மட்டக்களப்பு மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் வெள்ளத்தில்... 07 லட்சம் பேர் பாதிப்பு
Page 1 of 1

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கடும் மழைகாரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தினால் மாவட்டத்தின் 75 வீதமான பிரதேசம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் 07லட்சம் பேர்வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த 7927 குடும்பங்களைச் சேரந்த 31112 பேர் 103 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுளிலும் பெருமளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பெருந்தொகையான மக்கள இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் வீடுகளிலும் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகளில் கிராம சேவையாளர்களும் பொது அமைப்புகளும் செய்து வருகின்றன.
நேற்றுக்காலை முதல் இன்று காலை வரை 312 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் மேலும் தொடர்ந்து சில தினங்களுக்கு மழை பெய்யக் கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த காலத்தில் இலங்கையில் மிக கூடியளவு மழை வீழ்ச்சி இதுவெனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
தொடர்ந்தும் மழை பெய்து வருவதனாலும் வெள்ளம் வீதிகளினை மூடியுள்ளதாலும் பிரதேசச செயலாளர்கள் அதிகாரிகள் கூட சில பிரதேசங்களுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதுடன் பல பிரதேசங்களிலிருந்து வெளியில் வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கிழக்குப் பிரதேசத்திலிருந்து அங்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்த தகவல்கள் கிடைத்த போதும் ஏனைய பகுதிகளிலிருந்து விபரங்கள் கிடைக்கப் பெறுவதில் சிக்கல் உள்ளதாக மாவட்ட செலகம் தெரிவித்தது.
குறிப்பாக படுவான்கரையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதன் காரணமாக அப்பகுதியுடன் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் விபரங்களை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமம் எதிர்நோக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதிகள் பிரதேசங்களில் உடைந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உன்னிச்சைக் குளத்தின் 3 வான் கதவுகளும் திறந்துவிடப்பட்டுள்ள போதும் அணைக்கட்டின் மேலாக 3 அடிக்கு மேல் நீர் பாய்வதாக பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை நவகிரி குளத்தின் கதவுகள் யாவும் திறந்து விடப்பட்டுள்ளன. அப்பிரதேசத்துக்குச் செல்ல முடியாதளவுக்கு பிரதேசம் நீரால் மூடப்பட்டுள்ளதாகவும் பொறியியலாளர்கள் தெரிவித்தனர். அதே போன்று உறுகாமம் குளத்தின் நீர் மட்டமும் மேலதிகமாகியுள்ளது.
வீதிகளில் மட்டக்களப்பு- கல்முனை பிரதான நெடுஞ்சாலையில் குருக்கள்மடத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் உடைவு ஏற்பட்டதால் நேற்று பிற்பகல் வரை போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது. பின்னர் அவ்வீதி தற்காலிகமாக வீதிப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் திருத்தப்பட்டது.
அதேவேளை படுவான்கரைக்கான பட்டிருப்பு வீதி ஓந்தாச்சிமடம் - மகிழுர் வீதி அம்பிளாந்துறை - குருக்கள் மடம் வீதி என்பன பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட வலையறவு பாலம் நீரில் மூழ்கியுள்ளதனால் வவுணதீவு- மணல்பிட்டி வீதி ஆயித்தியமலை- கரடியனாறு வீதி வவுணதீவு- கரவெட்டி வீதி வவுணதீவு மணல்பிட்டிவீதி பன்சேனை பிரதேசங்களுக்கான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதனால் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக படுவான்கரை பிரதேசத்துக்கான அனைத்து பாதைகளும் தடைப்பட்டுள்ளன.
இதே வேளை வாழைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மயிலங்கரச்சி நாசிவன்தீவு வீதி நீரில் மூழ்கியுள்ளதனால் அக்கிராமத்துக்கான போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கிராம மக்கள் இன்று பகல் வரை உணவுகள் எதுவும் வினியோகிக்கப்படாத நிலையில் இருந்தனர்.
மதுறு ஓயா குளம் திந்து விடப்பட்டுள்ளதனால் கிரான் பிரதேச செயலகப்பிரிவில் கிரான் உட்பட பல பிரதேசங்களில் பெருந்தொகையான மக்கள் இடம்பெயர்ந்தனர். அவர்கள் பாடசாலைகளில் தங்கவைக்கப்பட:டுள்ளனர். அதேவேளை கிரான் பாலம் ஊடாக நீர் அதிகளவில் பாய்வதால் அவ்வீதியு}டான போக்குவரத்தும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதேசத்தின் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாகரைப்பிரதேசத்தின் தோணிதாட்டமடு கிரிமிச்சை மதுரங்கேணிக்குளம் பனிச்சங்கேணி உள்ளிட்ட பகுதிகளுடன் பெரும்பாலான பகுதிகள் நீதில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்துக்களும் துண்டிக்கப்பட:டுள்ளன. அதனால் பனிச்சங்கேணி ஆற்றின் ஊடாக போக்குவரத்தக்கு இயந்திரப்படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
தொப்பிக்கல ஈரளக்குளம் முறத்தானை சித்தாண்டி சந்திவெளி களுவனகேணி பிரம்படித்தீவு பொண்டுகள்சேனை முறாவொடை வாழைச்சேனை கல்மடு கல்குடா கும்புறுமூலை வெம்பு சுங்காங்கேணி கிண்ணையடி உள்ளிட்ட பிரதேசங்கள் முழுதாக நீரில் மூழ்கியுள்ளன.
பிரதேசங்களில் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் அனைவருக்கும் சமைத்த உணவுகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த நிவாரண அவசரக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதுடன். பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
சமைத்த உணவு வழங்குவதில் முகாம்களில் மக்கள் தங்கியுள்ள இடங்களனில் சமைப்பதற்குக் கூட இடம் இல்லாத நிலையினால் வேறு இடங்களில் உணவுகள் சமைக்கப்பட்டு வருகின்றன.
அரசாங்க அதிபரின் பணிப்புரையின் கீழ் மிக விரைவாக சமைக்கக் கூடிய உணவுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் இதனால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலதி அரசாங்க அதிபர் கே.விமலநாதன் nதிவித்தார்.
ஒரு காராமத்தைச் சென்று பார்த்து மறுகிராமத்தக்குக் செல்லமுடியாதளவுக்கு நீரில் மூழ்கியுள்ள சில கிராமங்கள் உள்ளதாகவும் அவற்றிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மேலதிக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
களுவாஞ்சிகுடி கொக்கட்டிச்சோலை வந்தாறுமூலை சித்தாணடி செங்கலடி ஐயங்கேணி முறக்கொட்டாஞ்சேனை பலாச்சோலை உள்ளிட்ட பிரNதுசங்களில் அதிகமான தமக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதனால் அப்பிரதேசங்களில் குடிநீர்த்தட்டுப்பாடு ஏற்படும் எனவே குடிநீர்வினியோகம் செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதுடன் நோய் பரவம் அபாயம் உள்ளதனால் நோய்த்தடுப:பு முன்னெச்சரிக்கை வேலைகளில் ஈடுபடுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
இன்று மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அனர்த்த நிவாரண அவசரக் கூட்டத்தில் பிரதி அமைச்சர்களான வி.முரளிதரன் ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன். ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா யோகேஸ்வரன் ஆகியோருடன் மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு நகரின் பல பகுதிகளும் நேற்றைய வெள்ளத்தில் மூழ்கியிருந்தன. அதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டதுடன் வர்த்க நிலையங்களும் மூடப்பட்டு இருந்தன.
நேற்று ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் ஸ்தம்பிதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Similar topics
» அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் பலி, 23 பேர் காயம்
» ஜனாதிபதியின் மாவட்டத்தின் வீரவிலவில் அடிவாங்கிய ஆளும்கட்சி
» மட்டக்களப்பு மக்கள் எங்களுக்கு வாக்களிக்கவில்லை: அமைச்சர் பசில் ராஜபக்ஷ
» மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள் - பா.உ. சீ.யோகேஸ்வரன்
» மட்டக்களப்பில் அடைமழை – 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum