சவூதியிலிருந்து உடலில் கம்பிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்
Page 1 of 1
சவூதியிலிருந்து உடலில் கம்பிகள் ஏற்றப்பட்ட நிலையில் நாடு திரும்பிய பெண்
சவூதி அரேபியாவிலிருந்து மற்றுமொரு இலங்கைப் பணிப் பெண் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு உடலில் ஊசி போன்ற நான்கு கம்பிகள் ஏற்றப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.
காலியை பிறப்பிடமாகக் கொண்ட 30 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு திருப்பியனுப்பப்பட்டுள்ளார். அவர் உடலில் ஏற்றப்பட்டிருந்த கம்பிகள் சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளன. இந்த பெண் தொடர்ந்தும் காலி கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
குறித்த பெண் கடந்த வருடம் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி சவூதி அரேபியாவிற்கு வீட்டுப் பணிப் பெண்ணாக சென்றுள்ளார். அங்கு அவ்வீட்டு உரிமையாளரால் அவர் துன்புறுத்தப்பட்டமையால் குறித்த பெண் அதனை வீட்டிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அதனை தொடர்ந்து அப் பெண்ணின் கணவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தோடு தொடர்பு கொண்டு கடும் முயற்சிகளை மேற்கொண்டு குறித்த பெண்ணை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளார். சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப் பெண்ணாக பணிபுரிந்த குறித்த பெண்ணை வீட்டு உரிமையாளர் பாலியல் பலாத்காரத்துக்குட்படுத்டுத்த முயன்றுள்ளார். அதற்கு அப்பெண் இணங்காமையினாலேயே இவ்வாறு சித்திரவதை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
rajeshwary- மட்டுறுத்துனர்
Similar topics
» லண்டனிலிருந்து நாடு திரும்பிய விக்கிரமபாகு கருணாரத்தின மீது விமான நிலையத்தில் தாக்குதல்: ஊடகவியலாளர்களுக்கும் காயம்
» மட்டக்களப்பில் பொலித்தீன் பையில் அடைக்கப்பட்ட நிலையில் ஆண் ஒருவரினதும், ஏறாவூரில் பெண் ஒருவரினதும் சடலங்கள் மீட்பு
» உடலில் அதிக உரோமங்களுடன் சாதனை படைத்துள்ள சிறுமி
» கனடாவிலிருந்து இலங்கை திரும்பிய குடும்பஸ்தர் கொழும்பில் சடலமாக மீட்பு
» மும்பையிலிருந்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum