பார்வதியம்மாவின் அஸ்தியை நாசப்படுத்தியமையை கண்டித்து போராட்டம்!ராஜபக்சவின் கொடும்பாவி எரிப்பு! - வைகோ, நெடுமாறன், பாண்டியன் உள்ளிட்ட 400 பேர் கைது
Page 1 of 1
பார்வதியம்மாவின் அஸ்தியை நாசப்படுத்தியமையை கண்டித்து போராட்டம்!ராஜபக்சவின் கொடும்பாவி எரிப்பு! - வைகோ, நெடுமாறன், பாண்டியன் உள்ளிட்ட 400 பேர் கைது
சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை அகற்றக் கோரி இன்று போராட்டத்தில் ஈடுபட்ட ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் அவமதிப்பு செய்த இலங்கை அதிபர் ராஜபக்சே அரசை கண்டித்தும் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்றக் கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பழநெடுமாறன் தலைமையில் மயிலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசுகையில்,
அன்னை பார்வதியம்மாள் சடலத்தை அவ திப்பு செய்த இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொடூரமான செயலுக்கு காங்கிரஸ் ஆட்சிதான் காரணம்.
முத்துக்குமார் ஏற்றி வைத்த தீயை அணைக்க கூடாது தொடர்ந்து அதே வேகத்தில் செயல்பட வேண்டும் பார்வதியம்மாள் சிதையை அவமதிப்பு செய்ததை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஆவேசமானார்.
அதைத்தொடர்ந்து பழ.நெடுமாறன் பேசும்போது, மனித நேயம் ஈவு இரக்கம் இல்லாமல் இலங்கை அதிபர் ராஜபக்சே இது போன்ற கொடூர செயலை செய்துள்ளார்.
காங்கிரஸ் அரசின் உதவியால் இது போன்ற இழிவான செயலை இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கையை ஆதரித்து காங்கிரஸ் அரசு செய்து வரும் தவறை உணரும் காலம் விரைவில் வரும். இந்த கரையை துடைப்பதற்கு நம்மால் முடிந்ததை செய்வோம். இலங்கை தூதரகத்தை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
பின்னர் வைகோ, பழ.நெடுமாறன் தலைமையில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இலங்கை அரசின் கொடியை தீவைத்து எரித்தார்கள். பின்னர் அணி அணியாக இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றனர்.
இந்த அறப்போராட்டப் பேரணியில் ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ உள்ள தமிழ் உணர்வாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை பேரணி நெருங்குவற்கு முன்பு அவர்கள் அனைவரையும் பொலிஸார் கைது செய்தனர்.
வைகோ, பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் தா.பாண்டியன், மகேந்திரன், மற்றும் புதிய பார்வை நடராஜன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
theepan- தலைமை நடத்துனர்
Similar topics
» இலங்கைத் துணைத் தூதரகத்தை மூடுமாறு போராட்டம்: பழ.நெடுமாறன் அறிவிப்பு
» இலங்கை தேசியக் கொடி எரித்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது
» யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 108 பேர் கைது
» சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது
» அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி, 23 பேர் காயம்
» இலங்கை தேசியக் கொடி எரித்த குற்றச்சாட்டில் 25 பேர் கைது
» யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த தமிழக மீனவர்கள் 108 பேர் கைது
» சுவிஸில் உள்ள உணவகத்தில் இலங்கைத் தமிழர்கள் மோதல்! இருவர் காயம், பதினொரு பேர் கைது
» அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி, 23 பேர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum