அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கண்ணே என்ன செய்ய ?

Go down

கண்ணே என்ன செய்ய ?  Empty கண்ணே என்ன செய்ய ?

Post by Admin Tue Feb 01, 2011 4:19 am

நான் வேண்டாமென்று தான் நினைத்தேன்
எனக்கே தெரியாமல்
உன் பெயர் உச்சரிக்கப்படுகிறது எனக்குள்
என்ன செய்ய ?
இதோ இரவினை வெளுக்க முடியாத
ஒரு அவஸ்தையில் -
மொட்டைமாடி ஏறி
தெரு பக்கம் பத்து விளக்கு
வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டேன்.
வெளிச்சத்தின் வண்ணங்களில்
உன் நினைவுகளாக -
நிறைகிறாய் நீ..
என்ன செய்ய ?
எழுந்து இங்குமங்கும் பார்த்தேன்
வெளிச்சம் முடியும் நுனியில்
விடமனமில்லாத இருட்டின் எல்லை போல்
உள்ளே இருந்து கத்தியது உன் நினைவு
யாரோ அழைக்கிறார்களோ என்று
திரும்பிப் பார்த்தேன்..
பார்த்த திசையெல்லாம்
நிலவு, மரம், இருட்டு,
வெளிச்சம், மேகம் என
எல்லாமோடு நீயுமிருந்தாய்.
சரி இனி என்ன செய்ய ?
வந்து புத்தகம் எடுத்தேன்
எதையோ படித்தேன் -
உள்ளே புரிந்த வார்த்தைகளின் மத்தியில்
வாயில் எப்படியோ சிக்கிக்கொண்ட
இடைச் சொல்போல்
உன் பெயரை உச்சரிக்கலானேன்
இல்லை இல்லை -
அத்தனை மனபலம் அற்றவனா நான்
உன் பெயரை உச்சரிக்காமல்
புத்தகத்தை வாசிக்க எத்தனித்தேன்..
சற்று நேரத்தில்
புத்தகத்தின் ஆழ சிந்தனைக்குள்
பொதிந்துக் கொண்டது மனசு
இடை இடையே லேசாக
உன் ஞாபகம் வர
எட்டி வெளியே பார்த்தேன்
இரவு தான் வெறும்
இருட்டு தான் தெரிந்தது
இரவுப் பூச்சிகள் உறங்காமல்
கத்தும் சப்தம்
மனதை என்னவோ செய்தது
ஒரு நிழலும் உடன் தெரிய
சற்று அதிர்ந்து போனேன்
இதய வேகம் இன்னும் கூடியவனாய் எழுந்து
தெருவை பார்த்தால் – தெருவில் நீ
நின்றிருந்தாய்; என்னைப்போல..
என்ன செய்ய?
இப்போது என்ன செய்ய ?
புத்தகத்தை மடக்கி வைத்து விட்டேன்.
ஒரு நிமிடம் இரு என்று
உனக்கு ஒரு கையை காட்டி விட்டு
உள்ளே சென்று ஒரு காகிதம் எடுத்து
இவைகளை எல்லாம் மடலாக எழுதினேன்
அவசரமாக எடுத்துக் கொண்டு வெளியே நிற்கும்
உனை நோக்கி ஓடிவந்தேன்
வெளியே கொட்டும் பனி போல
அடர்ந்த இருள் போல
அந்த இருளில் பிராகாசிக்கும் நிலவினை போல
அடிக்கும் சில்லென்ற காற்றினை போல
அந்த வீட்டில் பூச்சி சப்தத்திற்கு நடுவே
நீயும் வலிக்கும் கால்களை மறந்து -
எனக்காக நின்றிருந்தாய்
நான் ஒரு புன்னகையை பூத்து விட்டு
பிடி என்று உன் கையில் அந்த மடலை
திணித்து விட்டு திரும்புகையில்
என் கை பிடித்து நிறுத்தி
நீயும் ஒரு காகிதம் திணித்தாய்
என் கைகளை இருக்க பிடித்துவிட்டு
போ.. என்றாய்
நான் உணர்ச்சியின் வேகத்தில்
திணறி இருட்டில் தவிக்கும்
வெளிறி போன முகமாக
உள்ளே சென்று அந்த
காகிதத்தை பார்த்தேன்
ஆனால் பிரித்துப் பார்க்க எண்ணவில்லை
நீ தந்த சந்தோசத்தை
நீ கையிருக்கி விட்ட அந்த உணர்வை
கடக்கும் நிமிடமெல்லாம் அனுபவித்தேன்
மீண்டும் மீண்டும் அந்த
மடல் பார்த்து சிரித்துக் கொண்ட
என் மனசுக்கு தெரிந்தது
உள்ளே நீ உன் இதயம் வைத்திருப்பாய் என்று!!

[You must be registered and logged in to see this link.]
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum