தேர்தலை ஒத்திவைப்பதால் அரசிற்கு எதிரான மக்கள் அதிருப்தியை மூடிமறைக்க முடியாது – ரணில். சர்வாதிகார ஆட்சி என ஜே.வி.பி. தலைவர் சாடல்
Page 1 of 1

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் அதிருப்தியை மூடிமறைக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நேற்று நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பின்றி அல்லலுறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒப்புக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றியீட்டும் என்பதனால் 15 லட்சம் மக்களின் வாக்குரிமையை அரசாங்கம் தடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டிய காலம் மலர்ந்துள்ளது – ஜே.வி.பி.
சர்வாதிகர ஆட்சிக்கு எதிராக மக்கள் அணி திரள வேண்டிய காலம் மலர்ந்துள்ளதென ஜே.வி.பி கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்காத ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் உயர்வடைவதாகத் தெரிவித்து நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருட்களின் விலையை குறைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் இறுதி வரையில் தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை அளித்த போதிலும் இதுவரையில் அந்த வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் நான்கு திசைகளையும் சேர்ந்த மக்கள் வறுமையினால் வாடுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தாவது:-
பொருட்களின் விலை உயர்வடைந்து செல்கிறது. வேலை வாய்ப்புக்கள் இல்லை. மக்கள் மூன்று வேளைகளிலும் மரக்கறிகளுடன் சாப்பிட முடியாது திண்டாடுகின்றனர். கிழங்கும் சோறும் மாத்திரமே மக்கள் சாப்பிடுகின்றனர். அவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
இவ்வாறானதொரு அரசு நாட்டுக்குத் தேவையில்லை. மஹிந்த ராஜபக்ஷ அரசு வீட்டுக்குச் செல்லும் காலம் நெருங்கிவிட்டது என்று கூறினார்.
ஜே.வி.பி.யினர் நேற்று கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம்

priyanka- மட்டுறுத்துனர்
Similar topics
» ராஜீவ் கொலை காரணகர்த்தாவான கே.பி.யை பாதுகாப்பதே காட்டிக் கொடுப்பு - ரணில் விசனம்
» *~*கலாச்சாரத்தை மறந்தால் முன்னேற முடியாது! - தருண்கோபி*~*
» த.தே.கூட்டமைப்பு கேட்டதையெல்லாம் வழங்க முடியாது - இலங்கை அரசாங்கம்
» தமிழக மீனவர்கள் தனது கடற்பரப்புக்குள் ஊடுருவுவதை இலங்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது - இந்து
» பாஜக தலைவர் சின்காவிடம் ராடியா பேச்சு எடுபடவில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum