அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

இலங்கை-இந்தியக் கடல் நடுவே தொழில்நுட்ப அலையினால் எல்லைக்கோடு

Go down

இலங்கை-இந்தியக் கடல் நடுவே தொழில்நுட்ப அலையினால் எல்லைக்கோடு  Empty இலங்கை-இந்தியக் கடல் நடுவே தொழில்நுட்ப அலையினால் எல்லைக்கோடு

Post by kaavalan Fri Feb 25, 2011 1:53 am

இலங்கை-இந்தியக் கடல் நடுவே தொழில்நுட்ப அலையின் உதவியின் சமிக்ஞை முறையிலான எல்லைக்கோடொன்றை அமைப்பது குறித்து இரு நாட்டு அரசாங்கங்களும் ஆலோசித்து வருகின்றன.
இந்திய மீனவர்கள் கடலில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மட்டுப்படுத்துவது குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கவென நியமிக்கப்பட்ட குழுவினர் இந்திய அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் மேற்கண்ட ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் இந்திய மீனவர்கள் தமது நாட்டின் கடல் எல்லையைத் தாண்டும் போது அவர்களுக்கு ஒரு சமிக்ஞை விடுக்கப்படும். அவர்களிடம் மொபைல் போன் இருக்கும் பட்சத்தில் ஒரு அழைப்பு அல்லது குறுஞ்செய்தி மூலம் அவர்கள் தமது நாட்டின் கடல் எல்லையைத் தாண்டியிருப்பது குறித்து அறிவுறுத்தப்படும்.

அவ்வாறான தொழில்நுட்ப முறையில் இந்திய மீனவர்கள் இனி வரும் காலங்களில் இலங்கையின் கடற்பரப்புக்குள் தவறியேனும் நுழைவது தடுக்கப்படும். அதற்கான தொழில்நுட்பம் கொண்ட சமிக்ஞை அலை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி பிரதேசங்களுக்கிடையிலான கடலில் நிலைநிறுத்தப்படும்.

உத்தேச நடைமுறை அமுலுக்கு வரும் பட்சத்தில் இந்திய மீனவர்களின் பிரச்சினைகளுக்குப் பெரும்பாலும் முடிவுக்கு வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
kaavalan
kaavalan
முக்கிய பிரமுகர்
முக்கிய பிரமுகர்


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை இந்திய கடல் எல்லையில் மின்சாரவேலி - இந்திய மீனவர்கள் இலங்கை வருகை
» இலங்கை அரசாங்கத்தின் பிடிவாதக்கொள்கையில் மாற்றம்! ஐ.நா. நிபுணர் குழு அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவுள்ளது
» இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயற்படாது - இலங்கை அரசாங்கம்
» யாழ் கடல் எல்லையில் மேலும் 24 இந்திய மீனவர்கள் கைது
» இந்தியக் கடற்படை இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசிப்பதாக கூறப்படுவது தவறானது: கடற்படைப் பேச்சாளர்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum