அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

ஐதேகவின் செயற்குழு கூட்டம் இன்று மாலை! கட்சிக்குள் பிளவு ஏற்படலாம்?

Go down

ஐதேகவின் செயற்குழு கூட்டம் இன்று மாலை! கட்சிக்குள் பிளவு ஏற்படலாம்? Empty ஐதேகவின் செயற்குழு கூட்டம் இன்று மாலை! கட்சிக்குள் பிளவு ஏற்படலாம்?

Post by theepan Mon Mar 21, 2011 1:31 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் கூடவுள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி கண்ட படுதோல்வியை அடுத்து முதல் முறையாக செயற்குழு கூடவுள்ளதால் அது உத்வேகம் அடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாநாட்டின் போது கட்சியில் மறுசீரமைப்பை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. எனினும் இதுவரை மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படவில்லை. இது தொடர்பில் செயற்குழு கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்படுமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் மாற்றம் ஏற்படுமாயின் அக்கட்சி மீண்டும் பிளவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளதென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கும் ஒரு குழுவினரும், சஜித் பிரேமதாஸ தலைவராக வர வேண்டும் என நினைக்கும் பிறிதொரு குழுவினரும் இருப்பதாலேயே பிளவு ஏற்படலாம் என நம்பப்படுகிறது.
சில வேளைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவராக சஜித் பிரேதமாஸ தெரிவு செய்யப்பட்டால் ரணில் விக்ரமசிங்கவிற்கு அவரைவிடவும் அதிகாரமுள்ள அல்லது மதிப்புள்ள பதவி வழங்கப்பட வேண்டும்.
இல்லாவிடின் நாட்டின் பிரதமராக செயற்பட்டு, பல வரு காலங்களாக எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டுவரும் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் சாதாரண பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட சம்மதிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
எனவே ஐக்கிய தேசிய கட்சியில் மறு சீரமைப்பு மேற்கொள்ளப்படுவது அந்தக் கட்சியை மேலும் பிளவுபடுத்தும் செயற்பாடாக அமையக் கூடுமென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாஸ தெரிவு செய்யப்பட வேண்டுமென அக்கட்சி ஆதரவாளர்கள் நினைத்திருந்தால் சஜித் பிரேமதாஸவின் பலத்தை நிரூபிக்க கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அவருடைய தொகுதியில் அவர் சார்ந்தவர்களை மக்கள் வெற்றிபெறச் செய்திருக்க வேண்டும்.
ஒருவேளை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி வெற்றிபெற்று விட்டால் தொடர்ந்தும் அவர் தலைவராக நீடித்து, சஜித் பிரேதமாஸவிற்கு தலைமைப் பதவி கிடைக்காமல் போய்விடுமென கட்சியின் ஆதரவாளர்கள் சதி செய்தார்களோ தெரியவில்லை.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசிய கட்சியின் வீழ்ச்சிக்கு கட்சியின் தலைமைத்துவம் பெரிய காரணமாக அல்லவென்பதும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கொள்கைகளுக்கு மக்கள் ஆதரவு வழங்குவதாகவும் தெரியவருகிறது.
எது எவ்வாறிருப்பினும் இன்று மாலை மூன்று மணியளவில் சிறிகொத்தவில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூடவுள்ள கட்சியின் செயற்குழு கூட்டம் மிகவும் சூடுபிடிக்குமெனவும், விரைவில் கட்சிக்குள் பல மாற்றங்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது
theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜ.தே. கூட்டமைப்பிற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை: விஜித ஹேரத்
» பார்வதியம்மாவின் மறைவுக்கு வைகோ, ராமதாஸ் ஆகியோர் இரங்கல்! நாளை சென்னையில் அஞ்சலி கூட்டம்
» ஓமந்தை தடுப்புக்காவல் முகாம் இன்று தொடக்கம் மூடப்படுகின்றது
» யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்
» கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் 15வருடங்களுக்குப் பின்னர் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum