அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

சட்டவிரோத குடியேற்றங்களால் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பு! - பிதற்றுகிறார் பீரிஸ்

Go down

சட்டவிரோத குடியேற்றங்களால் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பு! - பிதற்றுகிறார் பீரிஸ்  Empty சட்டவிரோத குடியேற்றங்களால் இலங்கையின் நற்பெயருக்குப் பாதிப்பு! - பிதற்றுகிறார் பீரிஸ்

Post by VeNgAi Wed Jan 12, 2011 4:20 am

சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்லும் வர்த்தகம் சர்வதேச ரீதியான அச்சுறுத்தல் எனவும், சர்வதேச குற்றங்கள் முதல், சட்டவிரோத ஆயுதக் கடத்தல் வரை விரிவடையலாம் எனவும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதக் குடியேற்றங்கள் காரணமாகப் பாதிப்புக்குள்ளான நாடுகளின் இராஜதந்திர பிரதிநிதிகளை சந்தித்து அதன்பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சட்டவிரோத நடவடிக்கையைத் தடுக்க விரிவான நோக்கங்களும், ஒத்துழைப்புகளும் ஏற்படவேண்டும் எனவும், ஒரு நாட்டில் இருந்து இன்னோர் நாட்டுக்குச் செல்லும் சட்டவிரோதக் குடியேற்றங்களைத் தடுக்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகள் இதற்குச் சிறந்ததொரு உதாரணம் எனவும், சட்டவிரோத குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்லும் வர்த்தகம் மூலம் புலிகள் தமது நடவடிக்கைகளுக்காக பெருமளவு பணத்தைச் சம்பாதித்துக் கொண்டதாகவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், வெளிநாடுகளில் உள்ள அவர்களது ஆதரவாளர்கள் இந்தச் சட்டவிரோத வர்த்தகத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.

இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையிலும் சிலர் பல்வேறு காரணங்களைக் கூறி வெளிநாடுகளுக்கு குடிபெயர முயற்சித்து வருகின்றனர்.

இது அந்த நாடுகளுக்கு இடையூறாக இருப்பதுடன் இலங்கையின் நற்பெயருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது எனவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
VeNgAi
VeNgAi
பண்பாளர்
பண்பாளர்


Back to top Go down

Back to top

- Similar topics
» ஜனாதிபதிக்கெதிரான லண்டன் ஆர்ப்பாட்டத்தில் சிங்களவர்களும் புலிக்கொடி ஏந்தியிருந்தார்கள்: ஜீ.எல்.பீரிஸ்
» புலி ஆதரவாளர்கள் பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்ய முயற்சிக்கின்றனர்: ஜீ.எல்.பீரிஸ்
» மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு
» மட்டக்களப்பு மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் வெள்ளத்தில்... 07 லட்சம் பேர் பாதிப்பு
» கையடக்கத் தொலைபேசிகளுக்கு வரி அறவீடு செய்வதனால் வடக்கு மக்கள் பாதிப்பு – சிறிதரன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum