அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரைக்கும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளிவராத வண்ணம் நம்பியார் செயற்பட்டார்

Go down

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரைக்கும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளிவராத வண்ணம் நம்பியார் செயற்பட்டார்  Empty தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரைக்கும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளிவராத வண்ணம் நம்பியார் செயற்பட்டார்

Post by VeNgAi Sun May 01, 2011 7:47 pm

தமிழகத்தின் சட்டசபைத்தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் வரை நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடுவதை பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரே நிறுத்தி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழுவின் போர்க்குற்ற அறிக்கை தொடர்பில் ரஸ்யா, தமது கருத்தை வெளியிட்ட போதும் சீனாவின் இலங்கைக்கான தூதுவர் ஊடகங்களுக்கு கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை

இதற்கான காரணமாக அவருக்கு ஆங்கிலம் தெரியாது எனக்கூறப்பட்டதாக சண்டே லீடர் குறிப்பிட்டுள்ளது

இந்தநிலையில் ஏன் அவர், மொழிப்பெயர்ப்பாளரை கொண்டு ஊடகங்களுக்கு கருத்தை கூறியிருக்க முடியாது என்று சண்டே லீடர் கேள்வி எழுப்பியுள்ளது

இந்தநிலையில் ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கை இந்திய உறவுக்கு முக்கியமானவருமான பசில் ராஜபக்ச, பான் கீ மூன் நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடாமல் இருந்து வருகிறார்.

இதற்கான காரணமாக, அவர் புலிகளுடனான இறுதியுத்தத்தின் போது சர்வதேசத்துடன் கொண்டிருந்த தொடர்புகள் என்று சண்டே லீடர் குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஆங்கில ஊடகம் ஒன்று, பசில் ராஜபக்ச. பான் கீ மூனின் அறிக்கைக்கு எதிராக செயற்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளமையை சண்டே லீடர் சுட்டிக்காட்டியுள்ளது.

அவரே நிபுணர் குழுவின் அறிக்கையை தாருஸ்மான்pன் அறிக்கை என்ற பெயரில் அழைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளதாகவும் ஆங்கில ஊடகத்தை கோடிட்டு சண்டே லீடர் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் இலங்கை வந்தபோது, அவருடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூட்டு அறிக்கையில் கையெழுத்திடுவதை பசில் ராஜபக்ச விரும்பவில்லை.

எனினும் பசிலின் கருத்தை கேட்காமலேயே மஹிந்த ராஜபக்ச, பான் கீ மூனுடன் கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டார்.

இந்தநிலையில் தற்போது அந்த அறிக்கையை பான் கீ மூன் தமக்கு சாதகமாக பயன்படுத்துவதை பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார். அதன் காரணமாகவே இலங்கை பாரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்தியாவின் அழுத்தத்தின் அடிப்படையில் 13 வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தை அமுல்செய்யவேண்டும் என்று பசில் ராஜபக்ச, மஹிநத ராஜபக்சவுக்கு கூறியிருக்கிறார்.
எனினும் அதனை மஹிந்த ராஜபக்ச நிராகரித்து விட்டார்.

அதன் பின்னரே பசில் ராஜபக்ச, மஹிந்த ராஜபச்சவுக்கு ஆலோசனை வழங்குவதில் இருந்து தவிர்க்கப்பட்டார் என்றும் சண்டே லீடர் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் பசில் ராஜபக்ச, பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக செயற்படுகிறார் என்ற செய்தி வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் தமிழகத்தின் சட்டசபைத்தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் வரை நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிடுவதை பான் கீ மூனின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரே நிறுத்தி வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த அறிக்கை தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்னர் வெளியிடப்படுமானால் அது ஆளும் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு பாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி விடும் என்ற காரணத்தாலேயே அதனை சட்டசபை தேர்தலின் பின்னர் வெளியிட நம்பியார் தமது பங்கை செலுத்தியதாக சண்டே லீடர் குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் 13 வது அரசியலமைப்பை இலங்கை அரசாங்கம்; இன்னும் நடைமுறைப்படுத்தாமையே பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இந்தியா கருத்து வெளியிடாமைக்கான காரணம் என்று சண்டேலீடர் தெரிவித்துள்ளது

இதற்கிடையில் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச கருத்து வெளியிடுவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுமதியளித்ததாக சண்டேலீடர் குறிபபிட்டுள்ளது.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» பான் கீ மூனின் நிபுணர் குழு இலங்கைக்கு எதிராகவே அறிக்கை சமர்ப்பிக்கும் - ஜாதிக ஹெல உறுமய
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் ஜே.வி.பி.யின் கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது
» நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் இராஜதந்திரிகளின் மூலம் உலக நாடுகளுக்கு விளக்கம்
» இலங்கை போர்க்குற்றம் தொடர்பான அறிக்கை! உறுப்பு நாடுகளுக்கு பான் கீ மூன் கோரிக்கை
» ஐ.நா.நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்படுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum