காந்தி என்கிற நெருப்பு
Page 1 of 1
காந்தி என்கிற நெருப்பு
[You must be registered and logged in to see this link.]
தென்னாப்பிரிக்காவில் காந்தி இருந்த வீட்டை விலைக்கு வாங்கி நினைவுச்சின்னமாக்க இந்திய அரசு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
உண்மையில் இக்காரியம் நடைபெற்றால் இந்தியர்கள் அனைவருக்குமே பெருமிதமும் சந்தோஷமும் நிச்சயமாக ஏற்படும்
காந்தி என்ற மகாபுருஷனின் நினைவுகள் கூட ஒருமனிதனை புனிதனாக்கும்
பயங்கரவாதமும் வெறித்தனமும் அதிகரித்து விட்ட இந்த உலகம் தப்பிப்
பிழைக்க வேண்டுமானால் காந்தியக் கொள்கைகளை கடைப்பிடிப்பதைத் தவிற வேறு
வழியில்லை
[You must be registered and logged in to see this link.]
இதை உலகம் இப்போது சற்று மறந்து
போய் இருக்கலாம் ஆனால் பட்டறி கெட்டறி என்பதிற்கினங்க ஒரு நாள் உலகத்தின்
புத்திதெளியும் அன்று அண்ணலின் அறுமைத் தெரியும்
அதற்காக தொடர்முயற்சிகளை நல்லமனம் படைத்தவர்கள் மனச்சோர்வு இல்லாமல்
செய்து கொண்டே வரவேண்டும் எறும்பூற கல்லும் தேயும் போது மனிதமனகள் மாறாதா
என்ன?
அதற்கு இத்தகைய நினைவுச்சின்னங்கள் நிச்சயம் உதவும்
இந்த முயற்சியை யார் எதற்காக எடுத்திருந்தாலும் சரி எத்தகைய உள்நோக்கம்
மறைந்திருந்தாலும் சரி அதையெல்லாம் காந்திய தொண்டர்கள் தேவையற்றதாகவே
கருதுவார்கள்
ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் காந்தியம் என்ற நெருப்பு எத்தகைய குப்பைக் கூளங்களையும் எரித்து சாம்பலாக்கி விடும் என்று!
[You must be registered and logged in to see this link.]
soruce [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum