அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை

Go down

பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை  Empty பாகிஸ்தானில் காதல் திருமணம் செய்த பெண் மின்சாரம் பாய்ச்சி கொலை

Post by priyanka Mon Jan 24, 2011 10:57 pm

பாகிஸ்தானின் கிழக்கு பகுதியில் பகாவல்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த இளம் பெண் சைமா பீபி (17). இவர் ஒரு வாலிபரை காதலித்தார்.
இந்த விவகாரம் அவரது குடும்பத்தினருக்கு தெரிந்து விட்டது. இது குறித்து கிராம மக்கள் கேலி பேசினார்கள். இதனால் அவரது குடும்பத்தினர் அவமானம் அடைந்தனர்.

இந்த விவகாரம் கிராமத்தினரின் கட்டப்பஞ்சாயத்துக்கு சென்றது. அங்கு அப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதாவது கவுரவ கொலை செய்யும் படி உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் சேர்ந்து அப்பெண்ணை அடித்து உதைத்து சித்ரவதை செய்தனர்.

பின்னர் கழுத்து,முதுகு, கைகளில் உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் மின்சாரம் பாய்ச்சி கொலை செய்தனர். இது குறித்து பகவல்பூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே, போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஆனால், அப்பெண் கொலை செய்யப்பட்டதாக யாரும் சாட்சி சொல்ல முன்வர வில்லை. எனவே, அவரது உறவினர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய முடியவில்லை.

இச்சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்நாட்டு பிரதமர் யூசப்ர சாகிலானி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும் படி போலீசாருக்கு உத்தர விட்டுள்ளார். பாகிஸ்தானில் மலைப்பகுதியில் வாழும் மக்களிடையே காதல் வயப்படும் பெண்கள் மற்றும் பெற்றோரை எதிர்த்து வேறு வாலிபர்களுடன் திருமணம் செய்யும் பெண்கள் கவுரவக்கொலை என்ற பெயரில் கொல்லப்படுகின்றனர்.

கடந்த 2009-ம் ஆண்டில் மட்டும் 650 பெண்கள் இது போன்று கொலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் மனித உரிமைகள் கமிஷன் தெரிவித்துள்ளது.
priyanka
priyanka
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum