அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

உடல் பருமனை குறைத்தால் வட்டி அதிகம்: தென்கொரிய வங்கி

Go down

உடல் பருமனை குறைத்தால் வட்டி அதிகம்: தென்கொரிய வங்கி Empty உடல் பருமனை குறைத்தால் வட்டி அதிகம்: தென்கொரிய வங்கி

Post by theepan Thu Feb 17, 2011 7:14 am

தென்கொரிய வங்கி ஒன்றில் டெபாசிட் வட்டி விகிதம் உடல் பருமனை வைத்து கணக்கிடப்படுகிறது.
நாட்டில் குண்டானவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தென்கொரியாவை சேர்ந்த ஹனா வங்கி இந்த நூதன வட்டித் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இது தென்கொரியாவில் முன்னணியில் இருக்கும் ஹனா நிதி குழுமத்தை சேர்ந்த வங்கி.

ஒரு ஆண்டில் 5 சதவீத எடையை குறைப்பவர்களுக்கும், தொடர்ச்சியாக ஜிம் செல்பவர்களுக்கும் சிறப்பு வட்டி வழங்கப்படுகிறது. உடலை குறைப்பதுடன் வட்டியும் அதிகம் கிடைக்கும் என்பதால் டெபாசிட் குவிகிறதாம். 50 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மூலம் ரூ1,600 கோடி டெபாசிட் என பட்டையை கிளப்பியிருக்கிறது ஹனா வங்கி.

இதுபோல புதிது புதிதாக பல அதிரடி திட்டங்களை தென்கொரியாவில் பல வங்கிகள் அமல்படுத்தியுள்ளன. அதில் ஒன்று கூக்மின் வங்கியின் ஸ்மார்ட்போன் சேமிப்பு திட்டம். ஸ்மார்ட்போன்களில் இதற்காக பிரத்யேக சாப்ட்வேரை வங்கி தரவிறக்கம் செய்து தருகிறது.

அந்த சாப்ட்வேரில் "ஒரு காபி" என கிளிக் செய்துவிட்டால் போதும். அதற்கு வேண்டிய பணம் நமது ஏ.டி.எம் கார்டு அக்கவுன்டில் இருந்து சிறப்பு டெபாசிட் திட்டத்துக்கு போய்விடும். அதேபோல டாக்சி செலவை மிச்சம் பிடித்து போனில் "டாக்சி" என கிளிக் செய்தால், அதற்கான பணமும் வந்துவிடும். செலவு குறையக் குறைய டெபாசிட் பழுத்துக்கொண்டே வரும். இத்திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது.
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum