அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

விளம்பரத்தில் ஸ்வேதா மேனனின் கவர்ச்சி படம்: தயாரிப்பாளர் மீது வழக்கு

Go down

விளம்பரத்தில் ஸ்வேதா மேனனின் கவர்ச்சி படம்: தயாரிப்பாளர் மீது வழக்கு  Empty விளம்பரத்தில் ஸ்வேதா மேனனின் கவர்ச்சி படம்: தயாரிப்பாளர் மீது வழக்கு

Post by VeNgAi Mon May 02, 2011 4:31 pm

பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனன். இவர் அனஸ்வரம், துபாய், கீர்த்தி சக்கரா, பரதேசி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது ஸ்வேதா மேனனுக்கு கிடைப்பதாக இருந்தது.

ஆனால் கடைசி நிமிடம் கை நழுவியது. தனக்கு விருது கிடைக்காததற்காக அதிருப்தி வெளியிட்டார்.

தற்போது "கயம்" என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழில் "தாரம்" என்ற பெயரில் தமிழாக்கம் ஆகிறது.

அதில் ஸ்வேதா மேனன் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். கணவன் இறந்த பிறகு அவன் தம்பியை ஸ்வேதா மேனன் திருமணம் செய்து கொள்வது போல் கதை உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த கதைக்கு கேரளாவில் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. இதில் ஸ்வேதா மேனன் கவர்ச்சியாக நடித்துள்ளதற்கும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

இந்த நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ஸ்வேதா மேனனின் கவர்ச்சி காட்சியை கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தை தனது விளம்பரத்துக்கு பயன்படுத்தியது.

இல்லற சுகத்துக்கான மருந்து பற்றிய விளம்பரத்தில் அவர் படம் இடம் பெற்று இருந்தது. இதை பார்த்ததும் ஸ்வேதா மேனன் கொதித்தார். அந்த நிறுவனத்தின் மீது பொலிசில் புகார் அளித்தார்.

பொலிசார் வழக்குப் பதிவு செய்து நிறுவன உரிமையாளரை கைது செய்தனர். ஸ்வேதா மேனன் கவர்ச்சி படத்தை பயன்படுத்த "கயம்" படத்தின் தயாரிப்பாளரிடம் ஒப்பந்தம் போட்டு இருப்பதாக நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து தயாரிப்பாளரையும் பொலிசார் தேடுகிறார்கள்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum