அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

நித்தியானந்த சந்தானம் சந்திப்பின் பின்னனி:அம்பலமகியது உண்மை!

Go down

நித்தியானந்த சந்தானம் சந்திப்பின் பின்னனி:அம்பலமகியது உண்மை! Empty நித்தியானந்த சந்தானம் சந்திப்பின் பின்னனி:அம்பலமகியது உண்மை!

Post by devid Sat Mar 05, 2011 8:51 pm

முன்னணி காமெடி நடிகரான சந்தானம், சர்ச்சைக்குரிய சாமியாரான நித்தியை சமீபத்தில் நேரில் சந்தித்துப் பேசினார் என்ற செய்தி மீடியாவில் பரபரப்பைக் கிளப்பியது. சமீபத்தில் பிரபல வார இதழுக்குப் பேட்டியளித்த நித்தி, ரஞ்சிதா தனது பக்தை என்றுகூறியதோடு, தன் மீதான புகார்களையும் மறுத்தார். தன்னை ஒழிக்க மிகப் பெரிய அரசியல் சதி நடந்ததாகவும் அதிரடியாகக் கூறியிருக்கிறார். பெரும் தொகை கேட்டு அரசியல்வாதிகள் சிலர் தன்னை மிரட்டியதாகவும், அதற்கு அடிபணியாததால்தான் அதுபோன்ற போலி வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டு என்னையும், என் பக்தர்களையும், ஆசிர‌மத்தையும் களங்கப்படுத்திவிட்டனர் என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருந்தார்.

இந்தப் பேட்டி கொடுத்த தைரியமோ என்னவோ நித்தியானந்தாவைத் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் சந்தித்துவருகிறார்கள். கடந்த மூன்று நாட்களுக்கு முன் நித்தியானந்தாவைச் சந்தித்து ஆசி வாங்கினார் சந்தானம். பெங்களூருவில் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதில் கலந்துகொள்ளச் சென்ற நிலையில்தான் அங்குள்ள நித்தியின் ஆசிரமத்திற்கு சந்தானம் சென்றுள்ளார். சந்தானத்தை போன் செய்து வரச் சொன்னதே சாமிதானாம். சந்தானத்துடன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட்டும் அஜர்.

விஷயத்தைத் துருவினால் பகீர் உண்மை ஒன்று பட்டென்று வந்து வெளியே விழுகிறது. படம் முக்கால்வாசி வளர்ந்துவிட்ட நிலையில் படத்தை முடிக்கத் தேவையான எஞ்சிய நிதி உதவிக்காகவே இந்தச் சந்திப்பு என்கிறார்கள். நித்தியும் பழையபடி தனது வட்டியில்லாத நிதிச் சேவையைத் திரையுலக நண்பர்களுக்காக மீண்டும் செய்யத் தொடங்கிவிட்டார் என்கிறார்கள்!
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum