லண்டனையும் கொழும்பைப் போன்று நினைத்து செயற்படக் கூடாது: ஐ.தே.க
Page 1 of 1

லண்டனையும் கொழும்பைப் போன்று நினைத்து செயற்படக் கூடாது எனவும், பிரித்தானிய நாட்டின் நீதிமன்ற விவகாரங்களில் இலங்கையில் போன்று அரசாங்கத்தினால் தலையீடு செய்ய முடியாதெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்
அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் லண்டன் விஜயம் உரிய முறையில் திட்டமிடப்படாது மேற்கொள்ளப்பட்டுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
ஜனாதிபதி லண்டனுக்கு விஜயம் செய்தால் நெருக்கடியான நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்டட நிலையில், வெளிவிவகார அமைச்சு இது குறித்து கவனம் செலுத்த தவறியதாக அவர் தெரிவித்துள்ளார்.
லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி லண்டன் கிளைத் தலைவர் ஆகியோர் இந்த விஜயம் குறித்து எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், யார் இந்த விஜயத்தை ஒழுங்கு செய்ததென அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெற்றுக் கொள்ளப்ட உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விஜயம் ஒழுங்கு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் சூழ்நிலையில் யார்? ஜனாதிபதியை நெருக்கடியான நிலைக்கு இட்டுச் சென்றதென அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதன் பின்னணியில் ஆளும் கட்சிக்குள் ஏதேனும் சூழ்ச்சித் திட்டங்கள் காணப்படுகின்றனவா என ஆராயப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து முரண்பாடு காணப்பட்டாலும் ஜனாதிபதி இந்த நாட்டின் அனைத்து மக்களுக்குமே ஜனாதிபதி எனவும், அவரை பாதுகாக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டனையும் கொழும்பைப் போன்று நினைத்து செயற்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். அந்த நாட்டின் நீதிமன்ற விவகாரங்களில் இலங்கையில் போன்று அரசாங்கத்தினால் தலையீடு செய்ய முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி லண்டனுக்கு விஜயம் செய்வதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் லண்டனுக்கு விஜயம் செய்ததாகவும், இதனை விடவும் முன் எச்சரிக்கையாக செயற்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அழுத்தங்கள் ஏற்படும் என்பதனை அறிந்திருந்த போதிலும் ஜனாதிபதி துணிச்சலுடன் லண்ட்ன் விஜயத்தை மேற்கொண்டதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் என்ன நடந்தது என்று வெளிநாடுகளில் கேட்கும்போது அதற்குக் கற்றறிந்த பாடங்கள் மற்றும் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு விசாரிப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் குறித்த ஆணைக்குழுவுக்கு அதுபற்றி விசாரிப்பதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதா என்றால் இல்லை.
சர்வதேச நாடுகளின் மத்தியில் இலங்கை மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் இருக்கின்ற நிலையில் அதற்கு உரிய வகையில் பதிலளிப்பதற்கு தவறியுள்ள அரசாங்கம் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இங்கு எந்தவிதமான குற்றங்களுமே இழைக்கப்படவில்லை எனக் கூறிக் கொண்டிருக்க முடியும் என்றும் அவர் கேள்வி யெழுப்பினார்.
சர்வதேசத்துக்கும் எமக்குமிடையிலான உறவினைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு சர்வதேச சமூகத்துடன் புந்துணர்வுடனான உறவுகளைப் பேணுவதற்கு ஏற்ற வகையில் செயற்பாடுகள் அமைய வேண்டும்.
அந்த வகையில் சர்வதேச சமூகத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அதனடிப்படையில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காண்பதற்கு முன்வர வேண்டும்.
அதுமட்டுமல்லாது அந்த மக்களுக்கு நேர்மையானதொரு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அதிகாரப் பரவலாக்கலை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு அரசு நியாயமாக நடந்து கொள்ளுமானால் ஐக்கிய தேசியக் கட்சி அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றது. தமிழ் மக்கள் விடயத்தில் 13 ஆவது திருத்தத்திற்கும் அப்பால் சென்று அதிகாரங்களை வழங்கித் தீர்வு காணப் போவதாக அறிவித்த ஜனாதிபதி தற்போது அதில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களில் சிக்கல்கள் நிலவுவதாகக் கூறுகிறார்.என்றார்.

Similar topics
» சூழ்ச்சி செய்யும் கேரளாவுடன் பேச்சுவார்த்தை கூடாது:வைகோ
» எகிப்தைப் போன்று இலங்கையிலும் ஆர்ப்பாட்டம் நடாத்த முயன்றால் என் கைத்துப்பாக்கிதான் பதில் சொல்லும்: அமைச்சர் மோ்வின் சில்வா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum