அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கெவினோ பிரையன் சாதனையும், அயர்லாந்தின் சாதனையும்

Go down

கெவினோ பிரையன் சாதனையும், அயர்லாந்தின் சாதனையும் Empty கெவினோ பிரையன் சாதனையும், அயர்லாந்தின் சாதனையும்

Post by prasath Fri Mar 04, 2011 4:14 pm

இங்கிலாந்துக்கு எதிராக 328 ரன்கள் இலக்கை வெற்றிகரமாகத் துரத்தி அதிர்ச்சியளித்ததன் மூலம் அதிரடி வீரர் கெவினோ பிரைன் 50 பந்துகளில் அதிவேக சதம்..
..எடுத்து உலகக் கோப்பை கிரிக்கெட்டின் அதிவேக சத நாயகன் என்ற உலகச் சாதனையை நிகழ்த்தினார்.

அயர்லாந்து அணி 328 ரன்களை துரத்தி வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன் துரத்தலிலும் உலகச் சாதனை படைத்தது.

1992ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இலங்கை 313 ரன்களை துரத்தி வெற்றி பெற்றதே இதுவரை சாதனையாக இருந்தது.

தனிநபர் சாதனையில் 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அவுஸ்திரேலிய அதிரடி மன்னன் மேத்யூ ஹெய்டன் 66 பந்துகளில் அடித்த சதத்தை கெவினோ பிரைன் முறியடித்து உலகச் சாதனை புரிந்தார்.

ஆண்டர்சனின் பந்தை பிரைன் அடித்த சிக்சர் 102மீ வரை சென்றது உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நீண்ட தூர சிக்சராகும்.

111/5 என்ற நிலையிலிருந்து பிரைனும், கியூசாக்கும் இணைந்து 17 ஓவர்களில் 162 ரன்களைக் குவித்ததும் புதிய உலக கிண்ண சாதனையாகும்.

பேட்டிங் பவர் பிளேயில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் குவித்தது இரண்டாவது மிகப் பெரிய சாதனையாகும். முன்னர் பாகிஸ்தான் கென்யாவுக்கு எதிராக பவர் பிளேயில் 70 ரன்கள் குவித்துள்ளது உலகக் கோப்பை பவர் பிளே சாதனையாகும்.

ஒட்டுமொத்த ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் 5 பேட்ஸ்மென்கள் மட்டுமே அதிவேக சதம் எடுத்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் அப்டிரி, பவுச்சர், லாரா, சனத் ஜெயசூரியா, தற்போது கெவினோ பிரைன் இணைந்துள்ளார்.

டெஸ்ட் விளையாடும் அணிக்கு எதிராக டெஸ்ட் விளையாடாத அணி எடுத்துள்ள ரன் எண்ணிக்கையிலும் அயர்லாந்து சாதனை புரிந்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தில் மொத்தமாக 656 ரன்கள் குவிக்கப்பட்டது, 3-வது பெரிய ரன் எண்ணிக்கையாகும்.
கெவினோ பிரையன் சாதனையும், அயர்லாந்தின் சாதனையும் Kevin_o_brien001கெவினோ பிரையன் சாதனையும், அயர்லாந்தின் சாதனையும் Kevin_o_brien001
prasath
prasath
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum