அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

அழகு குறிப்புகள்:'டை' அடித்துவிட்டுக் குளிக்கலாமா

Go down

அழகு குறிப்புகள்:'டை' அடித்துவிட்டுக் குளிக்கலாமா Empty அழகு குறிப்புகள்:'டை' அடித்துவிட்டுக் குளிக்கலாமா

Post by thadcha Sat Mar 05, 2011 8:24 pm

கூடுமானவரை ஹேர் டையை முதன்முதலில் உபயோகிக்கையில், அழகு நிலையங்களில் போடுவது நல்லது. பாலிமர் டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். அது தானாகவே பரவிக்கொள்ளும். அநேகம்பேர் ஹேர் டைக்கான பிரஷை உபயோகிக்கிறார்கள். பிரஷில் டையை எடுத்து தட்டையாகவே போடுகிறார்கள். அப்படிப் போடுவது முறையல்ல. பிரஷ் உபயோகப்படுத்துகையில் காற்று உள்ளே போகாது. எவ்வளவுக்கெவ்வளவு காற்று முடியினுள் செல்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரஷில் போடும்போது காற்று உள்ளே செல்லும்படி, முடியை அவ்வப்போது தூக்கி விட்டுக்கொண்டு போட வேண்டும். தலையை ஒட்டி அழுத்தமாக டை போடுவதை விட்டு இருபக்கமும் சீராகப் போட வேண்டும்.

சிலர் ஹேர் டையைப் போட்டுவிட்டு அதிக நேரம் வைத்திருப்பார்கள். சிலர் அப்படியே வெளியிலும் அலைவார்கள். சிலர் மறுநாளோ, அதற்கு மறுநாளோ தலைக்குக் குளிப்பார்கள். பெரும்பாலும் ஆண்களே இந்தத் தவறைச் செய்கிறார்கள். இது மிகவும் தவறான முறை. ஹேர் டை பாக்கெட்டுகளில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதன்படியே செய்ய வேண்டும். (15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை வைத்திருக்கலாம்.)

தலையை அலசும்போது தரமான ஷாம்புடன் கண்டிஷனரும் அவசியம் போட வேண்டும். கண்டிஷனர் உபயோகப்படுத்தவில்லையெனில் டை முடியைச் சொர சொரப்பாகி விடும். அடிக்கடித் தலைக்குக் குளித்தால் டை மறைந்து, முடி வெளுத்து விடும் என்பதற்காகச் சிலர் அடிக்கடி தலைக்குக் குளிக்க மாட்டார்கள். எண்ணெயும் வைக்க மாட்டார்கள். இது மிகவும் தவறானது. சரியான பராமரிப்பைத் தலைமுடிக்குக் கொடுக்கவில்லை எனில் முடி கொட்ட ஆரம்பிக்கும்.

எவ்வளவுக்கெவ்வளவு டை போடுவதைத் தள்ளுகிறோமோ அல்லது தவிர்க்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் ஹேர்டை உபயோகிக்க வேண்டும் அல்லது முக்கியமாக வெளியில் செல்லும் போது போடலாம்.

கண் புருவத்தின் மீது எக்காரணத்தைக் கொண்டும் டையைப் போடக் கூடாது.

ஆண்களில் சிலருக்கு மீசை மட்டும் வெள்ளை வெளேர் என்றிருக்கும். அதற்காகத் தற்பொழுது பிரஷுடன் சேர்ந்த டை வந்துள்ளது. மீசையை ட்ரிம் செய்யும்போது பிரஷ் செய்து டை போட்டுவிடலாம்.

தற்பொழுது 'பெர்மனென்ட்' டை வந்திருக்கிறது. முடி இருக்கும் இடத்தில் பெர்மனென்ட் டையைத் தடவும்போது அப்படியே இருக்கும். ஆனால் முடி புதிதாக வளர்கிற இடத்தில் வெள்ளையாக இருக்கும். எனவே அதற்குத் தகுந்தாற்போல் டையைப் பூசிக்கொள்ள வேண்டும்.

ஹேர் டையை விரும்பாதவர்களும், இளம் வயதில் இருப்பவர்களும் ஹென்னா உபயோகித்து முடியின் வெள்ளை நிறத்தை மறைக்கலாம். ஆனால் ஸ்கால்ப் மிகவும் வறண்டு விடும். ஹென்னாவை அடிப்படையாக வைத்தும் ஹேர் டை வந்துள்ளது.

ஹென்னா எல்லா முடிக்கும் ஒத்து வராது. நேரான முடிக்கு மட்டுமே ஒத்து வரும். ஹென்னாவை அப்படியே போடுவது முடியை முரட்டுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும். முடியும் கொட்டும். குறிப்பாக பெண்களுக்கு முன் தலையில் உள்ள முடி கொட்டும். ஹென்னாவைப் போட விரும்புபவர்கள் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும்.

மருதாணியை அரைத்து நேரடியாகப் பூசுவதை விடுத்து, அதை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி, அத்துடன் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும். இயற்கையான ஹென்னாவை உபயோகப்படுத்துபவர்கள் கீழ்க்கண்ட முறையைப் பின்பற்றலாம்.

ஒரு நபருக்குத் தேவையானவை:

ஹென்னா - 250 கிராம்
ஒரு முட்டை - வெள்ளை, மஞ்சள் கரு கலந்தது
ஆலிவ் ஆயில் - 2 டீ ஸ்பூன்
காப்பி அல்லது டீ டிகாஷன் - 2 ஸ்பூன்

(சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் டீ டிகாஷனையும், அடர்ந்த ப்ரவுன் நிறத்தை விரும்புபவர்கள் காப்பி டிகாஷனையும் கலந்துகொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் உபயோகப்படுத்தவும்.)

நெல்லிக்காய் பவுடர் - 50 கிராம்
தயிர் - 2 டீ ஸ்பூன்
எலுமிச்சம் பழச் சாறு - 5லிருந்து 8 சொட்டுகள்

இவை அனைத்தையும் கலந்து இரும்புப் பாத்திரத்தில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்படையும். ஹென்னாவின் நேரடியான வீரியமும் குறையும்அழகு குறிப்புகள்:'டை' அடித்துவிட்டுக் குளிக்கலாமா Hair%20Colouring-jpg-969
thadcha
thadcha
உறுப்பினர்
உறுப்பினர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum