அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

கடந்த நான்கு ஆண்டுகளாக 1 1/2 லட்சம் பேரின் போன் ஒட்டுக்கேட்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை

Go down

கடந்த நான்கு ஆண்டுகளாக 1 1/2 லட்சம் பேரின் போன் ஒட்டுக்கேட்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை Empty கடந்த நான்கு ஆண்டுகளாக 1 1/2 லட்சம் பேரின் போன் ஒட்டுக்கேட்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க பாரதீய ஜனதா கட்சி கோரிக்கை

Post by theepan Wed Feb 16, 2011 5:51 am

இந்தியாவில் பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ், வோடோபோன், பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் தொலைபேசி சேவைகளை வழங்கி வருகின்றன. பாரதி ஏர்டெல் நிறுவனம், 15.25 கோடி வாடிக்கையாளர்களின் தொலைபேசி சேவையில் முதல் இடத்தில் உள்ளது.

ரிலையன்ஸ் 12.57 கோடி, வோடோ போன் 12.43 கோடி, பி.எஸ்.என்.எல். 8.67 கோடி சந்தாதாரர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.மத்திய உளவுத்துறை, ராணுவ உளவுத்துறை, சி.பி.ஐ. அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை, ஊழல் தடுப்புப் பிரிவு, போதைத் தடுப்புப் பிரிவு மற்றும் போலீசார் கேட்டுக்கொள்வதற்கு ஏற்ப இந்த நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்டு பதிவு செய்து கொடுத்து வருகின்றன.

பொதுநலன் கருதி மத்திய- மாநில அரசுகள் உத்தரவின் பேரில் தனி நபர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் 1 1/2லட்சம் பேரின் போன்களை ஒட்டு கேட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியது.

அதன்படி பார்த்தால் தினமும் 82 பேரின் தொலைபேசி உரையாடல்களை ரிலையன்ஸ் நிறுவனம் ஒட்டு கேட்டுள்ளது.மற்ற தொலைபேசி நிறுவனங்கள் ஒட்டு கேட்டதையும் கணக்கிட்டால், கடந்த 5 ஆண்டுகளில் பல லட்சம் பேரின் போன் ஒட்டு கேட்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி சுப்ரீம் கோர்ட்டிலும் இது தொடர்பாக ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், சிங்வி, கங்குலி இருவரும், தொலைபேசி உரையாடல்கள் அதிக அளவில் ஒட்டுக் கேட்கப்படுவது, மக்களின் தனிமை உரிமைக்கு பெரும் அபாயமாக உள்ளது என்றனர்.

இந்த நிலையில் போன்கள் ஒட்டு கேட்புக்கு பாரதீய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கொல்கத்தாவில் இன்று பா.ஜ.க. தேசிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.

கூட்டத்தில் கலந்து கொண்ட மேல்- சபை பா.ஜ.க. தலைவர் அருண்ஜேட்லி கூறியதாவது:

நாடெங்கும் பலரது தொலைபேசி ஒட்டு கேட்கப்படுவதை மத்திய அரசு ஒத்துக் கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் போன்களை ரிலையன்ஸ் நிறுவனம் ஒட்டு கேட்டதாக கூறியுள்ளது. இது மிகுந்த கவலை தருகிறது. நாட்டின் பாதுகாப்பு அல்லது மிகக்கடுமையான குற்றச்செயல்களை கருத்தில் கொண்டே தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது.

போன் ஒட்டுக் கேட்கப்படுவது சமீப காலங்களில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் தற்போது எத்தனை போன்கள் ஒட்டுக்கேட்கப்பட்டன? எதற்காக ஒட்டு கேட்கப்பட்டன? என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.

இந்த விவகாரத்தில் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். எனவே போன் ஒட்டு கேட்பு குறித்து மத்திய அரசு முழுமையான விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும்.

இவ்வாறு அருண் ஜேட்லி கூறினார்

theepan
theepan
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum