என்னை விமர்சித்துவிட்டு எனக்கே முதல் பிரதியா?: ஆவேசம் கொண்ட மஹிந்த
Page 1 of 1
என்னை விமர்சித்துவிட்டு எனக்கே முதல் பிரதியா?: ஆவேசம் கொண்ட மஹிந்த
என்னை விமர்சித்து விட்டு எனக்கே முதல்பிரதியைச் சமர்ப்பிக்கின்றீர்களா என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகை நிறுவனமொன்றின் பிரதிநிதிகளைக் கடுமையாக கடிந்து கொண்டுள்ளார்.
அமைச்சர் விமல் வீரவங்சவைத் தனிப்பட்ட ரீதியில் புகழ்பாட ரன்திவ எனும் பெயரில் புதிதாக பத்திரிகையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியபடி அப்பத்திரிகை ஆரம்ப சில மாதங்கள் வரை மட்டும் நடுநிலைப் பத்திரிகை என்ற கோணத்தில் செயல்படவுள்ளது.
அவ்வாறான நிலையில் அதன் முதல் இதழில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விமர்சிக்கும் வகையிலான செய்தியொன்றும் இடம்பெற்றுள்ளது.
தனது பத்திரிகையின் முதல் பிரதியை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவென நேரம் ஒதுக்கி எடுத்துக் கொண்ட அமைச்சர் விமல் வீரவங்ச, உரிய நேரத்தில் பத்திரிகையின் பிரதியோடு அதன் ஆசிரியர் குழாமை ஜனாதிபதியிடம் அனுப்பி வைத்துள்ளார்.
அதில் தன்னைப் பற்றி விமர்சித்து வெளியாகியுள்ள செய்தியைக் கண்டதும் ஜனாதிபதி கடுப்பாகி விட்டாராம். அதனையடுத்து " என்னை விமர்சித்து விட்டு எனக்கே முதல் பிரதியா?" என்று கோபமாக வினவி விட்டு அவ்விடத்தை விட்டு அவர் அகன்று சென்றுள்ளார்.
அதுமாத்திரமன்றி பிரஸ்தாப விடயம் தொடர்பில் அவர் அமைச்சர் விமல் வீரவங்சவுடனும் மனத்தாபத்துடன் இருப்பதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» நடிகர் விஜயின் ஆவேசம் : காவலன் படத்தை தடை செய்ய முயற்சித்த இலங்கை அரசு
» பிரதர்ஸ் பினாமியின் முதல் படம்
» புலிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் - சீமான் ஆவேசம்
» ஈழத்தமிழரின் வல்லமை மீது கொண்ட காழ்ப்புணர்வுடன் கூடிய இந்தியாவின் சூழ்ச்சித்தனமான அறிவிப்பு
» காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்???
» பிரதர்ஸ் பினாமியின் முதல் படம்
» புலிகளிடம் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி வாங்கியதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் - சீமான் ஆவேசம்
» ஈழத்தமிழரின் வல்லமை மீது கொண்ட காழ்ப்புணர்வுடன் கூடிய இந்தியாவின் சூழ்ச்சித்தனமான அறிவிப்பு
» காற்று என்னை தூக்கிப் போய்விட்டால்???
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum