விஜய் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம்
Page 1 of 1

விஜய் நடிப்பில் ஜெயம் ராஜா இயக்கும் வேலாயுதம் படம் சென்ற வாரம் விமரிசையாக ஆரம்பமானது. மீண்டும் ரீமேக் கதையையே படமாக்க இருக்கிறார் ராஜா. 2000ம் ஆண்டு திருப்பதிசாமி இயக்கி நாகார்ஜுனா, சௌந்தர்யா , ரகுவரன் நடித்த ஆசாத் திரைப்படத்தின் தழுவல் மாற்றுதான் வேலாயுதம் படத்தின் கதை.
தெலுங்கு ஆசாத் படத்தின் கதை இதோ.
சௌந்தர்யா ஒரு பத்திரிக்கையாளர். மாபியா கும்பல் தலைவரான ரகுவரனால் கொடுமைக்கு ஆளானவர். ரகுவரன் ஒரு தீவிரமன இந்து பக்தர். பார்ப்பவர்களிடத்தில் எல்லாம் பகவத்கீதை கருத்துக்களை பரப்புபவர். ஒரு முறை பல ரவுடிகள் விபத்தில் இறந்து கிடப்பதை சௌந்தர்யா பார்க்க நேரிடுகிறது. ரகுவரனின் கொட்டத்தை அடக்குவதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்த நினைக்கிறார். அதனால் ஆசாத் என்ற ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி அவர்தான் இந்த ரவுடிகளை அழித்தவர் என்ற தோற்றத்தை உருவாக்குகிறார். இது கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் பரவ ஆரம்பிக்கிறது. மேலும் ஆசாத் என்ற கதாபாத்திரத்தை பிரபலமாக்குகிறார் சௌந்தர்யா. நாகார்ஜுனா கிராமத்தில் வயதான அம்மா, அழகான தங்கையுடன் வசிப்பவர். அவருடைய தங்கைக்கு திருமணம் நிச்சயமானதால் , சீட்டு நிறுவனத்தில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுப்பதற்கு பட்டணத்திற்கு வருகிறார். அங்கு நடக்கும் சில விஷயங்கள் நாகார்ஜுனாதான் ஆசாத் என தவறுதலாக புரிய வைக்கிறது. சௌந்தர்யா, நாகார்ஜுனாவை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்கிறார். ஆனால் ஆசாத்தாக தன்னால் இருக்க முடியாது என மறுக்கிறார் நாகார்ஜுனா. இந்த சூழ்நிலையில் சீட்டு நிறுவனம் ஒரு மோசடி நிறுவனம் எனத் தெரிய வருகிறது. இதன் பின் நாகார்ஜுனா ஆசாத்தாக மாறி எதிரிகளை எப்படி அழிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
தமிழில், நாகார்ஜுனா கதாபாத்திரத்தில் விஜய்யும், சௌந்தர்யா கதாபாத்திரத்தில் ஜெனிலியாவும், நடிக்கிறார்கள்.

devid- மட்டுறுத்துனர்
Similar topics
» சிம்பு, பரத் நடிப்பில் வெளியான வானம்
» டைரக்டர் செல்வராகவனுடன் மோத விரும்பாத யுவன் சங்கர் ராஜா!
» அஜித்தின் மங்காத்தா
» நாவல் படிக்கும் விஜய்
» *~*மே 11ஆம் தேதி விஜய் இசை விருதுகள்*~*

Permissions in this forum:
You cannot reply to topics in this forum