சாரசபைக்கு நிதி ஒதுக்கினால் குறிப்பிட்ட பகுதிக்கு எங்களால் ஒதுக்கப்பட்ட நிதியில் அங்கு குறித்த காலத்தில் மின் இணைப்பு வழங்கப்படுவதில்லை. 2007ம் ஆண்டு பன்முகநிதி 2008இல் தான் முடிக்கப்பட்டது. 2010இல் ஒதுக்கப்பட்ட நிதியில் இன்னும் வழங்கப்படவில்லை.

பெற்றோலிய எரிபொருள் நிலையங்களை வடக்கு கிழக்கு மிள்குடியேற்ற பகுதியில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக மதுபாண நிலையங்கள் திறக்கப்படுகின்றது. இதை தடுத்து நிறுத்தவும். திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் அனல்மின் நிலையம் அமைக்கும் முயற்சி நிறுத்தப்படுவதால் அங்குள்ள மக்களின் 10000 ஏக்கர் காணி வழங்குமானது இருபோக காணி பாதிக்கப்படுகின்றது. அங்கு அதை அமைக்கும் திட்டத்தை நிறுத்த அரசு முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை பிரதேசத்தில் மீள்குடியேறிய மக்கள் யானைகளின் பெரும் தொல்லைகளுக்கு ஆளாகியுள்ளனர். பலர் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் அப்பகுதியில் மின்சாரம் இல்லாமையும் பெரும் குறைபாடாக உள்ளது. எனவே இப்பகுதிகளுக்கு விரைவாக மின்சாரம் வழங்கல் மிகவும் அவசியமாகும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அண்மையில் இளைஞர் பாராளுமன்றத்தின் தேர்தல் நடாத்தப்பட்டது. ஆனால் போட்டியிட்ட இளைஞர் யுவதிகளுக்கு இளைஞர் பாராளுமன்றம் என்றால் என்ன? எதற்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்று பெரும்பாலான இளைஞர்களுக்கு தெரியாது. அவர்கள் இவ்விடயமாக என்னிடமும் விரைவியுள்ளனர். இது சார்பாக தெளிவான விளக்கங்களை இளைஞர் யுவதிகளுக்கும் இளைஞர் சேவை அதிகாரிகளை உட்பட்;ட அனைத்து உத்தியோகத்தருக்கு விரைவாக வழங்குதல் நல்லதாகும். இவ் இளைஞர் பாராளுமன்றம் இளைஞர்களின் அரசியல் ஆளுமை திறன்களை வளர்த்தாலும் அவர்களின் எதிர்கால அரசியல் பொருளாதார மேன்பாடுகளுக்கு உதவக் கூடியதாக இருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் இளைஞர் மேன்பாட்டு நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட இளைஞர் படையாளி முன்னோடி இளைஞர்கள் நாட்டை வெற்றி பெறச் செய்யும் திறமசாலிகள் போன்ற இளைஞர் சேவை மன்ற திட்டங்களில் பயிற்சி பெற்ற இளைஞர்களில் பலர் எதுவித தொழிலும் இல்லாத நிலையில் மனவிரக்தியுடன் உள்ளனர். எனவே இங்கு இளைஞர் சார்பாக அமைக்கும் திட்டங்கள் அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கக் கூடியதாகவும் இருத்தல் அவசியமாகும். அத்துடன் முன்பு மேற்கூறப்பட்ட பயிற்சிகளை பெற்ற இளைஞர்களுக்கு ஏற்ற தொழில்வாய்ப்புக்களை பெறக்கூடிய வசதிகள் இளைஞர் விவகார அமைச்சு ஏற்படுத்த முன்வரவேண்டும் எனக்கேட்டுக் கொள்கின்றேன்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் இலங்கையில் பல தொழில் பயிற்சி நிலைகளை கொண்டிருந்தாலும் வடக்கு கிழக்கு பகுதியில் ஒரேயொரு தொழில்பயிற்சி நிலையம் புதுக்குடியிருப்பு மட்டக்களப்பில் இயங்குகின்றது. ஆனால் அது கட்டட வசதி உட்பட பல வழிகளில் பின்தங்கிய நிலையில் உள்ளது. இப்பயிற்சி நிலையத்தின் வசதிகளை பலதுறைகளிலும் அதிகரிக்க அரசு முன்வரவேண்டும்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒரு அதிகாரசபையாக இருப்பதால் ஓய்வுபெறும் போது ஓய்வூதியம் கிடைப்பதில்லை. ஆகவே அதிகாரசபையில் முதல் இடத்தில் இருப்பதனால் எதிர்காலத்தில் இதில் இருந்து ஓய்வு பெறுபவர்பகளுக்கு ஓய்வூதியம் கிடைக்கக் கூடிய வகையில் இளைஞர் விவகார அமைச்சு உரிய பகுதிக்கும் இதை உட்படத்துதல் அவசியமாகும். அத்தோடு கடமையாற்றுகின்ற இளைஞர் சேவை அதிகாரிகளுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலேயோ மோட்டார் வாகனங்களை வழங்குவதற்கு இளைஞர் விவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுவாக இளைஞர்களின் வேலையில்லாப் பிரச்சினை விரக்தியைத் தீர்ப்பதற்கும் அவர்களது உளவிரக்தியை தீர்ப்பதற்கும் ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமைப்பாடு தேசிய இளைஞர் சேவை மன்றத்திற்க உண்டு என்பதை தெரிவிக்கின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை அண்மையில் இளைஞர் விவகார அமைச்சர் அங்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகளை ஆராய்ந்து உடன் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிந்து முதலில் அதற்கு நன்றி தெரிவிக்கின்றேன். அங்கு ரு.ளு.யு அமைப்பில் இசைக்கருவிகளுக்கு வழங்கப்பட்ட பல இலட்சம் நிதிக்கான பொருட்களுக்கு என்ன நடந்தது என விசாரித்து முடிவுக்கு கொண்டு வருவீர்கள் என எதிர்பார்ப்பதுடன் மட்டக்களப்பில் Nலுளுஊ மாவட்ட காரியாலயம் அதற்கான நிலையான கட்டடத்தை சகல வசதியுடனும் ஏற்படுத்த வருமாறு இளைஞர் விவகார அமைச்சை வேண்டுகின்றேன். மேலும் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தில் உதவிப் பணிப்பாளர் வெற்றிடம் உள்ளது. இதற்கு அம்மாவட்டத்திலேயே நிரந்தர உதவிப் பணிப்பாளர் தரத்தில் உள்ளவர்களை நியமிக்க முன்வருமாறு கோருகின்றேன்.

இன்று நடைபெறும் குழுக்களின் விவாதவேளை அடியேனுக்கும் சுகாதாரம் சுதேச மருத்துவத்துறை சிறுவர் மகளீர் அலுவல்கள் சமூக சேவை சுற்றாடல் என்பற்றை உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூர் பழுகாமம் மகிழடித்தீவு தாண்டியடி நாவற்காடு சந்திவெளி வந்தாறுமூலை போன்ற வைத்தியசாலைகள் மகப்பேற்று வைத்தியசாலையாக உள்ளதால் இங்கு சுஆPஇ யுஆP தரத்தில் உள்ள ஒருவர்தான் வைத்தியராக இருக்கின்றார். இவர்கள் இரவில் அங்கு இருப்பதில்லை இதனால் மகப்பேற்றுக்கு வரும் கற்பிணிகள் உட்பட நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே இவ்வைத்தியசாலைக்கு ஆடீடீளு தரத்தில் உள்ள வைத்தியர்களையும் நியமிக்குமாறு வேண்டுகின்றேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரே ஒரு மத்தியரசின் போதானா வைத்தியசாலையில் பிரவச விடுதிக்கு செல்லும் கற்பிணித் தாய்மார்கள் அங்கு கடமையாற்றும் பெண் ஊழியர்களின் சொற்பிரயோகங்களால் பிரசவ வேதனையை விட இச்செயற்பாடால் மிகவும் துன்பப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் அமைச்சு கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாகாணசபையின் கீழ் இயங்கும் சகல வைத்தியசாலையிலும் வைத்திய பற்றாக்குறை உள்ளது. இவ்விடயமாக மாகாண சுகாதார அமைச்சின் கவனத்துக்கும் மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தாண்டியடி மகிழடித்தீவு நாவற்காடு துறைநீலாவணை வாகரை வந்தாறுமூலை சந்திவெளி போன்ற வைத்தியசாலைக்கு விரைவாக மேலதிக வைத்தியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் ஒழிப்பு என்ற போர்வையில் வறிய மக்களின் நிதிகள் சுரண்டப்படுகின்றது. எவ்வாறெனில் தமது திட்டம் சார்பான எவ்வித பொது அறிவித்தலும் இன்றி யுத்த காலத்தில் இடம்பெறும் சுற்றுவளைப்பு போன்று அக்கிராம வறிய மக்களை குப்பை கொட்டுகின்றார்கள் என்ற காரணத்தை காட்டி நீதிமன்றங்களில் நிறுத்தி பணம் வசூல் செய்கின்றனர். ஆனால் டெங்கு நோய் தடைக்கான மருந்துக்களே அதுசார்பான விழிப்பூட்டலோ மட்டக்களப்பில் மேற்கொள்ளப்படுவதாக இல்லை. இதனால் வறிய மக்கள் பெறும் வேதனையை எங்களிடம் தெரிவிக்கின்றனர்.

சுதேச வைத்தியம் சார்பாக சில விடயம் கூறவேண்டியுள்ளது. மட்டக்களப்பில் புதுக்குடியிருக்கில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதே போன்று வாகரை பட்டிப்பளை வெல்லாவெளி வவுணதீவு கரடியனாறு போன்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதியிலும் சகல வசதியுடனும் ஏற்படுத்த ஆவண செய்யவேண்டும். மட்டக்களப்பு போதான வைத்தியசாலையில் ஒரே ஒரு மாத்திரை ஏற்றும் லொறி உள்ளது. இது போதாது எனவே இன்னுமொரு லொறி வழங்கப்பட வேண்டும். இங்கு உள்ள 05 அம்புலன்ஸ் பழுதடைந்த நிலையில் பயன்படுத்துவதால் நோயாளர்கள் நலன் கருதி இன்னும் 02 அம்புலன்ஸ் வழங்கப்பட வேண்டும்.

சிற்றூழியர் 500பேர் இருக்க வேண்டிய வைத்தியசாலைகள் 320 பேர் உண்டு. இது போதாது எனவே மேலும் 100 பேர் விரைவாக மட்டக்களப்பில் நியமிக்கப்பட வேண்டும். 550 தாதியர் இருக்க வேண்டிய வைத்தியசாலையில் 330 பேர் உண்டு. எனவே மேலும் 200 தாதியரை நியமிக்க முன்வரவேண்டும்.

மருந்து மற்றும் திருத்த வேலைகளுக்கு ஒதுக்கப்படும் பணம் போதாது அத்தோடு ஒதுக்கும் பணத்தையும் வழங்க முன்வரவேண்டும். இங்கு பதிய நோயாளர் விடுதி வைத்தியர் விடுதிக்கு அனுமதி வழங்கியும் இன்னும் நிதி வழங்கப்படவில்லை. இதற்கு நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாந்தீவில் ஆரம்பிக்கப்பட்ட உடல் ஊனமுற்றவர்கள் நீண்டகால நோய் வாய்ப்பட்டவர்கள் மறுவாழ்வு மையத்தை அபிவிருத்தி செய்ய முன்வர வேண்டும். குறைந்த 100 மில்லியன் தேவை.

மாந்தீவு வைத்தியசாலை விலையறுவுடன் இணைக்கும் நீர்ப்பகுதிக்கு பாதை சேவை ஏற்படுத்த முன்வரவேண்டும். அத்தோடு இங்கு உள்ள விபத்துப்பிரிவு அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். பிரேத அறை மிகவும் பழமையானதால் 02 மாடி கொண்ட பிரேத அறை தாபிக்கப்பட வேண்டும். வைத்தியர்கள் அதிகரிக்க வேண்டும். வைத்தியர்களின் விடுதிகளை விரைவாக அமைத்து வழங்க வேண்டும்.

மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்ட வைத்தியசாலை சகல வசதியுடனும் புனரமைக்கப்பட வேண்டும். அங்குள்ள கதிர்வீச்சல் கருவிகள் பழுதடைந்துள்ளதால் புதிய கதிர்வீச்சல் கருவிகளை வழங்க வேண்டும். புற்றுநோய் பகுதிக்கு கடனா நாட்டு கொவோட் 60 கதிர்வீச்சல் இயந்திரத்தை பெற்றுக் கொடுக்க அரசு முன்வரவேண்டும். இந்நாட்டில் 10 கொள்வனவு செய்யப்பட்டது. பழுதுபார்க்கும் பராமரிக்கும் கம்பனி இங்கு உண்டு. சிறந்த தொழில் நுட்பத்தை கொண்டது. இங்குள்ள எக்ஸ்ரே பழுதடைந்த நிலையில் உள்ளது. புதிய எக்ஸ்ரே இயந்திரத்தை வழங்க முன்வரவேண்டும்.

கடந்த யுத்த சூழலால் வடக்கு கிழக்கு பகுதியில் பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தங்கள் அங்கங்களை இழந்துள்ளனர். ஆனால் வெளியிடப்படவில்லை. இவருக்கு என்ன விசேட திட்டம் உள்ளது என்பதும் வெளிப்படுத்தப்படவில்லை. எனவே சமூக சேவை அமைச்சு வடக்கு கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இளைஞரை ஓர் யுவதிகள் தொகையை வெளியிடுவதுடன் அவர்களின் வாழ்வை மேன்படுத்தக் கூடிய விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டும்.

வயோதிபருக்காக மாதாந்தம் வழங்கப்படும் 100.00 பணம் போதுமானதாக இல்லை. அவர்கள் போக்குவரத்துக்கே போதாது ஒரு சாப்பாட்டு பார்சல் கூட 110.00 எனவே ஒரு மாதத்திற்கு ஒரு நேர உணவை கொடுத்து பட்டியலை ஏன் நிரப்புகின்றீர்கள். தர்மம் செய்ய வேண்டும். வறியோருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் இப்பணத்தை 1000.00 ஆக அதிகரிக்குமாறு வேண்டுகின்றேன்.

வடக்கு கிழக்கில் கிட்டத்தட்ட 89000 (ஆயிரம்) விதவைகள் தற்போது உள்ளனர். இவர்களின் நலன்கருதி குறிப்பிட்ட தொகை பணத்தை விதவைகள் சுயதொழில் முயற்சிக்கு இந்தியா வழங்கவுள்ளதாக அறிகின்றேன். இந்நிதி கிடைக்கப்பட்டால் வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட விதவைகளின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

இன்று கிழக்கு மாகாணத்தில் சிறுவர் பராமரிப்பு இல்லங்களில் உள்ள சிறுவர் சிறுமிகளை குறைக்கும் நடவடிக்கையில் சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு பிரிவு செயற்படுகின்றது. இதனால் பெற்றோரை இழந்து பராமரிப்பாரற்ற பிள்ளைகள் பலர் பாதிக்கப்படுகின்றனர். யுனிசெப் சேவ்த சில்ரன் போன்ற சர்வதேச அமைப்புக்களிடம் நிதிகளை பெற்றுக் கொண்டு இச்செயற்பாடு நடைபெறுகின்றது. இதில் ஒரு ஆராய்வை சிறுவர் மகளீர் விவகார அமைச்சு மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கிடைக்கும் உதவிகளை தடுத்தல் அல்லது குறைத்தல் ஊசிதமானதல்ல.

மகளீர் விவகாரப் பிரதி அமைச்சர் அவர்கள் மகளீர் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். இதில் விதவைகள் வடக்கு கிழக்கில் 89 ஆயிரம் பேருக்கு மேல் உள்ளதால் இவர்களின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்ப இவ் அமைச்சுக்கு பெருந்தொகை நிதியை வழங்க அரசு முன்வர வேண்டும்

சிறுவர் இல்லங்களில் வாழும் பராமரிப்பற்ற சிறுவர்களை பராமரித்து வரும் இல்லங்களில் வாழும் பிள்ளைகளை குறைக்கும் நடவடிக்கையில் சிறுவர் பராமரிப்பு பாதுகாப்பு பிரிவினர் செயற்படுகின்றனர். ஆனால் வீதிகளில் தர்மம் பெரும் பிள்ளைகளின் வாழ்வாதாரத்தை கட்டி எழுப்புவதற்கோ 18 வயதுக்கு கீழ் வேலைக்கு அமர்த்தும் பிள்ளைகளின் மேன்பாடு கருதி நடவடிக்கை எடுப்பதற்கோ வீடுகளில் துன்பப்படும் சிறுவர்களை ஆராய்ந்து உதவுவதற்கோ இது உதவுவதாக இல்லை. பொதுவாக சிறுவர் பராமரிப்பு இல்லங்களை அடக்குவதற்கும் சேவை புரிபவர்களை கட்டுப்படுத்துவதற்கும் இவ் அதிகாரிகள் செயற்படுகின்றனர். இவ்விடயமாக இவ் அமைச்சு கூடிய கவனம் செலுத்த வேண்டும்.

நன்னடத்தை அதிகாரிகள் சிறுவர் இல்லங்களையும் அதன் நடாத்துணர்களையும் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கின்றதே தவிர வீதிகளில் தர்மம் பெற்றுத் திரியும் ஆலயங்களில் தர்மம் பெறும் வீடுகளிலும் கடையிலும் வேலைக்கு அமர்த்தப்படும் சிறுவர் சிறுமியர் பற்றி நடவடிக்கை எடுப்பதாக இல்லை. இன்று பல சிறார்கள் பெற்றோரை இழந்து பராமரிப்பாரற்ற நிலையில் வாடுகின்றனர். இவர்களுக்கு உதவும் திட்டத்தை அமைச்சு ஏற்படுத்துவதுடன் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு ஏற்ற ஆலோசனையை வழங்க வேண்டும்.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்பு தொகுதி களுவாஞ்சிக்குடி பிரதேசம் பெரும்பாலும் வெற்றிலை செய்கையுடன் தொடர்புபட்டது. ஆனால் இதற்கு தேவையான அலம்பல்களை வெட்டுவதில் தற்போது இத்தொழிலாளர்களை; பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். சுற்றாடல் அமைச்சு அலம்பல்களை வெட்டுவதற்கு தடை விதித்திருந்தாலும் குறிப்பிட்ட வெற்றிலை தொழிலை மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு பிரதேச செயலாளர் அனுமதியுடன் அலம்பல் கம்பு வெட்ட அனுமதிக்க வேண்டும் என கோருகின்றேன்.


சீ.யோகேஸ்வரன்
பாராளுமன்ற உறுப்பினர்
மட்டக்களப்பு மாவட்டம்
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum