அலையின் கருத்துக்களம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

யாழ். மீசாலையில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாயும், மகனும் வெள்ளைவானில் கடத்தல்

Go down

யாழ். மீசாலையில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாயும், மகனும் வெள்ளைவானில் கடத்தல் Empty யாழ். மீசாலையில் குடும்பப் பிரச்சனை காரணமாக தாயும், மகனும் வெள்ளைவானில் கடத்தல்

Post by rajeshwary Mon Mar 07, 2011 10:14 am

யாழ். தென்மராட்சி பிரதேசத்தின், மீசாலை கிழக்கு பகுதியில் நேற்று தாயொருவரும், மகனும் வெள்ளைவானில் கடத்தப்பட்டுள்ளனர். இதனால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. சம்பவத்தையடுத்து செயலில் இறங்கிய பொலிஸார் சம்பந்தப்பட்ட வெள்ளை வானை மடக்கிப் பிடித்தனர்.இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது:-

சம்பவத்தில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 38 வயதுடைய பெண் ஒருவர் கணவனைப் பிரிந்து, மீசாலை கிழக்கிலுள்ள உறவினர்களுடன் வசித்து வந்துள்ளார். நேற்று அவர்களது வீட்டுக்கு வேறு ஆட்களுடன் வானொன்றில் வந்த அப் பெண்ணின் கணவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார். அவ் வேளையில் வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிடவே வாகனத்தில் வந்தவர்கள் மகனையும் தாயையும் இழுத்துச்சென்று வானில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து தப்பியதாக அயலவர்கள் தெரிவித்தனர்.

அயலவர்களின் தகவலையடுத்து பொலிஸாரும், படையினருமாக தேடுதல் நடிவடிக்கையில் இறங்கினர். சாவகச்சேரி புறநகர்ப் பகுதியில் சம்பந்தப்பட்ட வான் மடக்கிப் பிடிக்கப்பட்டு, வானினுள் இருந்த தந்தையும், வாகனச் சாரதியும் வேறொரு பெண்ணும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், வாகனத்துக்குள் இருந்து சம்பந்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டுள்ள போதும், கடத்தப்பட்ட பெண் காணாமற் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் சுயாதீன செய்தி வட்டாரங்கள் எதுவும் இதனை உறுதிசெய்யவில்லை.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் தகவல் தருகையில், பரபரப்புக்குரிய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை. இது வெள்ளைவான் கடத்தல் இல்லை. ஒரு தனிப்பட்ட குடும்பப் பிரச்சினை என்று தெரிவித்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு

மீசாலை கிழக்கில் தாயும், மகனும் கடத்தப்பட்ட சம்பவம் கடத்தல் அல்ல என மறுத்துள்ள பொலிஸார் குடாநாட்டில் உள்ள பத்திரிகை நிறுவனங்கள் சிலவற்றிற்குச் சென்ற பொலிஸார் செய்திகளை திரிவுபடுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

மீசாலை கிழக்கில் நேற்று மாலை 2 மணியளில் வெள்ளை நிற வாகனத்தில் வந்த சிலரால் வீட்டிலிருந்த தாயும் மகனும் கடத்திச் செல்லப்பட்டனர். கடத்தல்காரர்கள் தம்மை யாரும் அடையாளம் காணாத வகையில் முகத்தை மறைத்திருந்தனர்.

மேலும் கடத்தலின் போது சம்பவ இடத்தில் நின்ற சிலர் கடத்தல்காரர்களால் சைக்கிள் செயின் மூலம் கடுமையாகத் தாக்கப்பட்டும் உள்ளனர். எனினும் இந்த சம்பவம் ஒரு கடத்தல் அல்;ல என கூறியுள்ள பொலிஸார் இது தொடர்பான செய்தியை திரிவுபடுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

இதற்காக குடாநாட்டிலுள்ள பத்திரிகை நிறுவனங்களுக்கு மிரட்டும் பாணியில் சுமார் 20 வரையான பொலிஸார் சென்றிருந்ததோடு செய்தி எவ்வகையிலும் திரிவு படுத்தப்படக் கூடாதெனவும் கேட்டுள்ளனர்.

மேலும் குற்றவாளிகளை தாம் கைது செய்ததுடன் கடத்தப்பட்டவர்களை தாம் காப்பாற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார் கடத்தப்பட்டவர்கள் மற்றும் கடத்தியவர்களின் கைது தொடர்பான தகவல்களை வெளியிட மறுத்து விட்டனர்.

இதனால் இந்த சம்பவம் தொடர்பான செய்திகளை குடாநாட்டுப் பத்திரிகைகள் சில அடக்கியே வாசித்துள்ளன.


rajeshwary
rajeshwary
மட்டுறுத்துனர்
மட்டுறுத்துனர்


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum