கேரதீவு - சங்குப்பிட்டி பாலம் 15வருடங்களுக்குப் பின்னர் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது
Page 1 of 1

பூநகரியையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் கேரதீவு சங்குப்பிட்டி பாலம் சுமார் 15வருடங்களுக்குப் பின்னர் அதி உச்சக்கட்ட பாதுகாப்புடன் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3.30 மணியளவில் குறித்த பாலம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்விற்காக ஜனாதிபதி வருகை தருவதை முன்னிட்டு யாழ்.குடாக்கடலில் இன்று யாரும் கடற்றொழில் செய்ய அனுமதிக்கப்படவில்லை.
மேலும். கடற்படை, தரைப்படை,வான்படை மற்றும் பொலிஸார் இணைந்த அதியுச்ச பாதுக்காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றும் போது,
வடக்குக் கிழக்கு மக்களின் நலன்களில் நாம் அதிக அக்கறை காட்டுகின்றறோம் அதற்காக தினமும் பலகோடி ரூபாய்களை செலவிடும் நாம் தொடர்ந்தும் செலவிடுவோம்.
கடந்த காலத்தில் பல அரசாங்கங்களும் இந்தப்பாதையை திறப்பதற்காக முயற்சித்தது. எனினும் அந்த முயற்சிகள் யாவும் இயலாம் போனது. நாம் இதனைச் செய்வோம் என கூறினோம் அதை செய்திருக்கின்றோம்.
நாம் சொல்வதைத்தான் செய்வோம் செய்வதைத்தான் சொல்வோம். இந்த நாட்டில் அமைதியையும் நிலைநாட்டுவோம் என கூறினோம். இன்று எல்லா இனங்களும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் வீடு, கல்வி, மின்சாரம் உட்பட மற்றும் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். எனவே எல்லோரும் ஒரே மக்கள் என்ற அடிப்படையில் ஆசியாவின் அதிசயமாக இலங்கையை மாற்றுவோம் என்றார்.
திறக்கப்பட்ட பாலம் பிரிட்டிஷ் அரசாங்கத்தினால் சுமார் 800 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் 1990 காலப்பகுதியில் மிதக்கும் பாதை இந்தப்பகுதியில் இருந்தது.
பின்னர் இலங்கை விமானப்படையினரால் அது குண்டு வீசி தகர்க்கப்பட்டது. அன்று தொடக்கம் இந்தப் பாதையுடான பயணம் முடங்கியே கிடந்தது.

Similar topics
» ஓமந்தை தடுப்புக்காவல் முகாம் இன்று தொடக்கம் மூடப்படுகின்றது
» டிஎன்ஏ சோதனைக்குப் பின்னர் லேடன் உடலை கடலில் வீசிய அமெரிக்கா
» யாழ்.வலய கல்விப் பணிமனை முன்பாக தொண்டராசிரியர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டம்
» உலக கிண்ணம் : இந்தியா - இங்கிலாந்து இன்று பலபரீட்சை
» புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் 300 பேர் இன்று விடுதலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum