மட். பொலிஸாரை படுகொலை செய்த குற்றத்திற்காக கருணா மன்னிப்பு கோர வேண்டும்: பிள்ளையான்
Page 1 of 1

மட்டக்களப்பு பொலிஸ் படுகொலைச் சம்பவங்களுக்காக பிரதி அமைச்சர் விநாயாகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா பகிரங்க மன்னிப்பு கோர வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
1990ம் ஆண்டு மட்டக்களப்பில் சரணடைய வந்த 600 பொலிஸ் உத்தியோகத்தர்களை படுகொலை செய்த குற்றத்திற்காக அவர்களது குடும்பத்தாரிடம் கருணா பொது மன்னிப்பு கோர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது பிள்ளையான் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமானுஸ்மான சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்திய தலைவராக கருணா செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
தாம் இந்த சம்பவங்களுக்காக மன்னிப்பு கோர வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு லக்ஸ்மன் கதிர்காமர் கேந்திர நிலையத்தில் நடைபெற்ற விசாரணைகளில் சாட்சியமளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
600 பொலிஸ் உத்தியோகத்தர்களை படுகொலை செய்தமை தொடர்பில் மன்னிப்பு கோருவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான பேதங்களை களைய முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வா தெரிவித்ததாகவும், இதற்கு பதிலளிக்கும் வகையில் பிள்ளையான் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
பண்டா செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தால் இனப்பிரச்சினை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஒப்பந்தத்தைக்கு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன உரிய மதிப்பளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சம்பூர் மக்களை மீள் குடியேற்றும் பொறுப்பு தம்மிடம் கிடையாது எனவும், அது தொடர்பில் மத்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பூர் மக்கள் வேறு இடங்களில் குடியேறத் தயார் என்றால் அவர்களை மீள் குடியேற்றத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

MayA- உறுப்பினர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum