அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

வன்னியில் மக்கள் கொல்லப்படவில்லையாம்!- ஐ.நா அறிக்கைக்கு எதிராக வாய்திறந்தார் பிள்ளையான்

Go down

வன்னியில் மக்கள் கொல்லப்படவில்லையாம்!- ஐ.நா அறிக்கைக்கு எதிராக வாய்திறந்தார் பிள்ளையான்  Empty வன்னியில் மக்கள் கொல்லப்படவில்லையாம்!- ஐ.நா அறிக்கைக்கு எதிராக வாய்திறந்தார் பிள்ளையான்

Post by VeNgAi Thu May 05, 2011 3:13 pm

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது பொது மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடந்த மனிதப் பேரழிவுகளை ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக இலங்கை அரசுடன் சேர்ந்தியங்கும் பல கட்சிகள் தங்களுடைய எதிர்ப்புக்களை வெளியிட்டு வந்த நிலையில் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்க மறுத்துவந்தார்.

தான் இது குறித்து கருத்துக் கூறி தனது அரசியல் உழைப்பை கெடுத்துக்கொள்ள விரும்பாத நிலையில் நேற்றைய தினம் வாழைச்சேனை கிராம மக்களை சந்தித்து உரையாடியபோது ஐ.நா நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக வாய்திறந்துள்ளார்.

மக்களை சந்தித்த சிவநேசதுரை சந்திரகாந்தனிடம் ஐ.நா நிபுணர் குழு அறிக்கை பற்றி கருத்துக் கேட்ட மக்கள் எல்லாக்கட்சிகளும் ஐ.நா அறிக்கை பற்றி கருத்துக் கூறும் பொழுது நீங்கள் மட்டும் கருத்துக் கூறாதது ஏன்?என கேள்வி கேட்டதற்கு கொதித்தெழுந்த முதலமைச்சர் நான் என்ன கூறவேண்டும் என்று நினைக்கின்றீர்கள். ஐ.நா அறிக்கைக்கு எதிரான எனது கருத்தை நான் முன்பே பசில் ராஜபக்சவிடம் கூறிவிட்டேன்.

மக்களின் கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்கள்

வன்னியில் ஐ.நா சொல்வது போல் மக்கள் கொல்லப்படவில்லை.
5000 மக்கள் அளவில் தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
அதையும் கொலை செய்தது புலிகள்தான்.
பான் கீ மூனுக்கு வேறு வேலையில்லை.
அவர் என்ன பூதக்கண்ணாடி வைத்து பார்த்துக்கொண்டு இருந்தவரா மக்கள் சாகக்குள்ள.
நான் அரசை எதிர்த்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியாதா?

மகிந்த ராஜபக்சவின் ஆதரவு இல்லையென்றால் ஒரு தமிழன் முதலமைச்சராக வரமுடியாது. நான் முதலமைச்சராக இருக்க காரணம் நம்மட ஜனாதிபதிதான்.

எனவே நீங்க நினைக்கிற மாதிரி எதையும் செய்ய ஏலாது. உலகம் என்னதான் அவரை எதிர்த்தாலும் இரகசியமான நட்பை அமெரிக்கா தொடங்கி எல்லாரும் வைத்துக்கொண்டுதான் இருக்காங்க. அதால நாம போராட்டம் எதிர்ப்பு எண்டு சும்மாபோய் மாட்டிக்கொள்ளாம உங்கட வேலைய பாருங்கள் என்றார்.

இவரை தொடர்ந்து உரையாற்றிய ஆரையம்பதியின் மூத்த குடிமகனான பூ.பிரசாந்தன் 80,000 மக்கள் வன்னியில் கொல்லப்பட்டால் அதில் 50,000 மக்களை கொன்றவர்கள் புலிகள்தான் இருக்க முடியும். ஏனென்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான விதவைகள் உருவாக காரணமும் புலிகள்தான். எனவே இனியும் தமிழ் மக்கள் தமிழ் மக்கள் என்று புலிகளின் கொள்கைகளுக்கு குடைபிடிக்க வேண்டாம் என்றார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» முஸ்லீம் ஊடகவியலாளர் ஜபார்கான் ஐ.நா அறிக்கைக்கு எதிராக தீவிர பிரச்சாரம்.
» ஐநா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராக தமிழர்களை அச்சுறுத்தி கையொப்பம் பெறும் சிறிலங்கா!
» மட். பொலிஸாரை படுகொலை செய்த குற்றத்திற்காக கருணா மன்னிப்பு கோர வேண்டும்: பிள்ளையான்
» வன்னியில் இருந்து கடத்தப்பட்ட மாணவனை குறுஞ்செய்தி காப்பாற்றியது
» வன்னியில் 2009 மே மாதம் அரச படைகளின் தாக்குதலில் படுகொலையான, படுகாயமடைந்த மக்களின் நிழற்படதொகுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum