அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

பன்றிக்காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்.

Go down

பன்றிக்காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம். Empty பன்றிக்காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம்.

Post by Admin Fri Apr 06, 2012 3:02 pm

பன்றிக்காய்ச்சல் நோய் பரவாமல் தடுக்க கூடுதலாக 2 லட்சம் தடுப்பூசி வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு அவசர கடிதம் அனுப்பியுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்க சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 3 மாதங்களில் தமிழகத்தில் இந்நோய்க்கு மொத்தம் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் முதியவர் ஒருவரும் பலியாகியுள்ளார். சென்னையில் 4 பேரும், கோவையில் 3 வயது குழந்தையும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் தப்பி ஓடிய 2 சிறுமிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சிறுமிகள் படித்து வந்த கொருக்குபேட்டை மாநகராட்சி பள்ளியில் மாணவர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனையில் யாருக்கும் பன்றிக்காய்ச்சல் இல்லை என்று தெரியவந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 300 மாணவர்களுக்கு டாமி புளூ மாத்திரைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிறுமிகளின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினரின் சளி மாதிரிகள் பரிசோதனைக்கு அனுபப்பட்டுள்ளது. சென்னையில் பாதிக்கப்பட்ட 4 பேருக்கும், கோவையில் குழந்தை ஒன்றுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவையில் ஒருவருக்கும், சென்னையில் உள்ள தி.நகர், திருவான்மியூரை சேர்ந்த 2 பேருக்கும் புதிதாக பன்றிக்காய்ச்சல் இருப்பது நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23 ஆக உயர்த்துள்ளது. சென்னையில் மட்டும் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் பொற்கைபாண்டியன் கூறியதாவது: தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் நோய் தடுக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. தற்போது 4 லட்சம் டாமி புளூ மாத்திரைகள் தயாராக உள்ளது. கூடுதலாக மாத்திரைகள் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு தடுப்பூசி போடும் திட்டம் ஓரு வாரத்தில் தொடங்கப்படும். முதல்கட்டமாக மத்திய அரசு தமிழகத்திற்கு 25,000 தடுப்பூசிகள் வழங்கியுள்ளன. கூடுதலாக 2 லட்சம் தடுப்பூசிகள் கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம். முதல்கட்டமாக டாக்டர்கள், நர்ஸ்களுக்கு, சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படும். இதன் பின்னர் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும். 5 வயது உட்பட்ட குழந்தைகளுக்கு டாமி புளூ மாத்திரைகள் டானிக் (சிரப்) கொடுக்கப்பட்டு வருகிறது. கூடுதலாக 20 ஆயிரம் டானிக் பாட்டில்களை மத்திய அரசை கேட்டுள்ளோம். வெளி மாநிலங்களில் இருந்து வருவோரை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பன்றிக்காய்ச்சலை தடுக்க தடுப்பூசி கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம். Swine+Flu
Admin
Admin
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


https://tamil5n.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics
» கடந்த நான்கு ஆண்டுகளாக 1 1/2 லட்சம் பேரின் போன் ஒட்டுக்கேட்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை
» தமிழக மீனவர்களையும், இலங்கை தமிழர்களையும் இந்திய அரசு பாதுகாக்க வேண்டும்: ஜெயந்தி நடராஜன்
» சரத் என் சில்வாவிடம் நட்டஈட்டை கோரி வழக்கை தாக்கல் செய்தவருக்கு நேர்ந்த கதி
» கணனி ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்களை தடுக்க விசேட நடவடிக்கை
» இலண்டன் இலங்கைத் தூதரகத்தில் அரசுக்கு எதிரான உளவாளிகள்: விசாரணைகள் ஆரம்பம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum