அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அமெரிக்க தூதரகத்தில் எதுவித வீசாவுக்கும் விண்ணப்பிக்கவில்லை – பிரதியமைச்சர் முரளிதரன்

Go down

அமெரிக்க தூதரகத்தில் எதுவித வீசாவுக்கும் விண்ணப்பிக்கவில்லை – பிரதியமைச்சர் முரளிதரன்  Empty அமெரிக்க தூதரகத்தில் எதுவித வீசாவுக்கும் விண்ணப்பிக்கவில்லை – பிரதியமைச்சர் முரளிதரன்

Post by kaavalan Sat Mar 05, 2011 5:24 am

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனக்கு வீசா வழங்க மறுத்துள்ளதாக நேற்று வெளியான தகவலில் எந்தவித உண்மையும் இல்லையென மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆணழகன் பிரச்சன பீரிஸ்சுடன், பிரத்தியேக செயலாளர் ஆகியோருடன் இணைந்து அமெரிக்கா செல்ல கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் எந்தவித வீசாவுக்கும் தான் விண்ணப்பிக்கவில்லையெனவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம் காரணமாக அப்பகுதியில் மக்கள் பலத்த கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த நிலையில் அம்மக்களுக்குரிய மனிதாபிமான பணிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மட்டக்களப்பில் இருந்து பணியாற்றி வருகின்றேன்.

மக்களின் தேவைகளை இப்பகுதியில் இருந்து தெரிந்து சேவைசெய்ய வேண்டும் என்பதற்காக சிலவேளைகளில் பாராளுமன்ற அமர்வுகளில் கூட கலந்துகொள்ள முடியாத நிலையில் கடமையாற்றி வருகின்றேன்.

இவ்வாறான நிலையில் இவ்வாறான உண்மைக்குப் புறம்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடும்போது பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது மக்கள் இன்று பாரிய நெருக்கடிகளை சந்தித்துவரும் இந்தவேளையில் அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகளை பிரஸ்தாபிக்காமல் இவ்வாறான ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துவது வேதனையளிப்பதாகவுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புபட்ட செய்தி: பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அமெரிக்க வீசா மறுக்கப்பட்டுள்ளது
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum