சூழ்ச்சி செய்யும் கேரளாவுடன் பேச்சுவார்த்தை கூடாது:வைகோ
Page 1 of 1

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கேரள முதல்வர் உம்மன் சாண்டி அழைப்பது வஞ்சகமான சூழ்ச்சி என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
கேரள முதல்வர் உம்மன்சாண்டி முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக தமிழக அரசு மற்றும் விவசாயிகள், வைகோ ஆகியோரோடு பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று கூறியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இது கேரள அரசின் வஞ்சகமான சூழ்ச்சித் திட்டமாகும். இதுபோல் பேசப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் பயனற்றே போயின. எனவே கேரள முதல்வரோடு பேச்சுவார்த்தை கூடாது. புதிய அணை கட்ட மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தமிழகத்துக்கு உரிமையுள்ள பென்னி குயிக் அணையை உடைப்பதற்கு கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும் சதித் திட்டம் தீட்டி வருவதால் தமிழக அரசும், மக்களும் மிகவும் விழிப்புடன் இருந்து தென் தமிழ்நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Similar topics
» லண்டனையும் கொழும்பைப் போன்று நினைத்து செயற்படக் கூடாது: ஐ.தே.க
» பிரபாகரன் மறைவாக இருக்கிறார்; விரைவில் வெளியில் வருவார்:வைகோ
» தமிழ் கூட்டமைப்புடனான 3ம் சுற்று பேச்சுவார்த்தை பிற்போடப்பட்டது! - காலத்தை இழுத்தடிப்பதற்கு அரசாங்கம் முயற்சி! நடைபெறும் என்கிறார் மாவை எம்.பி.
» ஈழத்துரோகிகளை அடையாளம் காணவேண்டும் - வைகோ கோரிக்கை
» த. தே கூட்டமைப்புடனேயே இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும். - த.தே.ம முன்னணி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum