அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இராசிபலன்கள்

Go down

இராசிபலன்கள் Empty இராசிபலன்கள்

Post by theepan Wed Feb 16, 2011 5:37 am

மேஷம்


இராசிபலன்கள்
14-2-2011முதல்20-2-2011வரை

1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும். பிப்ரவரி14,15,16மனத் தைரியமுடன் எடுத்த காரியங்களை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள்.புதிய வாகனங்கள் வாங்குவது போன்ற முயற்சிகளில் சற்று கால தாமதம் ஏற்படலாம். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்துள்ள கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லதாகும்.பிப்ரவரி17,18நீண்ட காலமாக வேலை இல்லாதவர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சற்று குறைந்து காணப்படும்.உடல் நிலையில் வாயு மற்றும் வயிற்று சம்பந்தமான உபாதைகள் வந்து போகும வெகு காலமாக குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு இருந்த தடைகள் நீங்கிச் சுப காரியங்கள் நடை பெறக்கூடிய காலமாகும்.. குழந்தைகளுக்கான மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.நீண்ட தூரப் பயணங்கள் மூலமாக எதிர் பார்த்த காரியங்களில் சில பின்னடைவுகள் ஏற்படும்.பிப்ரவரி19,20மருந்துப் பொருட்கள்,
மருத்துவத்துறை சார்ந்த பேராசிரியர்கள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,காய்கறி வியாபாரிகள்,மர வியாபாரம் செய்பவர்கள்,
நீர்வளத் துறை சார்ந்தவர்கள்,மருந்து விற்னையாளர்கள்,தபால் தந்தித் துறையைச் சார்ந்தவர்கள்,வங்கிப் பணி செய்பவர்கள்,கவிஞர்கள் எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவி~;ணு வழிபாடு செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
ரிசபம்

2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி14,15,16நெருப்பு மின்சாரம் போன்றவற்றில் கவனமுடன் இருப்பது நல்லது.வீட்டைத் திருத்திக் கட்டுவதற்காக நீண்ட நாட்களாக ஏடுத்துக் கொண்ட முயற்சிகள் நிறைவேறும். விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.வெளியுர் பயணங்கள் மூலம் இது நாள் வரை தீராத நோய்களுக்கு விடைகள் காணுவீர்கள்.அரசு வழக்கு சம்பந்தமாகிய விசயங்களில் சம்பந்தம் இல்லாத நபர்களின் உதவியால் சாதகமான நல்ல தீர்ப்புகள் கிடைக்கும்.பிப்ரவரி17,18தீர்த்த யாத்திரை சென்று வருவதற்காகப் புதிய கடன்களை வாங்கி அடைப்பீர்கள்.பொதுத் தொண்டுகளில் எச்சிரிக்கையுடன் பணியாற்றுவது நல்லது.வேற்று மதத்தவரால் எதிர்பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விவசாயம் செய்பவர்களுக்கு எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவார்கள்.கோர்ட் வழக்கு விசயங்களில் முடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகும்.பிப்ரவரி19,20கணவன் மனைவி உறவுகளில் சில கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.காதல் விசயங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது.மீன் முட்டை மாமிசம் போன்ற பொருட்கள்,கழிவு
பொருட்களின் வியாபாரிகள்,தோல் சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதிகளைச் செய்வோர்கள்,அணு ஆராய்ச்சித் துறைகளைச் சார்ந்த பணியாளர்கள்,சாயப் பவுடர்களின் வியாபாரிகள்,துப்புரவுத் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
புரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
மிதுனம்

3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி14வெகு காலமாகத் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண காரியங்கள் நிறைவேறும்.பழைய பொருட்களை விற்றுப் புதிய பொருட்களை வாங்க வாய்ப்பு உள்ளது. மனைவியின் உடல் நிலை பாதிப்பால் மருத்துவ செலவுகள் உண்டாகலாம்.பிப்ரவரி15,16,17பிள்ளைகளால் இருந்து வந்த தொல்லைகள் சற்று குறைந்து மன நிம்மதி அடைவீர்கள்.நண்பர்கள் உறவினர்களின் ஆதரவால் சில காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.உடம்பில் வாயு மற்றும் வாதம் போன்ற உபாதைகள் வந்து போகலாம்.கொடுத்த வாக்கைக் காப்பாற்ற எடுத்துக் கொண்ட முயற்சிகளில் மன திருப்தி அடைவீர்கள்.தாயின் உடல் இருந்து வந்த பாதிப்புகள் சற்று குறைந்து மருத்துவச் செலவுகள் குறையும்.வெகு காலமாகத் திருமணம் ஆகாமல் இருந்தவர்களுக்குத் திருமணத் தடைகள் நீங்கித் திருமணம் ஆகும்.பிப்ரவரி18,19,20திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் தனம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.இரும்பு,மின்சாரம் இரசாயனம்,விஞ்ஞானம்,எண்ணை
கள் போன்ற வியாபாரம் செய்பவர்களும்,அரசுத்துறை சார்ந்த அலுவலக உதவிப் பணிகளை ஆற்றுபவர்களும்,பழைய கழிவுப் பொருட்களாகிய பேப்பர் பிளாஷ்டிக் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர்களும் நற் பலன்களை அடைவீர்கள்பங்குத் தொழிற் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுப் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இ.ராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞாயிற்றுக் கிழமையில் பிதுர் மற்றும் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
கடகம்

4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்..பிப்ரவரி14,15புதிய செய் தொழில் சம்பந்தமாகிய முயற்சிகளில் சிறிது தடைகள் வந்து விலகும்.கணவன் மனைவி உறவுகளில் சற்று கவனமுடன் நடந்து கொள்வது நல்லதாகும்.தந்தை வழிச் சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து சொத்துக்கள் கிடைக்கும். தனப் புழக்கம் சுமாராகக் காணப்படும்.பொதுப் பணிகளில் ஈடு படுவோர்கள் மிக கவனமுடன் இருப்பது நல்லது.பிப்ரவரி16,17உடல் நிலையில் உஷ்ணம் மேகம் போன்ற உபாதைகள் வந்து போகலாம்.பூர்வீகமான இடங்களுக்குச் சென்று வரப் போட்டிருந்த திட்டங்கள் நிறைவேற கூடிய காலமாகும். தந்தையின் உடல் நிலை பாதிப்புகளால் பொருட் செலவுகள் ஏற்படலாம். புதிய கடன்களை வாங்குவதற்கான முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.பிப்ரவரி18,19,20குடும்பத்தில் காரணம் இல்லாத விசயங்களுக்காக வீண் பிரச்சனைகள் வந்து போகும்.புதிய தொழில்கள் துவங்குவதற்கான முயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தீர்த்த யாத்திரை சென்று வரப் போட்டிருந்த திட்டங்களில் சில தடைகள் வந்து விலகும்.புதிய ஆடைகள் அணிகலன்கள் வாங்குவதற்காக புதிய கடன்கள் வாங்குவீர்கள்.கட்டிட சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
சிம்மம்

5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி14,15நெருப்பு மின்சாரம் போன்ற துறையைச் சார்ந்தவர்கள்,கம்யுட்டர் சாதன வியாபாரிகள்,இணைய
தளங்கள் நடத்துபவர்கள்,கேஸ் வெல்டிங் போன்ற தொழிற் சாலைகளில் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலனை அடைய வாய்ப்பு உள்ளது.பொருளாதாரத்தில் இருந்து இன்னும் சற்று நீடிக்கும்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் குறைந்து ஓரளவு மன மகிழ்ச்சி அடையலாம்.பிப்ரவரி16,17 உத்தியோகத் துறையினர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய இட மாற்றம் ஏற்படலாம்.வெளி நாடுகளுக்குச் சென்று வருவதற்கான புதிய முயற்சிகளில் நல்ல தகவல்கள் வந்து சேருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.வழக்கு விசயங்களில் சாதகமான நல்ல முடிவுகள் கிடைக்க இன்னும் சற்று காலதாமதம் ஆகலாம்.பிப்ரவரி18,19,20ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் ஏமாற்றம் அடைய வேண்டாம்.தூரத்து உறவினர்களின் வருகையால் சில சுப காரிய நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பிறருக்காக உதவி செய்து மன மகிழ்ச்சி அடைவீர்கள்.தாயின் உடல் நிலையில் இருந்து வந்த தொல்லைகள் சற்று குறைந்து காணப்படும். நாட் பட்ட பழைய கடன்களை அடைத்துப் புதிய கடன்கள் வாங்க முயற்சிப்பீர்கள்.டுத்துக் கொண்ட காரியங்களை மிகுந்த முயற்சியின் மேல் செய்து முடிப்பீர்கள்.பழைய கடன்கள் மீண்டும் தொல்லை கொடுக்கும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-ஞயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
கன்னி

6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி.14,15,16,17இரும்பு இயந்திரம் டீசல் பெட்ரோல் எண்ணை வியாபாரிகள்,இன்சினியரிங் துறை சார்ந்தவர்கள்,கமிசன் தொழிற் செய்வோர்கள், கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,பலசரக்கு கடை நடத்து வோர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பிள்ளைகளுக்க வெகு காலமாக தடை பட்டு இருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடை பெறக் கூடிய காலமாகும்.பிப்ரவரி18,19திருட்டுப் போன பொருட்கள் மற்றவர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.யாத்திரையில் அரசியல் வாதிகள் சிலரின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சில ஆதாயங்களை அடைவீர்கள்.மாணவர்கள் கல்வியில் நன் மதிப்பையும் பாராட்டுக்களையும் பெறுவார்கள்.ஒரு சிலருக்கு நினைத்த இடங்களில் பணி இட மாற்றங்கள் ஏற்படலாம்.காதல் விசயத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும்.பிப்ரவரி20 தொழிற் சாலைகளை திருத்தி அமைக்க போட்ட திட்டங்களில் வெற்றி அடையலாம்.நிலம் மற்றும் நகைகளை அடகு வைத்தல் போன்ற வற்றின் மூலமாகப் பணம் வந்து சேரும். காணாமற் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடுவந்து சேரும். உத்தியோகம் பார்ப்பவர்கள் மேலதிகாரிகளுடன் கவனமுடன் நடந்து கொள்வதால் வீண் பிரச்சனைகள் குறையும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியாக திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
துலாம்

7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி14,15பொது நலக் காரியங்களில் ஈடு பட்டு நற் பெயர் எடுப்பீர்கள். பேப்பர் பேனா பென்சில் நோட்டு புத்தகம் போன்ற ஸ்டேசனரி சம்பந்தமாகிய பொருள் வியாபாரிகள்,வங்கிப் பணி புரியும் எழுத்தர்கள்,வழக்கறிஞர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.அரசியல் வாதிகளால் ஆதாயம் இல்லை.உயரமான இடங்களில் மிகுந்த கவனமுடன் வேலை செய்வது நல்லது.பிப்ரவரி16,17,
18,19மன நிம்மதி இன்மை காரணமாக நித்திரை பங்கமும் காலந் தாழ்ந்த உணவருந்துதலும் ஏற்படும்.குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் சற்று குறைந்து மன நிம்மதி ஏற்படும். நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்களின் திடீர் வரவால் பொருட் செலவுகளும் மன நிம்மதிக் குறைவும் உண்டாகலாம். நாட் பட்ட தீராத நோய்க்கு விடை காணும் காலமாகும்.அண்டை அயலாருடன் எச்சரிக்கையாகப் பேசிப் பழகுதல் நல்லது.புதிய வீடு மற்றும் தொழிற் சாலைகளை இட மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது..பிப்ரவரி20 பூர்வீகமான இடங்களுக்குச் சென்று வர வாய்ப்பு உள்ளது.செய் தொழிலில் நல்ல லாபம் கிடைத்த போதிலும் சில பிரச்சனைகள் வந்து மிகுந்த பிரயாசத்தின் மேல் சரி செய்து விடுவீர்கள்.வெளி நாடு சென்று வருவதற்கான முயற்சிகளில் மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
விருச்சிகம்

8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி14,15தரகு ஏஜன்சி கமிசன போன்ற தொழிற் செய்வோர்கள்,மீன் முட்டை மாமிச உணவுகளின் வியாரிகள்,பழைய பேப்பர,பிளா~;டிக்,பழைய இரும்புப் பொருட்களின் வியாபாரிகளும்,விஞ்ஞானத்துறை சார்ந்த அலுவலகப் பணி புரிபவர்களும் லாபம் அடைவீர்கள்.புதிய வீடு மாற்றம் செய்ய போட்டிருந்த திட்டங்கள் நிறைவேறும் காலமாகும்.பிப்ரவரி16,17,18தென் திசையில் இருந்து திடீர் அதிர்~;டம் மூலம் தனம் வந்து சேரும். பங்காளிகளுடன் சேர்ந்து புதிய தொழில் ஆரம்பம் செய்யப் போட்டிருந்த எண்ணங்கள் நிறைவேறும்.குல தெய்வ வழிபாடு செய்து வருதல் நல்லதாகும்.யாத்திரையில் சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக வீண் பிரச்சனைகள் வர இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்க்கவும்.பிப்ரவரி19,20வங்கிகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமான அலுவலகங்களில் பணி புரிவோர்களுக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணி இட மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. சொந்த பந்தங்களுடன் குடும்பத்தில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள மனக்கசப்புகள் குறைந்து ஒற்றுமை உண்டாகும்.மற்றவர்களில்
பிரச்சனைகளில் அநாவசியமாகத் தலையிட்டு மனக் குழப்பத்தை ஏற்படுத்தாதீர்கள். தந்தை மகன் உறவுகளில் நல்ல சூழ்நிலை காணப்படும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் விநாயகர் வழிபாடு செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
தனுசு

9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி14,15,16 தண்ணீர்,திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், மருத்துவத் துறைகளை சார்ந்த பணியாளர்கள்,மருத்துவ மனைகளை நடத்துபவர்கள்,மருத்துவ கல்லூரியை சார்ந்த மாணவர்கள்,போன்ற தொழிற் செய்வோர்கள்,எழுத்தாளர்கள் கவிஞர்கள் பாடலாசிரியர்கள்,சினிமா நாடகம்,இசைத் துறை சார்ந்தவர்களும்,வங்கிப் பணி செய்வோர்களும்,எழுத்தாளர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பிப்ரவரி16,17,18 நீண்டதூரப் பயணங்களால் எதிர் பார்த்து இருந்த ஆதாயம் கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படும்.புதிய ஆடைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதைத் தவிர்க்கவும்.புதிய கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லதாகும். அரசியல் வாதிகளால் சில எதிர்பாராத ஆதாயங்களை அடைவீர்கள்.நண்பர்கள் உறவினர்களின் வருகையால் பண உதவியும் மன நிம்மதியும் உண்டாகும். குல தெய்வ வழிபாடு செய்து வர முயற்சித்த எண்ணங்கள் நிறைவேறும்.பிப்ரவரி19,20
பிரிந்து போன கணவன் மனைவி உறவுகளில் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒன்று சேரக் கூடிய காலமாகும். வீடு மற்றும் தொழிற்சாலைகளுக்காக வங்கிகளில் இருந்து எதிர் பார்த்து இருந்த பண உதவிகள் கிடைக்கும். விபரீதமான எண்ணங்களை நினைத்து வீண் மனக் குழப்பத்திற்கு ஆளாக வேண்டாம்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
மகரம்

10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி14,15புதிய கடன்களை வாங்குவதால் திருப்பிச் செலுத்த இயலாமற் போகக் கூடும் என்பதால் கடன் வாங்குவதைத் தவிர்த்தல் நல்லது.பூஜைப் பொருட்கள்,நறுமண சம்பந்தமாகிய பொருட்கள்,கம்யுட்டர் சாதன வியாபாரிகள், பேராசிரியர்கள்,ஆலயப் பணி செய்வோர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்கள் நடத்துவோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.பிப்ரவரி16,17,18அடிமை ஆட்களால் ஆதாயம் இல்லை.பிள்ளைகளால் இருந்து வந்துள்ள தொல்லைகள் சற்று குறைந்து காணப்படும்.நண்பர்கள் உறவினர்களின் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ளுவீர்கள்.கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. சகோதரர்களால் சம்பந்தில்லாத பிரச்சனைகளும்,மனக் குழப்பங்களும் வந்து சேரும். பொழுது போக்கு விசயங்களுக்காக வீண் பணச் செலவுகள் ஏற்படலாம்.பிப்ரவரி19,20திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களில் பணம் கிடைக்கலாம். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. யாத்திரையில் கவனமுடன் பயணம் செய்து வரவும். வீடு மற்றும் வாகனங்களைப் பழுது பார்ப்பதற்காகப் புதிய செலவுகள் வந்து சேர வாய்ப்பு உள்ளது.வங்கிகள் மூலமாக எதிர் பார்த்து இருந்த பணம் கை வந்து சேரும்.உடல் நிலையில் மேகம் உ~;ண சம்பந்தம் ஆகிய உபாதைகளும்,அலர்ஜி போன்ற தொற்று நோய்களும் வந்து நீங்கும். பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
பரிகாரம்:-வியாழக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
கும்பம்

11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.;.பிப்ரவரி14பொதுத் தொண்டுகளில் ஈடு படுவதன் மூலம் நற் பெயர்களை எடுப்பீர்கள். தேவையற்ற புதிய நண்பர்களின் தொடர்புகளால் மன நிம்மதி குறைய இருப்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.பிப்ரவரி15,16,17காவல் துறை,ராணுவம், மின்சாரத் துறை சார்ந்தவர்கள்,நெருப்பு சம்பந்தமான தொழிற் செய்வோர்கள்,ஹோட்டல் பணி ஆற்றுபவர்கள்,மின்சாதன பொருட்களை உற்பத்தி செய்பவர்கள்,அரசுத் துறை சார்ந்த மின் அலுவலகங்;களில் பணி செய்வோர்கள், கேஸ் வெல்டிங் சம்பந்தமாகிய தொழிற் கூடங்களை நடத்துவோர்கள்,மின்துறை சார்ந்தபொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவீர்கள்.பிப்ரவரி18,19,20
கண் காதுகளில் கவனம் தேவை. புதிய மருத்துவர்களின் உதவியால் நோய்கள் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.நீண்ட நாட்களாக வராத கடன் கொடுத்திருந்த பணம் பிரச்சனைகளின் பேரில் திரும்பக் கிடைக்கும்.மனைவியின் உடல் நலக் குறைவு காரணமாக பொருட் செலவுகள் உண்டாகும்.தொலைதூர பயணங்களைத் தவிர்த்தல் நல்லதாகும்.வாகனங்களில் எச்சரிக்கையுடன் பயணம் செய்தால் விபத்துக்களைத் தவிர்க்கலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.


--------------------------------------------------------------------------------
மீனம்

12மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும். பிப்ரவரி14,15பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து நண்பர்களால் பொருளுதவிகள் கிடைக்கும்.வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் நல்ல தகவல்களை எதிர் பார்க்கலாம்.கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் சற்று கால தாமதம் ஏற்படும். விடு பட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தலை தூக்கும்.பிப்ரவரி16,17,18 யாத்திரையின் போது சம்பந்தம் இல்லாத நபர்களின் மூலமாக எதிர்பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ள காலமாகும்.புதிய வீடு வாகனங்கள் வாங்குவது போன்ற புதிய முயற்சிகளில் சில தடைகள் வந்து சேரும்.
மாணவர்களுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுகளும்,பண உதவியும் கிடைக்கும்.உடல் நலையில் கண் காதுகளில் கவனமுடன் இருக்கவும்.
பொருளாதாரத்தில் இருந்த நெருக்கடிகள் மாறி ஓரளவு முன்னேற்றம் காணப்படும்.பிப்ரவரி19,20மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு மன நிம்மதியை இழக்காதீர்கள்.கலைத்துறை சார்ந்த பொருள்களின் வியாபாரிகள்,ஆடம்பர அலங்கார பொருள் வியாபாரிகள்,
தங்கம் வெள்ளி போன்ற நகைகளின் வியாபாரிகள்,கமிசன் தொழிற் செய்வோர்கள்,வீடு நிலம் போன்ற விற்பனையாளர்கள்,நெருப்புத் தொழில் செய்வோர்கள்,உணவு விடுதிகளை நடத்துவோர்கள்,
காவல் துறை ராணுவம் தீயணைப்புத் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் ஆதாயங்களை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ் சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும். தொடரும்!

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum