அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஹாங்காங் ஓபன்: சாய்னா, காஷ்யப் முன்னேற்றம்

Go down

ஹாங்காங் ஓபன்: சாய்னா, காஷ்யப் முன்னேற்றம் Empty ஹாங்காங் ஓபன்: சாய்னா, காஷ்யப் முன்னேற்றம்

Post by devid Thu Dec 09, 2010 9:56 pm

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெவால், காஷ்யப் ஆகியோர் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ஹாங்காங்கின் வான்சாய் நகரில் இப்போட்டி நடைபெற்று வருகிறது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் புதன்கிழமை நடந்த முதல் சுற்றில் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருக்கும் சாய்னா நெவால், ஹாங்காங் வீராங்கனை கா சானை எதிர்கொண்டார்.

இதில் சாய்னா 21-16, 21-18 என்ற நேர் செட்களில் சானை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இரண்டாவது சுற்றில் தாய்லாந்து வீராங்கனை சலக்ஜித் பொன்சனாவை சாய்னா எதிர்கொள்கிறார்.

ஆடவர் பிரிவில் இந்திய வீரர் காஷ்யப் 21-14, 19-21, 21-18 என்ற செட் கணக்கில் சீன தைபே வீரர் யூ ஸிங் ஸியேவை வென்று, இரண்டாவது சுற்றிக்கு முன்னேறினார்.

மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அரவிந்த் பட், குருசாய்தத் ஆகியோர் தோல்வியடைந்தனர்.
devid
devid
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum