அடுத்த கட்ட ஈழப் போர் வடக்குப் பிராந்திய கடற்பரப்பை மையமாக வைத்தே ஆரம்பமாகும்: லக்பிம
Page 1 of 1

விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட ஈழப் போர் இலங்கையின் வடக்கு கடற்பிராந்தியத்தை மையமாக வைத்தே ஆரம்பிக்கப்படும் என்று லக்பிம ஆங்கில செய்திப் பத்திரிகையின் வாராந்த அலசல் தெரிவிக்கின்றது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பிச் சென்றுள்ள பல கனிஷ்ட நிலைத் தளபதிகளும், விடுதலைப் புலி உறுப்பினர்களும் தற்போது கனடா மற்றும் இந்தியாவின் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டு மீளிணைகின்றனர் என்று அப்பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டுகின்றது.
தற்போது தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயுதப்பயிற்சிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இலக்கு வைக்கும் தற்கொலைத் தாக்குதல் பயிற்சிகளை பெற்று வருகின்றனர்.
அதற்கு மேலாக கடற்புலிகள் மற்றும் வான்புலிகள் அணிகளும் தற்போது தமிழ்நாட்டில் நிலைகொண்டுள்ளன. அவர்களும் மேலதிக பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அவ்வாறான நிலையில் மிக விரைவில் அடுத்த கட்ட ஈழப் போர் வெடிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. அது வடக்கு கடற்பிராந்தியத்தை மையமாகக் கொண்ட போராக இருக்கும். அதனை ஊடறுத்து வந்தே புலிகள் தாக்குதலைத் தொடங்குவார்கள்.
அதற்கு மேலதிகமாக இடம், சூழ்நிலைக்கேற்ப விடுதலைப் புலிகளின் தாக்குதல் உத்திகள் இம்முறை மாறுபட்டதாக அமைந்திருக்கும். சிற்சில சந்தர்ப்பங்களில் விடுதலைப் புலிகள் கெரில்லா பாணித் தாக்குதல்களிலும் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றன என்றும் அந்தப் பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Similar topics
» அடுத்த கட்ட ஈழப் போர் வடக்குப் பிராந்திய கடற்பரப்பை மையமாக வைத்தே ஆரம்பமாகும்: லக்பிம
» போர் மூண்டால் இந்திய ராணுவம் 10 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது.
» போர் நடைபெற்ற பகுதிகளில் மேலதிக இராணுவப் பிரசன்னம் குறித்து கோத்தபாயவுடன் பேசினோம் - ஐ.ஒன்றிய குழு தலைவர் ஜீன் லம்பேர்ட்
» ரஜினியின் அடுத்த புதிய படம் ஹரா
» பிறவுண் நீர் கடற்படையை உருவாக்குவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்த இலக்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum