இந்தியக் கடற்படை இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசிப்பதாக கூறப்படுவது தவறானது: கடற்படைப் பேச்சாளர்
Page 1 of 1

இந்தியக் கடற்படை இலங்கையின் வடகடல் பகுதியில் அத்துமீறிப் பிரவேசிப்பதாக கூறப்படுவது தவறானது என்று கடற்படைப் பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்குப் பாதுகாப்பாக இந்தியக் கடற்படையினரும் இலங்கையின் வடகடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து பாதுகாப்பளிப்பதாகவும், இலங்கைக் கடற்படை அதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாகவும் வடபகுதி கடற்தொழிலாளர் சம்மேளனம் குற்றம் சாட்டியிருந்தது.
அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே கடற்படையின் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பிரதேசத்துக்குள் ஊடுருவுவது உண்மைதான். ஆயினும் இந்தியக் கடற்படையினர் அவர்களுக்குப் பாதுகாப்பளிப்பதற்காக இலங்கைக் கடற்பிராந்தியத்தினுள் ஊடுருவியதில்லை.
இந்திய மீனவர்களின் ஊடுருவல் பிரச்சினை குறித்து தற்போது இருநாட்டு உயர்மட்ட தலைவர்களால் கலந்துரையாடல்கள் நடாத்தப்படுகின்றது. விரைவில் அதற்கான தீர்வு காணப்பட்டு விடும் என்றும் அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum