அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன?

Go down

இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன? Empty இறுதிக்கட்ட யுத்தத்தில் ஏராளம் புலிகள் ஆயுதங்களுடன் வெளிநாடுகளுக்குத் தப்பியிருக்கிறார்கள்? இந்திய உளவுத்துறையின் சதியின் பின்னணியில் நடப்பவை என்ன?

Post by Admin Wed Dec 22, 2010 4:16 am

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஏராளமான விடுதலைப்புலி உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளார்களா? என இந்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைகளை மேற்கொள்ளத்தொடங்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது.
ஏற்கெனவே சில நாட்களுக்கு முன்னர் விடுதலைப்புலிகளால் இந்திய தலைவர்களுக்கு ஆபத்து என்று செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் இந்தச் செய்தி வெளிவிடப்பட்டதன் உள்நோக்கத்தை மக்களுக்கு சரியான நேரத்தில் அறிவிக்கப்பட்டதன் விளைவால் அச்செய்தி வெளியிட்டோரின் நோக்கம் நிறைவேறாமல் போகும் நிலையில் அடுத்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.

அதற்கு பாவிக்கப்பட்டிருக்கும் பெயர்தான் தாவூத் இப்ராகிம் குழுவினர்.

தப்பிச் சென்றவர்கள் பெருந்தொகையான ஆயுதங்களையும் தம்முடன் எடுத்துச் சென்றதாகவும் அக்கால கட்டத்தில் புலிகளுக்கு ஆயுதம் விநியோகித்த தாவூத் இப்ராஹிம் குழுவினர் இந்தியப் புலனாய்வு விசாரணையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். தாவூத் இப்ராஹிம் குழுவின் முக்கிய புள்ளியான மிர்ஸா பெய்க் இடம் நடாத்தப்பட்ட விசாரணைகளிலிருந்தே மேற்படி தகவல்கள் வெளிவந்துள்ளன.

யுத்தம் நிறைவுற்ற பின்னரும் கூட விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் பலர் தலைமறைவாக இருந்து விட்டு வெளிநாடுகளுக்குத் தப்பியிருப்பதாகவும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். மிர்சா பெக்கிடமிருந்து பொட்டம்மான் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்வது தொடர்பான விசாரணைகளை இந்தியப் புலனாய்வுத்துறை மேற்கொண்டுள்ள போதிலும், அவற்றின் விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை. விடுதலைப் புலிகளின் வலையமைப்பு தொடர்பாக அவர் மேலும் பல தகவல்களை வெளியிட்டுள்ள போதிலும், பாதுகாப்புக் கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளதாக மும்பைப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. என அச்செய்தி தொடர்ந்து செல்கின்றது.

தற்போது இந்தியாவில் இருந்து வெளிவிடப்பட்டிருக்கும் இச்செய்தியின் உள்நோக்கம் பற்றி மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டிய அவசியம் பொறுப்புள்ள ஊடகங்களுக்கு இருக்கின்றது.

விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மௌனித்தன் பின்னர் நெடுநாட்களாக யார் யார் உயிருடன் இருக்கின்றார்கள் எங்கெங்கு இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு பதில் பெறமுடியாமல் தமிழ் மக்களும் எதிரிகளும் திக்குமுக்காடியிருப்பது என்னவோ உண்மைதான்.

ஆனால் அதன் நோக்கங்களையும் ஆழ அகல பரிமாணங்களைம் ஆத்மார்த்தமாக உணர்ந்திருக்கும் தமிழினம் தனது அரசியல் இராஐதந்திர ஐனநாயக வழிப்போராட்டங்களை தீவிரப்படுத்தி முன்னகர்ந்து செல்கின்றது. ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்த மௌனத்திலும் கால இடைவெளியிலும் ஒரு துப்பாக்கி ரவைகூட பாவிக்கப்படக்கூடாது என்பதில் தமிழர் தரப்பு தெளிவாகவே இருக்கின்றது.

இதுவே இன்று சிங்களத்திற்கும் எதிரிகளிற்கும் பெரும் சவாலாக அமைந்திருக்கின்றது. தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இன அழிப்பும் அதில் கைநனைத்தவர்களும் அம்பலப்பட்டு நிற்கும் நிலையில் தமிழ் மக்களிற்கான தார்மீக ஆதரவு சர்வதேச ரீதியாக பெருகிவரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் விடுதலைப்புலிகள் மீதான தடைகள் நீக்கப்பட்டு தமிழர்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையை பெற்றுவிடுவார்கள் என்ற ஐயம் இலங்கை அரசிற்கும் இந்திய ஆளும் வர்க்கத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

இதனை முறியடிக்கும் தமது வேலையை வழமைபோல அவர்கள் ஆரம்பித்து விட்டார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் அண்மையில் வந்திருக்கும் மேற்குறிப்பிட்ட இரு செய்திகளும்.

விடுதலைப் புலிகள் ஆயுதங்களுடன் தப்பிச்சென்றாதால் அவர்கள் எந்நேரமும் ஆயுதத்தாக்குதலில் ஈடுபடலாம். அவர்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தொடர்பிருப்பதால்? அவர்களை பயங்கரவாதிகளாக மேலும் சித்தரிக்கலாம். படிப்படியாக இந்திய பல்லின சமூகத்தின் ஆதரவை தமிழர்கள் பெறுவதற்கான தேவை உணரப்பட்டு அதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவில் வாழும் அனைத்து மக்களாலும் அச்சத்துடன் நோக்கப்படும் தாவூத் இப்ராஹிம் குழுவினருடன் தொடர்புபடுத்தி தமிழர்களின் நோக்கத்தை சிதறடித்தல்" என பல்நோக்கம் கொண்டு திட்டம் தீட்டப்பட்டு காட்சிகள் அரங்கேற ஆயத்தமாகின்றது. இதன் தொடர்ச்சியாக இலங்கையிலும் இந்தியாவிலும் சில அல்லது பல குண்டுகளும் வெடிக்கலாம். சில முக்கியஸ்தர்கள் கூட கொள்ளப்படலாம். அவற்றை விடுதலைப்புலிகளே செய்தார்கள் என தங்களால் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருக்கும் சாட்சிகள் கொண்டு ஆதாரப்படுத்தக் கூட முனையலாம். எதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காட்சிகள் காலத்திற்கேற்றவாறு மெருகூட்டப்படுவது வழமையே. நீளும் காட்சியில் இப்போது தாவூத் இப்ராஹிம் குழுவினர் சாட்சிகளாக...

மக்களை உசுப்பேத்தும் தலையங்கங்களை போட்டு எதிரிகளின் வலையில் நாங்கள் விழுவதுடன் மக்களையும் விழவைத்து விடாமல் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் நாம் ஒவ்வொருவரும் பணியாற்ற வேண்டும்.

விடுதலைப் புலிகளின் தாரக மந்திரங்களில் முக்கியமானது “ சொல்லுக்கு முன் செயல்” . செயல் எது என மானமுள்ள மானசீகமான தமிழன் ஒவ்வொருவனுக்கும் தெரியும். பொது எதிரியையும் அவன் திட்டங்களையும் முறியடிப்போம். மௌனங்களிற்கும் ஆத்மார்த்தமான கேள்விகளுக்கும் காலம் தமிழர் பெருமைகொள்ளத்தக்க பதிலை நிச்சயம் சொல்லும்.
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum